வவுனியா மத்திய பேரூந்து நிலையத்தில் இன்று (04) மதியம் தனியாக நின்ற சிறுவன் ஒருவனை பேருந்து நிலைய நேரக்கணிப்பாளர் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டள்ளது.
வவுனியா மத்திய பேருந்து நிலையத்தில் தனியாக நின்று அழுதுகொண்டிருந்த சிறுவன் ஒருவனை வவுனியா சாலையின் இ.போ. ச நேரக்கணிப்பாளர் அழைத்து விசாரித்தபோது வீடு செல்வதற்கு செட்டிகுளத்திலிருந்து தனியார் பேருந்தில் வந்துள்ளதாகவும் தனது பெயர் மயில்வாகனம் சுகாதாரன் 10 வயது எனவும் கிளிநொச்சி அக்கராஜன்குளம் என்று தெரிவித்தார்.
குறித்த சிறுவன் தற்போது பொலிஸ் நிலைய சிறுவர் பெண்கள் பிரிவில் ஒப்படைக்கப்பட்டள்ளார்.
சிறுவனைப்பற்றிய தகவல் தெரிந்தால் வவுனியா பொலிஸ் நிலையத்தில் தொடர்பு கொள்ளவும்
0 கருத்துகள்:
கருத்துரையிடுக