siruppiddy

18

siruppiddy

unkal

unkal

திங்கள், 21 அக்டோபர், 2013

இரும்புக்கடையில் வெடிப்பு : ஒருவர் படுகாயம்

மாதம்பை சுதுவெல்ல பகுதியிலுள்ள இரும்புக்கடையொன்றில் இன்று திடீரென இடம்பெற்ற வெடிப்புச் சம்பவத்தில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் சிலாபம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பழைய இரும்புப் பொருளொன்றை வெட்டும் போது இவ்வனர்த்தம் பதிவானதாகவும் ஆட்லெறிக்கு பயன்படுத்தப்படும் ஒரு வகை ரவைகள் சில வெடித்ததிலேயே குறித்த வெடிப்புச்சம்பவம் ஏற்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. இந்த வெடிப்புச் சம்பவம் பதிவான இடத்துக்கு அருகில் இரும்பு...

சனி, 19 அக்டோபர், 2013

புகைத்தலினால் நாளாந்தம் 60 பேர் உயிரிழக்கின்றனர்:

 புகைத்தலுடன் தொடர்புபட்ட சுகாதார பிரச்சினைகளினால் தினமும் ஏறக்குறைய 60 பேர் உயிரிழப்பதாக சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். கொழும்பில் நடைபெற்ற வைபவமொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அதிபர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், தொற்றா நோய்கள் பலவற்றின் முக்கிய காரணியாக விளங்குவது புகைப்பிடித்தல் செயற்பாடாகும். புகைப்பிடித்தலுடன் சம்பந்தப்பட்ட சுகாதாரப் பிரச்சினைகளினால் தினமும் ஏறக்குறைய 60 பேர் மரணிப்பதுடன்...

புதன், 16 அக்டோபர், 2013

இணையத் தொடர்பு சேவைகள் மூலம் தகவல் திரட்டும் அமெரிக்க !

  யாஹூ, ஜீமெயில், பேஸ்புக், ஹாட் மெயில் போன்ற இணையத்தள சேவைகள் மூலம் லட்சக்கணக்கானவர்களின் தொடர்புகளை அமெரிக்க உளவுப்பிரிவுகளில் ஒன்றான தேசிய பாதுகாப்பு அமைப்பு (என்எஸ்ஏ) சேகரித்து வைத்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. எனினும், இதுகுறித்து என்எஸ்ஏ அமைப்பு செய்தி தொடர்பாளர் கூறுகையில், சாதாரண அமெரிக்கர்களின் விவரங்களை சேகரிப்பது எங்கள் நோக்கம் இல்லை. பயங்கரவாதிகளுடன் தொடர்புடையவர்களை மட்டும்தான் நாங்கள் கண்காணிக்கிறோம். குறிப்பிட்ட முகவரிகளை...

திங்கள், 14 அக்டோபர், 2013

யானையிடமிருந்து தப்பியவர் முதலையிடம் சிக்கி

மட்டக்களப்பு செங்கலடி பிரதேசத்தில் யானைக்கும் மனிதனுக்குமிடையிலான மோதலில் தன்னை பாதுகாப்பதற்காக ஆற்றில் குதித்த விவசாயியொருவர் முதலையிடம் சிக்கி படுகாயமடைந்துள்ளார்.. போருக்கு பின்னர் மீள்குடியேற்ற கிராமமான உறுகாமம் கிராமத்தில் நேற்று இந்த பரிதாபகரமான சம்பவம் இடம்பெற்றுள்ளது. இதே கிராமத்தில் சம்பவத்திற்கு முதல்நாள் சனிக்கிழமை யானைக்கும் மனிதனுக்குமிடையிலான மோதலில் 12வயது டைய் ஜெமில் தஸ்லிம் என்ற மாணவன்; யானையின் தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளான். தமது...

ஞாயிறு, 13 அக்டோபர், 2013

மாலியில் படகு விபத்து: 20 பேர் பலி - 200 பேர் மாயம்

மத்திய மாலியில் சுமார் 400 பயணிகளுடன் சென்ற படகு ஆற்றில் மூழ்கி விபத்துக்குள்ளானதில் 20 பேர் பலியாகினர். மாலியில் உள்ள கொன்னா என்ற இடத்தில் இருந்து சுமார் 400 பயணிகளை ஏற்றிக்கொண்டு திம்புக்டு நகரை நோக்கி நைஜர் ஆற்றில் சென்ற படகு திடீரென்று நீரில் மூழ்கியது. படகில் பயணித்த பலருக்கு நீச்சல் தெரியாததால் தண்ணீரில் மூழ்கி மூச்சு திணறி தத்தளித்தனர். விபத்து பற்றி தகவல் அறிந்து விரைந்து வந்த மீட்பு படையினர் 210 பேரை உயிருடன் மீட்டனர். மிதந்து வந்த...

சனி, 12 அக்டோபர், 2013

அமெரிக்க படைகளிடம் சிக்கிய தலிபான் தளபதி

கிழக்கு ஆப்கானிஸ்தானில் அமெரிக்க படைகளிடம் தலிபான் இயக்கத்தின் முக்கிய தளபதி லத்தீப் மசூத் சிக்கியுள்ளார். ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தானில் தங்கியுள்ள தலிபான், அல்கொய்தா தீவிரவாதிகளை ஒழித்து கட்டும் நோக்கில் அமெரிக்க படைகள் முகாமிட்டுள்ளன. சமீபத்தில் பாகிஸ்தான் தலிபான் தீவிரவாத தலைவர் லத்தீப் மசூத் என்பவர் அமெரிக்க படையிடம் பிடிபட்டார். இவர் கிழக்கு ஆப்கானிஸ்தான் எல்லையில் வைத்து கைது செய்யப்பட்டார். இத்தகவலை அமெரிக்க செய்தி தொடர்பாளர் மேரி...

வெள்ளி, 11 அக்டோபர், 2013

கடுமையான பனிப்பொழிவு முதன் முறையாக ஜேர்மனில்

 முதன் முறையாக கடுமையான அளவில் பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளதால் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.ஜேர்மனில் குளிர்காலங்களில் பனிப்பொழிவு ஏற்படுவது வழக்கம். இந்நிலையில் தெற்கு ஜேர்மனியின் பவேரியா பகுதியில் பனிப்பொழிவு ஆரம்பித்துவிட்டது. இதன் காரணமாக பள்ளிகள் மற்றும் சிறுகுழந்தைகளுக்கு விளையாட்டுக் கூடம் போன்றவைகள் மூடப்பட்டுள்ளன. மேலும் மக்களுக்கும், வாகன ஓட்டுனர்களுக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பெர்லினில் வெப்பநிலை ஆறு...

வியாழன், 10 அக்டோபர், 2013

சுற்றுலா பயணிகளுக்கு விசா விதிகள் தளர்வு !

 இந்திய அரசு இந்தியாவுக்கு சுற்றுலா வர விரும்பும் பயணிகளுக்கு விசா வழங்குவதில் சில விதிகளை தளர்த்தியிருக்கிறது. அமெரிக்கா பிரிட்டன் பிரான்ஸ் ஆஸ்திரேலியா சீனா போன்ற 40 நாடுகளைச் சேர்ந்த பிரஜைகள் இந்தியாவுக்கு சுற்றுலா விசா பெற அவர்களின் நாடுகளில் உள்ள இந்திய தூதரகங்களை அணுகாமலேயே இணையத்தின் மூலம் விண்ணப்பப் படிவத்தைப் பூர்த்தி செய்து அனுப்பிவிட்டு இந்தியாவுக்கு வந்து சேர்ந்தவுடன் விமான நிலையத்தில் அவர்களுக்கு விசா வழங்கப்படும் என்று இந்திய...

செவ்வாய், 8 அக்டோபர், 2013

இதோ உங்களுக்கான உணவுகள்!! எடை அதிகரிக்க

ஆரோக்கியமான உடலை அடைய வேண்டுமெனில் எப்போதும் ஆரோக்கியமான உணவுகளையே உண்ண வேண்டும்.பருமனாக உள்ள பல பேர் உடல் எடையை குறைக்க வேண்டி பாடுபடுவதை போல, ஒல்லியான தேகம் கொண்டவர்கள் உடல் எடையை அதிகரிக்க விரும்புகின்றனர். உடல் எடையை அதிகரிப்பது சுலபம் என்று நீங்கள் நினைக்கலாம். எண்ணெயில் பொரித்த கொழுப்பு நிறைந்த உணவுகளை எடுத்துக் கொண்டாலே போதுமானது என்று பலர் நினைக்கின்றனர். ஆனால் அது ஆரோக்கியமானது அல்ல. உடல் எடை அதிகரிக்கும் போது ஆரோக்கியமாக இருப்பது பெரிய...

திங்கள், 7 அக்டோபர், 2013

அட்டகாசம் 6 வயது இரட்டை குழந்தைகளின்

இங்கிலாந்தில் 6 வயது இரட்டை குழந்தைகள் செய்த அட்டகாசத்தால் தந்தை அதிர்ச்சியில் உறைந்துள்ளார். இங்கிலாந்தின் செயின்ட் ஈவ்ஸ் நகரைச் சேர்ந்த அஷ்லே கிரிபித் என்பவருக்கு 6 வயதில் ஆண், பெண் குழந்தைகள் உள்ளனர். இரட்டை குழந்தைகளான இவர்கள் செய்த அட்டகாசத்தால் தந்தை அதிர்ச்சியில் உறைந்துள்ளாராம். அதாவது, கடந்த வார இறுதியில் அப்பிள் இணையத்தள நிறுவனத்தில் இருந்து கிரிபித்துக்கு தபால் ஒன்று வந்துள்ளது. இதனை பிரித்த பார்த்த போது, 4 பக்க அளவுக்கு பில்கள் இருந்துள்ளது. அதில்...

ஞாயிறு, 6 அக்டோபர், 2013

நாங்கள் என்ன பாவம் செய்தோம்! 11 வயது சிறுவனின் கதறல்

சிரியாவில் கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக போர் நடந்து வருகிறது.இதில் ஒரு லட்சத்திற்கும் மேலான மக்கள் பலியாகி உள்ளதுடன், மில்லியன் கணக்கானவர்கள் அகதிகளாக தஞ்சம் அடைந்துள்ளனர். பச்சிளம் குழந்தைகள், பெண்கள் உட்பட பலரும் கொடூரமாக கொலை செய்யப்படுவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் சிரியாவில் நடந்த இரசாயன தாக்குதலில் நூற்றுக்கணக்கானவர்கள் உயிரிழந்தனர். இதனை தொடர்ந்து அமெரிக்காவும், அதன் நட்பு நாடுகளும் தாக்குதல் நடத்த திட்டமிட்டன. ஆனால் இதற்கு...

சனி, 5 அக்டோபர், 2013

பேர்மிங்ஹாமில் இலங்கைப் பெண் மரணம்:

  இலங்கைப் பெண்ணொருவர் இங்கிலாந்தின் பேர்மிங்ஹாமில் விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார். நேற்று காலை 6.45 மணியளவில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது. அவர் பயணித்த சைக்கிள் லொறியொன்றுடன் மோதியமையால் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது. முத்துமனகா பின்ஹாமி என்ற 55 வயதான பெண்ணே விபத்தியில் உயிரிழந்துள்ளார். குறித்த பெண் 5 பிள்ளைகளின் தாயெனவும் அவரது கணவர் மற்றும் பிள்ளைகள் இலங்கையில் வசித்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. குறித்த பெண்  பேர்மிங்ஹாமில் ...

வியாழன், 3 அக்டோபர், 2013

பிரான்ஸ் நாடு நியூயார்க் அல்ல! தொழிற்சங்க தலைவர்

பிரான்ஸ் நாட்டில் உள்ள கடைகள் அதிக நேரம் திறந்திருக்க கூடாது என்று அந்நாட்டு அரசாங்கம் சட்டம் விதித்துள்ளது. பிரான்ஸ் தலைநகரான பாரீசில் உள்ள செப்போரா (Sephora) ஒப்பனை தயாரிப்பு நிறுவனத்தில் இரவு 9.00 மணிக்கு மேலும் கூடுதல் சம்பளத்திற்கு பணியாளர்கள் வேலை பார்ப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனைத் தொடர்ந்து கடைகள் கூடுதல் நேரம் திறந்து வைக்க கூடாது என்று சட்டம் விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த சட்டமானது முட்டாள்தனமானது என்றும் பணியாளர்கள் குறைந்த...

புதன், 2 அக்டோபர், 2013

இளம் பெண் மரணம் கணவர் படுகாயம்

      யாழ். தட்டாதெருச் சந்தியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் இராணுவ வாகன விபத்தில், மோட்டார் சைக்கிளில் பயணம் செய்த இளம் குடும்பப் பெண் பஸ் சில்லில் நசியுண்டு உயிரிழந்தார். கணவன் படுகாய மடைந்தார். இராணுவ வாகனம் மோட்டார் சைக்கிளின் பின்புறம் மோதியதிலேயே இந்த விபத்து நேர்ந்ததாக சம்பவத்தை நேரில் கண்டவர்கள் தெரிவித்தனர். யாழ். தட்டாதெருச் சந்தியில் நேற்றிரவு 10.15 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றது. இராச வீதி, கோப்பாயைச் சேர்ந்த...