siruppiddy

18

siruppiddy

unkal

unkal

ஞாயிறு, 29 அக்டோபர், 2017

மரண அறிவித்தல் திருமதி .நாகராஜா.நவமலர் 29-10-17

இறப்பு : 29 ஒக்டொபர்  2017      ,  யாழ்.  நவற்கிரி  புத்தூரைய்  பிறப்பிடமாகவும், தோப்பு அச்சுவேலியை   வசிப்பிடமாகவும்   கொண்ட திருமதி  .நாகராஜா.நவமலர்  அவர்கள் 29-10-2017    அன்று    காலமானார். அன்னார், காலஞ்சென்ற ஐயாத்துரை அன்னம்மா  தம்பதிகளின்  அன்பு  மகளும், ஆவார் இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு...

செவ்வாய், 24 அக்டோபர், 2017

நாட்டின் பல பகுதிகளில்இன்று முதல் மாலை நேரத்தில் மழை

நாட்டின் பல பாகங்களுக்கு இன்று (24) முதல் பிற்பகல் நேரத்தில் மழை பெய்யும் சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் இவ்வாறு மழை எதிர்பார்க்கப்படுவதாக திணைக்களத்தின் அலுவலக உத்தியோகத்தர் கசுன் பஸ்குவல் தெரிவித்துள்ளார். இந்த மழையுடன் கூடிய காலநிலை இன்று முதல் நாளையும், நாளை மறுதினமும் இருக்கும் எனவும் அவர் கூறியுள்ளார். மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களுக்கும் யாழ்ப்பாணம்,...

மரண அறிவித்தல் அமரர் ஐயாத்துரை வித்திலாமணி .24.10.17

இறப்பு : 24 ஒக்டொபர்  2017  யாழ்.  நவக்கிரி புத்தூரைய்  பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும்  கொண்ட ஐயாத்துரை.வித்திலாமணி. அவர்கள் 24-10-2017 செவ்வாய் க்கிழமை அன்று     காலமானார். அன்னார், காலஞ்சென்ற தம்பு  மாணிக்கம் தம்பதிகளின் அன்பு மகளும் , காலஞ்சென்ற .ஐயாத்துரை   அவர்களின் அன்பு மனைவியும்  குமார் . சாந்தன் லலி   மலர்   ஆகியோரின் அன்புத்தந்தையும்    ...

திங்கள், 23 அக்டோபர், 2017

தாய் மகன் ஒரு குழியில்அடக்கம் அனைவரையும் கலங்க வைத்த சோகம்!

ஏறாவூர், சவுக்கடியில் படுகொலை செய்யப்பட்ட தாய்-மகன் இருவரது உடல்களும்  ஒரே குழியில் அடக்கம் செய்யப்பட்டன. மதுவந்தி (27) என்ற அந்தத் தாயும், அவரது மகனான மதுசன் (11) ஆகிய இருவரும் கடந்த 18ஆம் திகதி தீபாவளி தினத்தன்று மர்மமான முறையில், அவர்களது வீட்டில் கொல்லப்பட்டனர். இது குறித்து ஆராய்ந்த பொலிஸார், மோப்ப நாய்களுடன் தேடுதல் நடவடிக்கைகளில் இறங்கினர். அதன்போது, மூன்று பேரின் வீடுவரை சென்று நின்றதால் பொலிஸாருக்குச் சந்தேகம்  எழுந்தது. அதன்படி,...

வியாழன், 19 அக்டோபர், 2017

சம்பா அரசியின் விலை இன்று நள்ளிரவு முதல் குறைப்பு

லங்கா சதோச விற்பனை நிலையங்களில் விற்கப்படும் சம்பா அரிசியின் விலை இன்று நள்ளிரவு முதல் குறைக்கப்படும் என சதொச நிறுவனத்தின் தலைவர் பேராசிரியர் டி.எம்.கே.பி. தென்னகோன்  தெரிவித்துள்ளார். அதன்படி தற்போது 84 ரூபாவிற்கு விற்கப்படும் சம்பா அரிசி இன்று நள்ளிரவு முதல் 80 ரூபாவிற்கு விற்கப்படும் என  தெரிவிக்கப்பட்டுள்ளது. இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>> ...

புதன், 18 அக்டோபர், 2017

சிசுவை அடித்து கொலை செய்த தந்தைக்கு மரண தண்டனை

ஓன்பது மாத சிசிசுவை அடித்து கொலை செய்த தந்தை ஒருவருக்கு நீதிமன்றம் மரண தண்டனை வழங்கி  தீர்ப்பளித்துள்ளது. மொனராகலை மாவட்ட உயர் நீதிமன்ற நீதிபதி இனோக ரணசிங்கவினால் நேற்றையதினம் மரண தண்டனை வழங்கி தீர்ப்பளிக்கப்பட்டது. கடந்த 2007 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 21 ஆம் திகதி  புத்தல வகுரவல பகுதியில் ஹிக்கடுவ விதானகே அதீப சஞ்சீவ என்ற ஒன்பது மாதக்குழந்தையினை கால்களில்  பிடித்து சுவற்றில் அடித்து  மிகவும் கொடூரமான முறையில் கொலை...

கடலில் குளிக்கச் சென்ற இளைஞர்களை காணவில்லை

முல்லைத்தீவு பெருங்கடலில் குளிக்கச் சென்ற இரு இளைஞர்களை காணவில்லை என்று தெரிவிக்கப்படுகின்றது. மணற்குடியிருப்பு கடற்கரைக்கு பிற்பகல் இரண்டு மணியளவில் ஏழு பேர் குளப்பதற்காகச் சென்றுள்ளனர். இதன்போது ஏழு பேரும் குளித்துக் கொண்டிருந்த நிலையில் பெரிய அலையொன்று வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த அலையில் சிக்காமல் ஐந்து பேர் தப்பித்துள்ள நிலையில் மற்றைய இரு இளைஞர்களும் அலையில் இழுத்துச் சென்றுள்ளதாக தப்பி வந்தவர்கள் தெரிவிக்கின்றனர். இந்த...

நினைவஞ்சலி 7ம் ஆண்டு அமரர் சிவஞானசுந்தரம் கிருபானந்தன்

மண்ணில் : 12 ஓகஸ்ட் 1958 — விண்ணில் : 18 ஒக்ரோபர் 2010 திதி : 30 ஒக்ரோபர் 2017 யாழ். அச்சுவேலியைப் பிறப்பிடமாகவும், சுவிசை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சிவஞானசுந்தரம் கிருபானந்தன் (வைசி) அவர்களின் 7ம் ஆண்டு நினைவஞ்சலி. ஏழாண்டு போயும் என்றும் எம்மோடு இருக்கும் ஏந்தலே!! எம்மை விட்டேகி ஏழாண்டு போனதையா!  ஏங்கியே அழுகின்றோம் ஏந்தலே!!  தாங்கியே பிடிக்க தலைவனின்றி  தவிக்கின்றோம் ஐயா! வாங்கியே நீ வைத்தவற்றில்  உன் வண்ணவதனம்...

திங்கள், 16 அக்டோபர், 2017

மரணஅறிவித்தல், திரு துரைராஜா தங்கேஸ்வரன்.14.10.17

மலர்வு : 12 யூலை 1969 — உதிர்வு : 14 ஒக்ரோபர் 2017 யாழ். மூளாய் பொன்னாலையைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Füllinsdorf ஐ வசிப்பிடமாகவும் கொண்ட துரைராஜா தங்கேஸ்வரன்(குஞ்சன்) அவர்கள் 14-10-2017 சனிக்கிழமை அன்று காலமானார். அன்னார், துரைராஜா நாகம்மா தம்பதிகளின் மூத்தப் புதல்வரும், நிகுந்தலா அவர்களின் அன்புக் கணவரும், நிஷா, கஜன் ஆகியோரின் பாசமிகு  தந்தையும், லங்கேஸ்வரன்(சூரி- பெல்ஜியம்), மதிவதனி(இலங்கை), ஜெயவதனி(பெல்ஜியம்), யோகவதனி(பிரான்ஸ்),...

ஞாயிறு, 15 அக்டோபர், 2017

ஹற்றன் நாவலப்பிட்டிநீரில் மூழ்கியது

மலையகத்தில் தொடர்ந்து பெய்து வரும் அடை மழையினால் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்படைந்துள்ளதுடன் நுவரெலியா ஹட்டன் உள்ளிட்ட பல பகுதிகளில் மண்சரிவுகள் வெள்ளப்பெருக்கும்  ஏற்பட்டுள்ளது. நேற்று(14.10.2017) மாலை 3 மணியளவில் நோட்டன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட காசல்ரி பிரதேசத்தில் ஏற்பட்ட மண் சரிவினால் மூன்று மணித்தியாலங்கள் வரை நோட்டன் அட்டன் மார்க்க பஸ் போக்குவரத்து தடைப்பட்டமையினால் பயணிகள் பெரும் அசௌகரியங்களுக்கு உள்ளாகினர். மாலை 6 மணிவரை நோட்டன்....

நடு இரவில் வவுனியாவில் வீடு புகுந்து சிறுமியை கடத்திச்செல்ல முயற்சி!

வவுனியா நெடுங்கேணி கீரிசுட்டான் கிராமத்தில் பத்துவயது சிறுமியை நேற்று முன்தினம் (12) கடத்தி செல்ல முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இச்சம்பவம் பற்றி தெரியவருவதாவது… ஒலுமடு வித்தியாலயத்தில் கல்விகற்றுவரும் பத்து வயது சிறுமியை நேற்று முன்தினம் நடுநிசியில் வீட்டுக்குள் நுழைந்து  மர்மநபரொருவர் கடத்திச் செல்ல முயற்சித்தவேளை வீட்டுக்கு வெளியே படுத்திருந்த தந்தையார் மர்மநபரை விரட்டிச்சென்ற நிலையில் குறித்த நபர் சிறுமியை கீழே போட்டுவிட்டு தப்பிச்...

மரணஅறிவித்தல், திருமதி புவனேஸ்வரி தம்பிராசா.13-10.17

இறப்பு : 13 ஒக்ரோபர் 2017 யாழ். அச்சுவேலி தோப்பைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட புவனேஸ்வரி தம்பிராசா அவர்கள் 13-10-2017 வெள்ளிக்கிழமை  அன்று காலமானார். அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லையா செல்லாச்சிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சுப்பையா பருவதம் தம்பதிகளின் அன்பு மருமகளும், காலஞ்சென்ற தம்பிராசா அவர்களின் ஆருயிர் மனைவியும், புரந்தரநாதன்(கனடா) அவர்களின் பாசமிகு தாயாரும், கோபாலகிருஷ்ணன்(இலங்கை), வைகுந்தநாதன்(கனடா),...

சனி, 14 அக்டோபர், 2017

இன்னும் சில தினங்களுக்கு நாட்டில் சீரற்ற காலநிலை தொடரலாம்

நாட்டில் தற்போது நிலவி வரும் சீரற்ற காலநிலை இன்னும் சில தினங்களுக்குத் தொடரலாம் என வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது. மேல், மத்திய, வட, வடமேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களில் எதிர்வரும் நாட்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய - குறிப்பாக பிற்பகல் 2 மணிக்குப் பின் - வாய்ப்பு இருப்பதாகவும், மழையுடன் கடும் காற்றும் வீசலாம் எனவும் வானிலை அவதான நிலையம்  தெரிவித்துள்ளது. மேலும், களுத்துறை, காலி மற்றும் மாத்தறை பகுதிகளில் 100 முதல் 150 மில்லி...

புதன், 11 அக்டோபர், 2017

நான்கு மணி நேரம் வடமராட்சியில் கிணற்றினுள் ஒழிந்திருந்த பெண்

வங்கிக் கடனை செலுத்த முடியாமல், வங்கி ஊழியர்களுக்கு பயந்து நான்கு மணி நேரமாக குடும்ப பெண் ஒருவர் கிணற்றுக்குள் ஒழிந்திருந்த பரிதாப சம்பவம் ஒன்று வடமராட்சி பகுதியில்  இடம்பெற்றுள்ளது. நுண்கடன் திட்டங்களால் வடக்கில் அதிகளவில் குடும்ப பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளதுடன் நாளுக்கு நாள் கொடுமைகளையும் வேதனைகளையும் அனுபவித்து வருவதாகவும் இந்த நுண்கடன் திட்டங்களை நிறுத்துமாறு மத்திய வங்கி ஆளுநரிடம் பெண்கள் அமைப்புக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். வடக்கில்...

திங்கள், 9 அக்டோபர், 2017

அகாலமரணம் திரு பாஸ்கரன் செந்தூரன் 09.10.17

மண்ணில் : 18 மே 1988 — விண்ணில் : 9 ஒக்ரோபர் 2017 யாழ். குப்பிளானைப் பிறப்பிடமாகவும, சுவிஸை வசிப்பிடமாகவும் கொண்ட பாஸ்கரன் செந்தூரன் அவர்கள் 09-10-2017 திங்கட்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார். அன்னார், காலஞ்சென்றவர்களான கண்ணன்பாலா(தவம்) ஞானசுந்தரம் தம்பதிகள், காலஞ்சென்றவர்களான நவரத்தினம் அன்னம்மா(கட்டுவன்) தம்பதிகளின் அன்புப் பேரனும், பாஸ்கரன்(பாபு) ஞானேஸ்வரி(லலிதா) தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற திருநாவுக்கரசு, கலாவேணி தம்பதிகளின் அன்பு...

புதன், 4 அக்டோபர், 2017

தேயிலயின் விலை சர்வதேச சந்தையில் அதிகரிப்பு

சர்வதேச சந்தையில் இலங்கையின் தேயிலயின் விலை கடந்த ஏழு மாதங்களில் பெரும் அதிகரிப்பை பெற்றிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு இந்த காலப்பகுதியில் இலங்கையின் தேயிலை ஒரு கிலோ 2.95 டொலர்களுக்கு விற்பனையானது. எனினும் இந்த ஆண்டு அது 4.03 டொலர்களாக அதிகரித்துள்ளது. ஆயினும் இந்தியாவின் தேயிலை விலை வீழ்ச்சியை அடைந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>> ...