siruppiddy

18

siruppiddy

unkal

unkal

ஞாயிறு, 28 மே, 2017

பாரிய வாகனம் மருதங்கேணிப் பகுதியில் பள்ளத்தில் பாய்ந்து விபத்து

பருத்தித்துறை மருதங்கேணிப் பகுதியில் பாரிய வாகனம் ஒன்று பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. மருதங்கேணி சாலையில் குடாரப்பு பகுதியில் பாலம் அமைக்கும் பணி இடம்பெற்று வருகிறது.  இந்த நிலையில் குறித்த வாகனம் பாலம் அமைக்கும் பள்ளத்தில் வீழ்ந்தே  விபத்துக்குள்ளானது. வணக்கம் ரி ரி என் செய்திகள் >>> ...

அதிகாலையில் யாழ்.நகரில் பெண்ணிடம் சங்கிலி பறிப்பு`!

யாழ்ப்பாணம் நகர் மாட்­டீன் வீதி­யில் நேற்று அதி­காலை 4.30 மணி­ய­ள­வில் கொழும்­பி­லி­ருந்து பேருந்­தில் வந்து வீட்­டுக்கு நடந்து சென்று கொண்­டி­ருந்த பெண்­ணி­டம் 2 பவுண் சங்­கிலி கொள்­ளை­யி­டப்­பட்­ட­தாக யாழ்ப்­பா­ணம் பொலிஸ் நிலை­யத்­தில் முறைப்­பாடு  செய்­யப்­பட்­டுள்­ளது. “பணி­யின் நிமிர்த்­தம் கொழும்பு சென்று தனி­யார் பேருந்­தில் யாழ்ப்­பா­ணம் வந்து இறங்­கிய பெண், யாழ்ப்­பா­ணம் முதன்மை வீதி­யி­லி­ருந்து மாட்­டீன் ஓழுங்­கை­யில் 100...

செவ்வாய், 16 மே, 2017

அவசர தகவல் யாழ் குடாநாட்டு மக்களுக்கு ….!

யாழ்.மாவட்ட அரசாங்க அதிபரின் கையொப்பத்தினை போலியாக இட்டு இடமாற்றம் பெற்றுத் தருவதாக கூறி பண மோசடியில் ஈடுபட்ட நபர் ஒருவரை யாழ்ப்பாணம் பொலிஸார்  கைது செய்துள்ளனர். வவுனியா குருமன்காடு பகுதியைச் சேர்ந்த லோகநாதன் ரவீந்திரன் (வயது 58) என்பவர் யாழ்ப்பாணம் பாசையூர் பகுதியில் வைத்து நேற்று கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது, வவுனியாவைச் சேர்ந்த குறித்த நபர் காணாமல் போனோரின் உறவுகளை கண்டெடுத்து தருவதாகவும், இடமாற்றம் மற்றும்...

திங்கள், 15 மே, 2017

உலகமெங்கும் மீண்டும் இணைய தாக்குதல்? இங்கிலாந்து நிபுணர்கள் எச்சரிக்கை

அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு முகமை (என்.எஸ்.ஏ.), உருவாக்கிய, இணையவழி தாக்குதல் ‘டூல்’களை (கருவிகளை) கொண்டு, உலகின் சுமார் 100 நாடுகளில் உள்ள நிறுவனங்கள் மற்றும் பல்வேறு அமைப்புகளின் கணினிகளில் ‘ரான்சம்வேர்’ வைரஸ் மூலம் இணைய தாக்குதல் நடத்தப்பட்டிருப்பது பெரும் அதிர்வுகளை  ஏற்படுத்தி உள்ளது. இந்த ரான்சம்வேர் வைரஸ் தாக்குதலால், இந்தியா, ஸ்பெயின், இங்கிலாந்து, ரஷியா என கிட்டத்தட்ட 100 நாடுகள் பெரும் பாதிப்புக்குள்ளாகி இருக்கின்றன. இங்கிலாந்தில்...

வியாழன், 11 மே, 2017

மரணஅறிவித்தல் திரு நடராசா - சிவசுப்ரமணியம்.10.05.17

திரு நடராஜா சிவசுப்பிரமணியம் அன்னை மடியில் : 20 ஏப்ரல் 1948 — ஆண்டவன் அடியில் : 10 மே 2017 யாழ். சிறுப்பிட்டி மேற்கைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் St. Gallen ஐ வதிவிடமாகவும் கொண்ட நடராஜா சிவசுப்பிரமணியம் அவர்கள் 10-05-2017 புதன்கிழமை அன்று காலமானார். அன்னார், காலஞ்சென்றவர்களான நடராஜா பறுபதம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான ஐயாத்துரை பூரணம் தம்பதிகளின் அன்பு மருமகனும், தவமணி(சுவிஸ்) அவர்களின் அன்புக் கணவரும், சபேசன்(சுவிஸ்) அவர்களின்...

புதன், 10 மே, 2017

போக்குவரத்து சபைக்கு ஒரு நாளில் 83 மில்லியன் ரூபா வருமானம்!!

உலக தொழிலாளர்கள் தினத்தன்று இலங்கை போக்குவரத்து சபைக்கு 83 மில்லியன் ரூபாய் வருமானம் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அரசியல் கட்சிகளுக்காக வழங்கப்பட்ட பஸ்களில் மாத்திரம் 58.6 மில்லியன் ரூபாய் வருமானம் ஈட்டியுள்ளதாக அதன் தலைவர் ரமால் சிறிவர்தன தெரிவித்துள்ளார். அன்றைய தினம் பொதுவான பயண நடவடிக்கைகளிலும் கருத்திற் கொள்ள கூடிய வருமானம் கிடைத்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். பொதுவாக அரசாங்க விடுமுறை நாட்களில் அல்லது ஞாயிறு தினங்களில்...

சனி, 6 மே, 2017

பஸ் நிலையத்தில் அனாதரவாக நின்ற சிறுவன் வவுனியா பொலிஸ் நிலையத்தில்

வவுனியா மத்திய பேரூந்து நிலையத்தில் இன்று (04) மதியம் தனியாக நின்ற சிறுவன் ஒருவனை பேருந்து நிலைய நேரக்கணிப்பாளர் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டள்ளது. வவுனியா மத்திய பேருந்து நிலையத்தில் தனியாக நின்று அழுதுகொண்டிருந்த சிறுவன் ஒருவனை வவுனியா சாலையின் இ.போ. ச நேரக்கணிப்பாளர் அழைத்து விசாரித்தபோது வீடு செல்வதற்கு செட்டிகுளத்திலிருந்து தனியார் பேருந்தில் வந்துள்ளதாகவும் தனது பெயர் மயில்வாகனம் சுகாதாரன் 10 வயது எனவும் கிளிநொச்சி அக்கராஜன்குளம்...

இன்றுமுதல் நாட்டில் அடை மழைஎன திணைக்களத்தின் அறிவிப்பு

நாட்டின் பல பகுதிகளில் இன்றைய தினம் மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதற்கமைய இன்றைய தினம் மாலை 2 மணிக்கு பின்னர் இடியுடன் கூடிய மழை பெய்யும் என குறித்த திணைக்களம்  குறிப்பிட்டுள்ளது. மேல் மாகாணம், சப்ரகமுவ, மத்திய, வடமேல், வட மத்திய மற்றும் தென் மாகாணத்தில் 75 மில்லி மீற்றர் அளவு கடுமையாக மழை பெய்யக்கூடும் என திணைக்களம் தெரிவித்துள்ளது. அத்துடன் இடியுடன் கூடிய மழை பெய்யும் போது அந்த பிரதேசங்களில் தற்காலிகமாக...

மரணஅறிவித்தல் திருமதி வள்ளிப்பிள்ளை செல்லத்துரை,04.05.17

பிறப்பு : 1 ஏப்ரல் 1917 — இறப்பு : 4 மே 2017 யாழ். நவக்கிரியைப் பிறப்பிடமாகவும், நல்லூரை வசிப்பிடமாகவும் கொண்ட வள்ளிப்பிள்ளை செல்லத்துரை அவர்கள் 04-05-2017 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார், காலஞ்சென்ற செல்லத்துரை அவர்களின் அன்பு மனைவியும், மங்கையற்கரசி(நல்லூர்), காலஞ்சென்ற பாலசிங்கம்(சுன்னாகம்), குலசிங்கம்(கனடா), குணசிங்கம்(லண்டன்), பகீரதி(கனடா), சத்தியேஸ்வரி(நல்லூர்), யோகசிங்கம்(சுவிஸ்) ஆகியோரின் அன்புத் தாயாரும், சிவஞானம்(நல்லூர்),...

வியாழன், 4 மே, 2017

யாழ் மயி­லிட்டி கிணற்­றி­ல் வெடி­பொ­ருள்­கள் மீட்பு!

அண்­மை­யில் விடு­விக்­கப்பட்ட மயி­லிட்டி வடக்­குத் துறை­யில், கிணற்­றி­லி ­ருந்து பெரு­ம­ளவு வெடி பொருள்­கள் நேற்று மீட்­கப்­பட்­டுள்­ளன.  இன்­றைய தின­மும் வெடி­பொ­ருள் மீட்­புப் பணி தொட­ரும் என்று  தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது.  மீள்­கு­டி­ய­மர்­வுக்­காக வீட்­டுக் கிணற்­றைத் துப்­பு­ரவு செய்­த­போதே, இந்த வெடி­பொ­ருள்­கள் கண்­டு­பி­டிக்­கப்­பட்­டுள்­ளன.  3 ஆயி­ரம் துப்­பாக்கி ரவை­கள், 15 கைக்­குண்­டு­கள், அடை­யா­ளம் காணப்­ப­டாத...

செவ்வாய், 2 மே, 2017

மரணஅறிவித்தல் திருமதி சரவணமுத்து மகேஸ்வரி 30.04.17

தோற்றம் : 27 ஓகஸ்ட் 1938 — மறைவு : 30 ஏப்ரல் 2017 யாழ். சிறுப்பிட்டி தெற்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட மகேஸ்வரி சரவணமுத்து அவர்கள் 30-04-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார், காலஞ்சென்ற இராமநாதன், சின்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், திரு. திருமதி வைரமுத்து தம்பதிகளின்  அன்பு மருமகளும், காலஞ்சென்ற சரவணமுத்து அவர்களின் அன்பு  மனைவியும், தெய்வநாயகி, பத்மலோசி(சுவிஸ்), தெய்வராணி(சுவிஸ்), கேதீஸ்வரி...