siruppiddy

18

siruppiddy

unkal

unkal

வியாழன், 2 நவம்பர், 2017

தாய் தன் உயிரைக் கொடுத்து மகளைக் காப்பாற்றினர்

மின்சாரம் தாக்கிய மகளை காப்பாற்ற முற்பட்ட தாய் ஒருவர் பரிதாபமாகப் பலியானார். யாழ்.வடமராட்சி தும்பளைப் பகுதியில்
 இடம்பெற்றது.
இச் சம்பவத்தில் தும்பளை பருத்தித்துறையைச் சேர்ந்த குணராசா அம்பிகை (வயது- 50) என்ற குடும்பப்பெண்ணே பரிதாபகர மாக உயிரிழந்தவராவார்.
இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது,
தமது வீட்டில் உள்ள தொலைக்காட்சிப் பெட்டிக்கு கேபிள் வழங்குநர் மூலமே இணை ப்பினைப் பெற்றுவந்துள்ளனர். இவ் இணைப் பினை மழை, இடி, மின்னல் காரணமாக இரவு துண்டித்து விட்டு நேற்று அதிகாலையில் இணைப்பு கொடுக்கப்பட்டது.
உயிரிழந்த குடும்பப் பெண்ணின் மகள் இணைப்பினை வழங்க முற்பட்ட போது தொலைக்காட்சி கேபிள் இணைப்பின் மூலம் பாய்ந்ததாக தெரிவிக்கப்படும் மின்சாரம் மகளைத் தாக்கியதைக் கண்ட தாய் மகளைக் காப்பாற்றுவதற்காக ஓடிச்சென்று அவரைப் பிடித்துள்ளார்.
இதற்கிடையில் மின் தாக்குதலில் இரு ந்து மகள் தூக்கியெறியப்பட தாயார் மின்சா ரத் தாக்குதலுக்கு இலக்கானதாக தெரிவிக்கப்படுகிறது.
உடனடியாக பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்ட போது அவர் மரணமடைந்துள்ளார். கைப் பகுதியில் மின்சாரத் தாக்கம் ஏற்பட்டிருப்பதாக வைத்தியசாலை தரப்பினர்
 தெரிவித்தனர்.
இச் சம்பவம் தொடர்பிலான மரண விசா ரணையினை பருத்தித்துறை பதில் நீதவான் பா.சுப்பிரமணியம் மேற்கொண்டார். மேல திக விசாரணைகளைப் பருத்தித்துறைப் பொலிஸார் 
மேற்கொண்டுள்ளனர்
இங்கு அழுத்தவும் நவற்கிரி .கொம்1 செய்தி >>


0 கருத்துகள்:

கருத்துரையிடுக