siruppiddy

18

siruppiddy

unkal

unkal

ஞாயிறு, 28 மே, 2017

அதிகாலையில் யாழ்.நகரில் பெண்ணிடம் சங்கிலி பறிப்பு`!


யாழ்ப்பாணம் நகர் மாட்­டீன் வீதி­யில் நேற்று அதி­காலை 4.30 மணி­ய­ள­வில் கொழும்­பி­லி­ருந்து பேருந்­தில் வந்து வீட்­டுக்கு நடந்து சென்று கொண்­டி­ருந்த பெண்­ணி­டம் 2 பவுண் சங்­கிலி கொள்­ளை­யி­டப்­பட்­ட­தாக யாழ்ப்­பா­ணம் பொலிஸ் நிலை­யத்­தில் முறைப்­பாடு 
செய்­யப்­பட்­டுள்­ளது.
“பணி­யின் நிமிர்த்­தம் கொழும்பு சென்று தனி­யார் பேருந்­தில் யாழ்ப்­பா­ணம் வந்து இறங்­கிய பெண், யாழ்ப்­பா­ணம் முதன்மை வீதி­யி­லி­ருந்து மாட்­டீன் ஓழுங்­கை­யில் 100 மீற்­றர் தூரத்­தி­லி­ருந்த தனது வீட்­டுக்கு கால்­ந­டை­யா­கச் சென்­றுள்­ளார்.
வீட்­டுக்கு அண்­மை­யா­கச் சென்ற நிலை­யில் அவ­ரைத் துவிச்­சக்­கர வண்­டி­யில் வந்த ஒரு­வர் திடீ­ரெனïïïïக் கீழே தள்ளி வீழ்த்­தி­யுள்ளார். பெண் நிலை குலைந்து கீழே வீழ்ந்த போது, அவர் அணிந்­தி­ருந்த 2 பவுண் தங்­கச் சங்­கி­லியை துவிச்­சக்­கர வண்­டி­யில் வந்­த­வர்கள் அறுத்­துக் கொண்டு தப்­பி­யோ­டி­விட்­டார்” என்று முறைப்­பாட்­டில் 
தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.
கொள்ளை இடம்­பெற்ற பகு­தி­யில் பொருத்­தப்­பட்­டி­ருந்த மின் விளக்­கு­கள் ஒளி­ர­வில்லை என்று தெரி­விக்­கப்­பட்­டது. அது தொடர்­பில் உரி­ய­வர்­க­ளுக்கு அறி­வித்­தும் மாதக் கணக்­கில் மின்­வி­ளக்­கு­கள் சீர­மைக்­கப்­ப­ட­வில்லை என்று குற்­றஞ்­சாட் டப்­பட்­டது.  
வணக்கம் ரி ரி என் செய்திகள் >>>

0 கருத்துகள்:

கருத்துரையிடுக