வவுனியா புகையிரத நிலைய வீதியில் மோட்டார் சைக்கிள் மோதியதில், குழந்தை உட்பட இருவர் படுகாயமடைந்தனர். காயமடைந்த இருவரும் வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.புகையிரத நிலைய வீதியூடாக குருமண்காடு நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள், மதுரா மண்டபத்தை அண்மித்த வேளை, வீதியில் நடந்து சென்ற பெண் மீது மோதி விபத்துக்குள்ளானது.
விபத்தின்போது குறித்த பெண் ஒரு வயதுக் குழந்தையைத் தூக்கிச் சென்றிருந்தார். மோட்டார் சைக்கிள் மோதியதில் நிலைகுலைந்த பெண் குழந்தையுடன் விழுந்து படுகாயமடைந்தார்.
மோட்டார் சைக்கிளைச் செலுத்திச் சென்ற 21 வயது இளைஞரைக் கைது செய்த பொலிஸார் விசாரணை
நடத்தி வருகின்றனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக