siruppiddy

18

siruppiddy

unkal

unkal

திங்கள், 18 மே, 2026

யாழ் வல்வெட்டித்துறையில் நீச்சல் தடாகத்தில் மூழ்கி சிறுவன் மரணம்

யாழ்  வல்வெட்டித்துறை பகுதியில் உள்ள நீச்சல் தடாகம் ஒன்றில் நீந்திக் கொண்டிருந்தபோது நீரில் மூழ்கி 13 வயதுடைய சிறுவன் ஒருவன் பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக வல்வெட்டித்துறை பொலிஸார்
 தெரிவித்துள்ளனர்.
நேற்று (17) இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில், புலோலி மேற்குப் பகுதியைச் சேர்ந்த 13 வயதுடைய சிறுவனே இவ்வாறு
 உயிரிழந்துள்ளார். 
குறித்த சிறுவன் வல்வெட்டித்துறையில் உள்ள நீச்சல் தடாகத்தில் நீந்திக் கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக நீரில் மூழ்கியுள்ளார்.
உடனடியாக அவர் மீட்கப்பட்ட போதிலும், ஏற்கனவே அவர் உயிரிழந்துவிட்டதாகக் கூறப்படுகிறது. இந்தக் கொடூரச் ச
ம்பவம் தொடர்பாக வல்வெட்டித்துறை பொலிஸார் வழக்குப்பதிவு செய்து, மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். 
இச்சம்பவம் புலோலி மற்றும் வல்வெட்டித்துறை பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html


0 கருத்துகள்:

கருத்துரையிடுக