நாட்டின் பல பகுதிகளில் இன்றைய தினம் மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதற்கமைய இன்றைய தினம் மாலை 2 மணிக்கு பின்னர் இடியுடன் கூடிய மழை பெய்யும் என குறித்த திணைக்களம்
குறிப்பிட்டுள்ளது.
மேல் மாகாணம், சப்ரகமுவ, மத்திய, வடமேல், வட மத்திய மற்றும் தென் மாகாணத்தில் 75 மில்லி மீற்றர் அளவு கடுமையாக மழை பெய்யக்கூடும் என திணைக்களம் தெரிவித்துள்ளது.
அத்துடன் இடியுடன் கூடிய மழை பெய்யும் போது அந்த பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்று வீசும் என வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள வானிலை அறிக்கையில்
குறிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த பல மாதங்களாக இலங்கையில் கடும் வறட்சி நிலை காணப்படுகிறது. இதன் காரணமாக பத்து இலட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக