அண்மையில் விடுவிக்கப்பட்ட மயிலிட்டி வடக்குத் துறையில், கிணற்றிலி ருந்து பெருமளவு வெடி பொருள்கள் நேற்று மீட்கப்பட்டுள்ளன.
இன்றைய தினமும் வெடிபொருள் மீட்புப் பணி தொடரும் என்று
தெரிவிக்கப்படுகின்றது.
மீள்குடியமர்வுக்காக வீட்டுக் கிணற்றைத் துப்புரவு செய்தபோதே, இந்த வெடிபொருள்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
3 ஆயிரம் துப்பாக்கி ரவைகள், 15 கைக்குண்டுகள், அடையாளம் காணப்படாத குண்டுகள் 20 என்பன நேற்று மீட்கப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர். கிணற்றினுள் இன்னமும் வெடிபொருள்கள் காணப்படும் நிலையில், அவற்றை மீட்கும் பணி இன்று தொடரும் என்று
பொலிஸார் தெரிவித்தனர்.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>
0 கருத்துகள்:
கருத்துரையிடுக