யாழில் சீதனக் கொடுமை காரணமாக நிலவிய குடும்பத் தகராறு முற்றிய நிலையில், இளம் குடும்பப் பெண் ஒருவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட சோகமான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
யாழ்ப்பாணம் பகுதியைச் சேர்ந்த குறித்த பெண்ணுக்குத் திருமணமாகிச் சில காலமே ஆகியுள்ளது. திருமணத்தின் போது வழங்கப்பட்ட சீதனம் போதாது என்றும், மேலதிகமாகச் சொத்துக்கள் மற்றும் நகை வேண்டுமென்றும் கணவர் வீட்டார் தரப்பில் இருந்து தொடர்ந்து அழுத்தங்கள் கொடுக்கப்பட்டு வந்ததாகத் தெரியவருகிறது.
இந்தச் சீதன விவகாரம் தொடர்பாகத் தம்பதியினரிடையே அடிக்கடி வாக்குவாதங்கள் ஏற்பட்டு வந்துள்ளன. நேற்று வீட்டின் அறையொன்றில் குறித்த பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட நிலையில் சடலமாகக் மீட்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணப் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
உயிரிழந்த பெண்ணின் மரணத்தில் சீதனக் கொடுமையின் பின்னணி குறித்து உறவினர்கள் வாக்குமூலம் அளித்துள்ளனர். இதன்பிரகாரம் கணவர் மற்றும் அவரது குடும்பத்தாரிடம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.என்பதும் குறிப்பிடத்தக்கது.
https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html








0 கருத்துகள்:
கருத்துரையிடுக