உலக தொழிலாளர்கள் தினத்தன்று இலங்கை போக்குவரத்து சபைக்கு 83 மில்லியன் ரூபாய் வருமானம் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அரசியல் கட்சிகளுக்காக வழங்கப்பட்ட பஸ்களில் மாத்திரம் 58.6 மில்லியன் ரூபாய் வருமானம் ஈட்டியுள்ளதாக அதன் தலைவர் ரமால் சிறிவர்தன தெரிவித்துள்ளார்.
அன்றைய தினம் பொதுவான பயண நடவடிக்கைகளிலும் கருத்திற் கொள்ள கூடிய வருமானம் கிடைத்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பொதுவாக அரசாங்க விடுமுறை நாட்களில் அல்லது ஞாயிறு தினங்களில் தங்கள் தினசரி வருமானம் 68 மில்லியன் ரூபாய் எனவும் இம்முறை பாரிய அதிகரிப்பு ஒன்று காணப்பட்டுள்ளதாக
அவர் குறிப்பிட்டுள்ளார்.
மே தின பேரணிக்காக இம்முறை வழங்கப்பட்ட பஸ்களின் எண்ணிக்கை மற்றும் கட்டணங்களில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார். அதற்கமைய இந்த அதிக வருமானம் கிடைத்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக