இன்று நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் ஆறு பொருட்களுக்காக விதிக்கப்பட்டிருந்த விசேட வர்த்தக வரி குறைக்கப்படுவதாக நிதியமைச்சர் , கொழும்பில் சற்று முன்னர் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டின் போது
குறிப்பிட்டார்.
விதை உருளைக்கிழங்கு, பெரிய வெங்காயம், பருப்பு, கருவாடு, தேங்காய் எண்ணெய் மற்றும் மரக்கறி எண்ணெய் ஆகிய பொருட்களின் வரிகளே இவ்வாறு குறைக்கப்பட்டுள்ளன.
அதன்படி, விதை உருளைக்கிழங்கு மற்றும் பெரிய வெங்காயம் ஒரு கிலோவிற்கான விசேட வர்த்தக பொருள் வரி 39 ரூபாவாலும், பருப்பு கிலோவுக்காக விதிக்கப்பட்டிருந்த விசேட வர்த்த பொருள் வரி 12 ரூபாவாலும் குறைக்கப்பட்டுள்ளன.தேங்காய் எண்ணெய் மற்றும் மரக்கறி எண்ணெய் ஒரு லீற்றரின் விலை 25 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, கருவாடுக்காக விதிக்கப்பட்டிருந்த விசேட வர்த்தக பொருள் வரி 50 ரூபாவாலும் குறைக்கப்பட்டுள்ளமை
குறிப்பிடத்தக்கது.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>
0 கருத்துகள்:
கருத்துரையிடுக