siruppiddy

18

siruppiddy

unkal

unkal

வியாழன், 21 மே, 2026

: யாழில் இளம் குடும்பப் பெண் குடும்பத் தகராறு முற்றிய நிலையில் தற்கொலை

யாழில்  சீதனக் கொடுமை காரணமாக நிலவிய குடும்பத் தகராறு முற்றிய நிலையில், இளம் குடும்பப் பெண் ஒருவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட சோகமான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

யாழ்ப்பாணம் பகுதியைச் சேர்ந்த குறித்த பெண்ணுக்குத் திருமணமாகிச் சில காலமே ஆகியுள்ளது. திருமணத்தின் போது வழங்கப்பட்ட சீதனம் போதாது என்றும், மேலதிகமாகச் சொத்துக்கள் மற்றும் நகை வேண்டுமென்றும் கணவர் வீட்டார் தரப்பில் இருந்து தொடர்ந்து அழுத்தங்கள் கொடுக்கப்பட்டு வந்ததாகத் தெரியவருகிறது.
இந்தச் சீதன விவகாரம் தொடர்பாகத் தம்பதியினரிடையே அடிக்கடி வாக்குவாதங்கள் ஏற்பட்டு வந்துள்ளன. நேற்று வீட்டின் அறையொன்றில் குறித்த பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட நிலையில் சடலமாகக் மீட்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணப் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். 
உயிரிழந்த பெண்ணின் மரணத்தில் சீதனக் கொடுமையின் பின்னணி குறித்து உறவினர்கள் வாக்குமூலம் அளித்துள்ளனர். இதன்பிரகாரம் கணவர் மற்றும் அவரது குடும்பத்தாரிடம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.என்பதும்  குறிப்பிடத்தக்கது.

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html


புதன், 20 மே, 2026

நாட்டில் மோட்டார் சைக்கிள் விபத்தில் பாடசாலை மாணவன் பலி

நாட்டில் மூதூர் பொலிஸ் பிரிவிலுள்ள 64 ஆம் கட்டைப் பகுதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். திருகோணமலை -மட்டக்களப்பு பிரதான வீதியில்  இவ் விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இதில் மூதூர் -ஆணைச்சேனை பகுதியை சேர்ந்த 19 வயது றிஸ்வான் சிப்கி எனும் பாடசாலை மாணவன் உயிரிழந்துள்ளதுடன் அவருடன் மோட்டார் சைக்கிளில் பயணித்த மற்றுமொருவர் இளைஞரும்
 காயமடைந்துள்ளார்.
விபத்து தொடர்பில் மேலும் தெரியவருவதாவது – மோட்டார் சைக்கிளில் 2 இளைஞர்களும் தோப்பூரிலுள்ள உணவகம் ஒன்றுக்கு சென்று , மீண்டும் மூதூருக்கு வரும் வழியில் மோட்டார் சைக்கிள் வேகக் கட்டுப்பாட்டை இழந்து பாதையை விட்டு விளகி இவ் விபத்துச் சம்பவம் இடம்பெற்றதாக தெரியவருகிறது.
விபத்தில் உயிரிழந்த இளைஞனின் ஜனாஸா மூதூர் தள வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன் காயமடைந்த இளைஞனும் அதே வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை 
பெற்று வருகிறார்.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை மூதூர் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.என்பதும்  குறிப்பிடத்தக்கது.

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html


செவ்வாய், 19 மே, 2026

நாட்டில் இடி, மின்னல் அபாயம்: நாட்டின் நான்கு மாவட்டங்களுக்கு ‘சிவப்பு எச்சரிக்கை’

நாட்டில்  ஊவா மாகாணம் மற்றும் மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களில் இன்று (19) கடுமையான மின்னல் அபாயம் நிலவக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அவசர எச்சரிக்கை 
விடுத்துள்ளது.
இன்று இரவு 11.30 மணி வரை செல்லுபடியாகும் வகையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதன்படி, நாட்டின் 4 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கையும் (Red Alert), 8 மாவட்டங்களுக்கு செம்மஞ்சள் எச்சரிக்கையும் (Amber Alert) விடுக்கப்பட்டுள்ளன.
மழை மற்றும் பலத்த காற்று: இன்று பிற்பகல் 2.00 மணிக்கு பின்னர் நாட்டின் சில இடங்களில் கடுமையான மின்னல் மற்றும் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது. 
இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் தற்காலிகமாக அப்பகுதிகளில் பலத்த காற்று வீசக்கூடும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது. மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய உயிர் மற்றும் உடமைச் சேதங்களைக் குறைத்துக் கொள்வதற்காக, பொதுமக்கள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
திறந்தவெளிகளைத் தவிர்க்கவும்: இடி, மின்னல் நிலவும் போது வயல்வெளிகள், விளையாட்டு மைதானங்கள் மற்றும் திறந்தவெளிகளில் தங்குவதைத் முற்றாகத் தவிர்க்கவும்.
மரங்களின் கீழ், தற்காலிகக் கொட்டகைகள் அல்லது மின் கம்பங்களுக்கு அருகில் நிற்காமல், பாதுகாப்பான கட்டிடங்கள் அல்லது மூடிய வாகனங்களுக்குள் தஞ்சமடையவும். வீடுகளிலுள்ள தொலைக்காட்சி, கணினி உள்ளிட்ட மின்சார உபகரணங்களின் இணைப்புகளைத் (Plugs) துண்டித்து வைக்கவும். 
லேண்ட்லைன் தொலைபேசிப் பயன்பாட்டைத் தவிர்க்கவும். சைக்கிள், உந்துருளி (Motorbike) மற்றும் டிராக்டர்கள் போன்ற திறந்த வாகனங்களில் பயணிப்பதைத் தவிர்த்துக்கொள்ளவும்.
 என்பதும்  குறிப்பிடத்தக்கது.

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html


திங்கள், 18 மே, 2026

யாழ் வல்வெட்டித்துறையில் நீச்சல் தடாகத்தில் மூழ்கி சிறுவன் மரணம்

யாழ்  வல்வெட்டித்துறை பகுதியில் உள்ள நீச்சல் தடாகம் ஒன்றில் நீந்திக் கொண்டிருந்தபோது நீரில் மூழ்கி 13 வயதுடைய சிறுவன் ஒருவன் பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக வல்வெட்டித்துறை பொலிஸார்
 தெரிவித்துள்ளனர்.
நேற்று (17) இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில், புலோலி மேற்குப் பகுதியைச் சேர்ந்த 13 வயதுடைய சிறுவனே இவ்வாறு
 உயிரிழந்துள்ளார். 
குறித்த சிறுவன் வல்வெட்டித்துறையில் உள்ள நீச்சல் தடாகத்தில் நீந்திக் கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக நீரில் மூழ்கியுள்ளார்.
உடனடியாக அவர் மீட்கப்பட்ட போதிலும், ஏற்கனவே அவர் உயிரிழந்துவிட்டதாகக் கூறப்படுகிறது. இந்தக் கொடூரச் ச
ம்பவம் தொடர்பாக வல்வெட்டித்துறை பொலிஸார் வழக்குப்பதிவு செய்து, மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். 
இச்சம்பவம் புலோலி மற்றும் வல்வெட்டித்துறை பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html


ஞாயிறு, 17 மே, 2026

யாழில் சுவிசில் இருந்து விடுமுறையில் வந்தவர் முகமூடி கொள்ளையர்களால் கொலை

இலங்கைக்கு சுவிஸ் நாட்டில் இருந்து யாழ் வந்தவரை படுகொலை செய்து , நகைகள் பணம் என்பவற்றை முகமூடி கொள்ளை
 கும்பல் ஒன்று கொள்ளையடித்து சென்றுள்ளது. 
மானிப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட சண்டிலிப்பாய் பகுதியை சேர்ந்த வல்லிபுரம் சந்திரசேகரம் (வயது 67) என்பவரே படுகொலை செய்யப்பட்டுள்ளார்.என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html


நாட்டில் .மின்சாரம் தாக்கியதில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இலங்கையில்  கொட்டாவஹெராவில் மின்சாரம் தாக்கி பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். 
உயிரிழந்தவர், பாலுகொல்லவின் கல்கமுவ பகுதியைச் சேர்ந்த 69 வயதுப் பெண் ஆவார். 
 நீர் மோட்டாருக்கு மின்சாரம் வழங்கும் கம்பியில் ஏற்பட்ட மின்கசிவின் காரணமாக அப்பெண் மின்சாரம் தாக்கி உயிரிழந்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. 
 இந்தச் சம்பவம் குறித்து கொட்டாவஹெரா காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html



சனி, 16 மே, 2026

இலங்கை ஹோமகமவில் கிணறு ஒன்றில் இருந்து இராணுவ வீரரின் சடலம் மீட்பு

இலங்கை ஹோமகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிட்டிபான தெற்குப் பகுதியில் உள்ள ஒரு நெல் வயலுக்கு அருகில் அமைந்துள்ள கிணற்றில் இருந்து பொலிஸ் ஒரு உடலை மீட்டுள்ளது.
ஹோமகம பொலிஸ் நிலையத்திற்கு கிடைத்த புகாரின் அடிப்படையில் தொடங்கப்பட்ட விசாரணையின் போது இந்த கண்டுபிடிப்பு 
இடப்பெற்றுள்ளது.
இறந்தவர், மொரொந்துடுவவின் மஹாலந்த பகுதியில் வசித்து வந்த 43 வயதான இலங்கை இராணுவ வீரர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html



வெள்ளி, 15 மே, 2026

நாட்டில் காட்டுயானைத் தாக்குதல் தந்தை, மகள் பலி

 நாட்டில் வில்கமுவ, ஹெட்டிபொல பகுதியில் காட்டு யானை தாக்கியதில் தந்தை மற்றும் மகள் ஆகியோர் 
உயிரிழந்துள்ளனர். 
இருவரும் 15-05-2026.இன்று காலை  துவிச்சக்கர வண்டியில் சென்று கொண்டிருந்த போது, காட்டு யானை தாக்குதலுக்கு 
உள்ளாகியுள்ளனர். 
 இச்சம்பவத்தில் 56 வயதுடைய தந்தை மற்றும் அவரது 25 வயதுடைய மகள் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்
. என்பதும்  குறிப்பிடத்தக்கது.

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html


வியாழன், 14 மே, 2026

மூன்று பெண்களின் உடல்கள் பிரித்தானியாவில் கடற்பகுதியில் இருந்து மீட்பு

இன்று .பிரித்தானியாவின் பிரைட்டன் கடற்பகுதியில் இருந்து மூன்று பெண்களின் உடல்கள் மீட்கப்பட்டன.
மடீரா டிரைவ் அருகே ஆற்றில் இருந்து உடல்கள் மீட்கப்பட்டதை சசெக்ஸ் காவல்துறை உறுதிப்படுத்தியதுடன் தலைமை கண்காணிப்பாளர் ஆடம் ஹேய்ஸ் இதனை ஒரு “சோகமான சம்பவம்” 
என விவரித்தார்.
பெண்களின் அடையாளங்களை உறுதிப்படுத்தவும் என்ன நடந்தது என்பதன் சரியான சூழ்நிலைகளைப் புரிந்துகொள்ளவும் சிசிடிவி பகுப்பாய்வு உட்பட விரைவான விசாரணைகள் தற்போது நடைபெற்று
 வருகின்றன.
அவசர சேவைகள் தங்கள் பணியைத் தொடரும் வரை, பொதுமக்கள் சம்பவ இடத்திலிருந்து விலகி இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
 என்பதும்  குறிப்பிடத்தக்கது.

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html


புதன், 13 மே, 2026

நாட்டில் கொழும்பு கதிர்காமம் வீதியில் பேருந்துகள் மோதி விபத்து:

நாட்டில்  கொழும்பு - கதிர்காமம் பிரதான வீதியில் இன்று இரண்டு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன.
இந்த விபத்தில் பேருந்துகளில் பயணித்த பயணிகள் பலர் காயமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
 காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்து காரணமாக அந்த வீதியூடான போக்குவரத்து சிறிது நேரம் பாதிக்கப்பட்டதுடன், மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர். என்பதும்  குறிப்பிடத்தக்கது.

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html

செவ்வாய், 12 மே, 2026

நாட்டில் தங்கெதர பகுதியில் காரில் வந்த கும்பல் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி

நாட்டில் காலி, தங்கெதர பகுதி (டிக்ஸன் சந்திக்கு அருகில்). இன்று காலை சுமார் 7.30 மணியளவில். சொகுசு காரில் வந்த இனந்தெரியாத நபர்கள், மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்த நபரை நோக்கி T-56 ரகத் துப்பாக்கியால் சரமாரியாகச் சுட்டுள்ளனர்.
துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்த 44 வயதுடைய நபர், கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
காலி பகுதியில் அண்மைக்காலமாக பாதாள உலகக் குழுக்களின் மோதல்கள் அதிகரித்து வருகின்றன. சில தினங்களுக்கு முன்புதான் காலி சிறைச்சாலையிலிருந்து தப்ப முயன்ற கைதிகள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட சம்பவமும் பதிவாகியிருந்தது.
இன்றைய சம்பவத்தில் பயன்படுத்தப்பட்ட ஆயுதம் மற்றும் தாக்குதல் நடத்தப்பட்ட விதம் ஆகியவற்றைக் கொண்டு, இது திட்டமிடப்பட்ட ஒரு பழிவாங்கல் கொலையாக இருக்கலாம் என பொலிஸார் 
சந்தேகிக்கின்றனர்.
காலி பொலிஸார் அந்தப் பகுதியில் உள்ள CCTV காட்சிகளைச் சேகரித்து வருவதுடன், தப்பிச் சென்ற சொகுசு காரைக் கண்டறிய விசேட விசாரணைக் குழுக்களை நியமித்துள்ளனர். என்பதும்  குறிப்பிடத்தக்கதாகும் 

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html

நாட்டில் மாமண்டல பகுதியில் சிலையில் தொங்கிய நிலையில் துண்டிக்கப்பட்ட தலை மீட்பு

நாட்டில் அம்பலாங்கொடை, மாமண்டல பகுதியில் உள்ள சிலை ஒன்றில் மனிதத் தலை ஒன்று தொங்கவிடப்பட்டிருந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

சம்பவம் குறித்து தெரியவருவதாவது, இன்று காலை மாமண்டல சந்திப்பிற்கு அருகில் உள்ள சிலை ஒன்றில், கழுத்து வெட்டப்பட்ட நிலையில் மனிதத் தலை ஒன்று தொங்கவிடப்பட்டிருப்பதை வழிப்போக்கர்கள் கண்டுள்ளனர். இது குறித்து உடனடியாக பொலிசாருக்குத் தகவல் 
வழங்கப்பட்டது. 
சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிசார், சிலையில் தொங்கவிடப்பட்டிருந்த தலையை மீட்டுள்ளனர். உயிரிழந்தவர் யார்? எந்தப் பகுதியைச் சேர்ந்தவர்? என்ற விபரங்கள் இதுவரை கண்டறியப்படவில்லை.
தனிப்பட்ட பகை காரணமாகவோ அல்லது பாதாள உலகக் குழுக்களின் எச்சரிக்கையாகவோ இந்தச் கொடூரச் செயல் அரங்கேற்றப்பட்டிருக்கலாம் என பொலிசார் சந்தேகிக்கின்றனர். சம்பவ இடத்திற்கு 
மோப்ப நாய்கள் மற்றும் தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
உயிரிழந்தவரின் உடல் எங்கே உள்ளது என்பது குறித்தும், கொலையாளிகளைக் கண்டறியவும் அம்பலாங்கொடை பொலிசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். 
இச்சம்பவம் காரணமாக மாமண்டல பகுதியில் தற்போது பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.. என்பதும்  குறிப்பிடத்தக்கதாகும் 

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.htm


திங்கள், 11 மே, 2026

நாட்டில் விமான நிலையத்திற்கு சென்ற வேன் ஒன்று தீப்பற்றி எரிந்துள்ளது.

நாட்டில் மட்டக்களப்பு மண்முனை பகுதியில் பயணித்துக்கொண்டிருந்த வேன் ஒன்று 10-05-2026. அன்று இரவு திடீரென தீப்பற்றி 
எரிந்துள்ளது. 
இவ்விபத்தில் எவருக்கும் எந்த விதமான பாதிப்புக்களும் ஏற்படவில்லை என மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவு பொறுப்பதிகாரி
 தெரிவித்தார்.
கொக்கட்டிச்சோலையிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்துக்குச் சென்றுகொண்டிருந்த வேனே இவ்வாறு தீப்பற்றி எரிந்ததாக
 கூறப்படுகிறது. 
சம்பவத்தில் வேன் முற்றாக எரிந்துள்ளதாகவும்,  தடயவியல் பொலிஸ் பிரிவு வரவழைக்கப்பட்டு விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும் குறித்த பொறுப்பதிகாரி தெரிவித்தார். 
 இது தொடர்பான மேலதிக விசாரணைகளில் காத்தான்குடி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர். 
என்பதும்  குறிப்பிடத்தக்கதாகும் 

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html


ஞாயிறு, 10 மே, 2026

மரண அறிவித்தல் அமரர் நவரத்தினம் சிறிதரன் (ஶ்ரீ)

துயர் பகிர்வு-தோற்றம் 00--மறைவு-09-05-2026.
யாழ். ஆவரங்கால் சிவன் வீதியை பிறப்பிடமாகவும், அளவெட்டியை வதிவிடமாகவும்,தற்போது  
சுவிஸ் பெர்ன் (Swiss.Bern )னில்  வாழ்ந்தவருமான. 
அமரர்  நவரத்தினம் சிறிதரன்
( ஓய்வு நிலை Swiss 🇨🇭 Bern தமிழ் பாடசாலை பொறுப்பாளர் ஶ்ரீ)
ANRV பழைய மாணவர் சங்கம் சுவிஸ் கிளை 
செயலாளர் 
    அவர்கள் இன்று 09/05/2026 சனிக்கிழமை  இறைபதம் அடைந்தார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். 
அன்னார்.  காலஞ்சென்ற நவரத்தினம் சிவக்கொழுந்து தம்பதிகளின் பாசமிகு மூத்த மகனும். 
காலஞ்சென்ற சுப்பிரமணியம் சிதம்பரேஸ்வரி தம்பதிகளின் பாசமிகு மூத்த மருமகனும். 
நாகநந்தினியின் அன்புக் கணவரும். 
சுகன்யா, பிரமீனா ஆகியோரின் பாசமிகு தந்தையும். 
நிக்கி யின் அன்பு மாமனாரும். 
செல்வராணி ( ராணி சுவிஸ்) 
காலஞ்சென்ற ஶ்ரீபரன் ( சின்னத்தம்பி) மற்றும் பாலராணி( பாலம்மா இலங்கை) ,
ஶ்ரீபாஸ்கரன் ( கிளியன் சுவிஸ்) 
, உதயராணி ( உதயம் சுவிஸ் )  
பகீதரன் ( பகீர் லண்டன்)
 ஆகியோரின் அன்புச் சகோதரனும்.  
கோணேஸ்வரன், சீதாரட்ணம் , தவக்குகன் , ரோகினி, குணசீலன்,சயரூபி,
சிவவதனி,சிவாஜினி,
உதயகுமாரி,முகுந்தன்,
துளசி ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார். 
.அன்னாரின் இறுதிக் கிரிகை 18.05.2026 திங்கட்கிழமை அன்று மத்தியம் 12:00 மணியளவில் பேர்ண் Bremgarten Friedhof Murtenstrasse 51, 3008 Bern ல் நடைபெற உள்ளது.  பார்வைக்காக. 
Bremgarten Friedhof, Murtenstrasse 51 3008 Bern செவ்வாய் 12.05.2026 இருந்து வியாழன் 14.05.2026 வரை
14:00-19:00 மணி வரை பார்வைக்கு வைக்கப்படும். 
தொடர்புகட்க்கு. 
நந்தினி ( மனைவி)
+41 79 236 98 15
சுகன்யா ( மகள்)
00 41 (0) 79 254 25 68
மீனா ( மகள்)
+41 79 937 14 83
கிளி ( சகோதரன்)
00 41 77 940 64 51
குணா ( மைத்துணர்)
00 41 78 323 46 78
பகீர் ( சகோதரன்)
00447877 661474
ராணி( சகோதரி)
00 41 76 324 96 62
உதயம் ( சகோதரி)
+41 77 905 32 76
பாலம்மா ( சகோதரி)
00 94 (77) 554 3780
முகுந்தன் ( மைத்துணர்)
00447982 915768
தவக்குகன்(மைத்துணர்)
00 94 (77) 669 9687

தகவல்: குடும்பத்தினர்
https://navakkiri.blogspot.com/2026/04/blog-post_21.html


சனி, 9 மே, 2026

இலங்கையில் குழந்தைகளிடையே பரவும் புதிய வைரஸ்; வெளியான தகவல்

நாட்டில் .மாத்தறை - தெனியாய பகுதியில் குழந்தைகளிடம் பரவும் வைரஸ் நோய், மூளைக்காய்ச்சலுடன் தொடர்புடையதாக 
இருக்கலாம் என அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் (GMOA) தெரிவித்துள்ளது.
கடந்த 2–3 வாரங்களில் தெனியாய அடிப்படை மருத்துவமனையில் 45 முதல் 50 குழந்தைகள் காய்ச்சல், தலைவலி போன்ற 
அறிகுறிகளுடன் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
முதற்கட்ட தகவலின்படி, இந்த நோய் அசுத்தமான நீர் மூலம் பரவும் வைரஸ் தொற்றால் ஏற்படக்கூடும் என சுகாதார அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர். மேலும், சுவாசம் மற்றும் நெருங்கிய தொடர்புகள் மூலமாகவும் தொற்று பரவ வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டுள்ளது.
காய்ச்சல், கடுமையான தலைவலி, கழுத்து வலி, வாந்தி, ஒளி பார்த்தால் கண் எரிச்சல், உடல் வலி போன்றவை முக்கிய அறிகுறிகளாக 
காணப்படுகின்றன.
பள்ளிகள், பகல்நேர பராமரிப்பு மையங்கள் மற்றும் தனிப்பயிற்சி வகுப்புகள் போன்ற இடங்களில் குழந்தைகள் அதிகமாக கூடுவதால், அங்கு பரவல் அபாயம் அதிகம் இருக்கலாம் என அதிகாரிகள்
 எச்சரித்துள்ளனர்.
நோயை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன், தற்போது இந்த பரவல் தெனியாய பகுதிக்குள் மட்டுமே காணப்படுவதாகவும், நாட்டின் பிற பகுதிகளில் இதுபோன்ற சம்பவங்கள் இல்லை என்றும்
 தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, பொதுமக்கள் சுத்தமான அல்லது கொதிக்கவைத்த குடிநீரைப் பயன்படுத்தவும், கைகளை முறையாக கழுவவும், சுகாதார பழக்கங்களைப் பின்பற்றவும் சுகாதார அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். 
என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html


வெள்ளி, 8 மே, 2026

இரண்டு பிரிட்டிஷ் நாட்டினர் ஹன்டா வைரஸ் தொற்றால் பாதிப்பு

தெற்கு அட்லாண்டிக் தீவான டிரிஸ்டன் டா குன்ஹாவில், இரண்டு பிரிட்டிஷ் நாட்டினருக்கு ஹன்டா வைரஸ் தொற்று இருப்பது உறுதி
 செய்யப்பட்டுள்ளது.
மேலும் மூன்றாவது நபருக்கு தொற்று இருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாக இங்கிலாந்து சுகாதார பாதுகாப்பு முகமை
 தெரிவித்துள்ளது.
எம்.வி. ஹோண்டியஸ் என்ற சொகுசுக் கப்பலில் உள்ள பிரிட்டிஷ் குடிமக்கள் எவருக்கும் தற்போது அறிகுறிகள் 
எதுவும் இல்லை.
ஸ்பெயினின் டெனெரிஃப் துறைமுகத்தில் கப்பல் நங்கூரமிடும்போது, ​​கப்பலிலிருந்து இறங்கும் பிரிட்டிஷ் நாட்டினருக்கு ஆதரவளிக்க பிரிட்டிஷ் அரசாங்க ஊழியர்கள் அங்கு இருப்பார்கள் என்று சின்ஹுவா செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஏப்ரல் 24 அன்று, தெற்கு அட்லாண்டிக் தீவான செயின்ட் ஹெலினாவில் ஏழு பிரிட்டிஷ் நாட்டினர் கப்பலிலிருந்து இறங்கியதை அந்த முகமை அறிந்திருக்கிறது.
அவர்களில் இருவர் பிரிட்டனுக்குத் திரும்பி, வீட்டில் தங்களைத் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளனர், மேலும் அவர்கள் தொற்றுக்கான அறிகுறிகளைத் தெரிவிக்கவில்லை.
அவர்களில் நால்வர் செயின்ட் ஹெலினாவில் தங்கியுள்ளனர், ஏழாவது நபர் பிரிட்டனுக்கு வெளியே கண்டறியப்பட்டுள்ளார். என்பதும்  குறிப்பிடத்தக்கது.

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html

வியாழன், 7 மே, 2026

ஏற்பட்ட தீ விபத்தில் கனடாவின் கேடினோவில் இருவர் மரணம்

கனடா கியூபெக் நகரின் கேடினோ நகரின் மையப்பகுதியில் உள்ள ஒரு உயரமான கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில், சம்பவ இடத்திலேயே இருவர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டனர். 
ஒரு குடியிருப்பில் சிறிய தீ விபத்து ஏற்பட்டிருப்பதையும், மயக்க நிலையில் இருந்த இருவரைக் கண்டதாகவும் காவல்துறை
 விவரித்தது.
சம்பவ இடத்திலேயே இருவரும் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டதாக காவல்துறை தெரிவித்தது.
34 வயதான ஆண் ஒருவர் தனது 30 வயதான துணைவியைக் கொலை செய்துவிட்டு, பின்னர் அவர்களது குடியிருப்பில் தற்கொலை செய்துகொண்டதாகக் கூறப்படுகிறது.
இந்த மரணங்கள் "கொலை-தற்கொலையுடன் ஒத்துப்போகின்றன" என்று காவல்துறை பிரெஞ்சு மொழி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது..என்பதும்  குறிப்பிடத்தக்கது.

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html


நாட்டில் மட்டக்களப்பில் உரிமை கோரப்படாத சடலங்களால் பரபரப்பு

நாட்டில் .மட்டக்களப்பு வாவியில் நீரில் மூழ்கிய நிலையில், அடையாளம் தெரியாத இரண்டு ஆண்களின் சடலங்கள் .07-05-இன்று வியாழக்கிழமை (07) மாலை மீட்கப்பட்டுள்ளன. உரிமை கோரப்படாத சடலங்களால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு தொற்றியுள்ளது.
மட்டக்களப்பு சின்ன உப்போடை பகுதியில் உள்ள வாவியில், இரண்டு சடலங்கள் மிதந்து கரை ஒதுங்கியிருப்பதை இன்று மாலை அப்பகுதி மக்கள் அவதானித்து தகவல் வழங்கியுள்ளனர்.
அதனைத் தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் மற்றும் தடயவியல் பிரிவு அதிகாரிகளினால் சடலங்கள் மீட்கப்பட்டன. உயிரிழந்தவர்கள் யார்? அவர்கள் எவ்வாறு உயிரிழந்தார்கள்? என்பது குறித்த விபரங்கள் இதுவரை வெளியாகவில்லை.
தற்போது, நீதிமன்ற அனுமதியைப் பெற்று சடலங்களைப் பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் ஒப்படைப்பதற்கான நடவடிக்கைகளை காவல்துறையினர்; முன்னெடுத்து வருகின்றனர். 
சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை மட்டக்களப்பு தலைமையகப் காவல்துறையினர்; மேற்கொண்டு வருகின்றனர்.என்பதும்  குறிப்பிடத்தக்கது.

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html


புதன், 6 மே, 2026

யாழ் புங்குடுதீவில் சொகுசு பேருந்து மோதி இளைஞன் பலி

யாழ் புங்குடுதீவு, வாணர் பாலத்திற்கு அருகே இன்று இடம்பெற்ற கோர விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த 
இளைஞர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். புங்குடுதீவு வாணர் பாலம் பகுதி, மடத்துவெளி கடற்படை முகாமிற்கு அருகாமையில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.
புங்குடுதீவில் இருந்து மோட்டார் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்த இளைஞர் மீது, எதிர் திசையில் வந்த 'ஜெட்விங்' ஹோட்டல் நிறுவனத்திற்குச் சொந்தமான சொகுசுப் பேருந்து பலமாக
 மோதியுள்ளது.
குறித்த பேருந்து மிக அதிவேகமாகப் பயணித்ததே இந்த உயிரிழப்பிற்குக் காரணம் எனத் தெரியவந்துள்ளது. விபத்தில் பலத்த காயமடைந்த இளைஞர் துரதிர்ஷ்டவசமாகச் சம்பவ இடத்திலேயே 
உயிரிழந்தார்.
தற்போது பொலிஸார் விபத்து நடந்த இடத்திற்கு விரைந்து விசாரணைகளை முன்னெடுத்து வருவதுடன், பேருந்து ஓட்டுநரிடம் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்..என்பதும்  குறிப்பிடத்தக்கது.

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html


செவ்வாய், 5 மே, 2026

நள்ளிரவில் யாழில் அதிவேகத்தால் மதிலுடன் மோதிய மோட்டார் சைக்கிள்

யாழ்ப்பாணத்திலிருந்து பருத்தித்துறை நோக்கிப் பயணித்த மோட்டார் சைக்கிள், அதிவேகம் காரணமாகக் கட்டுப்பாட்டை இழந்து வீடொன்றின் மதிலுடன் மோதியுள்ளது.
விபத்தில் சிக்கிய 22 மற்றும் 24 வயதுடைய கரவெட்டி வடக்கைச் சேர்ந்த இரு இளைஞர்களும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்களின் சடலங்கள் தற்போது யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளன. 
கோப்பாய் பொலிஸார் விபத்து குறித்து மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். கோப்பாய் பகுதியில் மோட்டார் சைக்கிள் மதிலுடன் மோதி விபத்துக்குள்ளானதில் கரவெட்டியைச் சேர்ந்த இரு இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர்.
நண்பர்களின் திடீர் மரணம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது என்பதும்  குறிப்பிடத்தக்கது.

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html