மூன்று நாள் தொடர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு நான்கு பிள்ளைகளின் தாய் ஒருவர் நேற்றுயாழ்.போதனா வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார். நீர்வேலி சிறுப்பிட்டி மேற்கை சேர்ந்த நான்கு பிள்ளைகளின் தாயான சுப்பிரமணியம் இரத்தினேஸ்வரி (வயது 55) என்ற குடும்பப்பெண்ணே உயிரிழந்தவராவார்.
இவர் கடந்த 16,17,18ஆம் திகதிகளில் காய்ச்சல் மற்றும் வாந்திபேதியால் பாதிக்கப்பட்டிருந்தார். கடந்த 18ஆம் திகதி காலை அச்சுவேலி பிரதேச வைத்தியசாலைக்கு சென்றுள்ளார்.
வைத்திய சாலையில் இரத்த பரிசோதனை வசதி இல்லாததால் இரத்தம் பரிசோதி க்கப்படாமல், மாத்திரைகள் கொடுத்து வைத்தியர் அனுப்பியுள்ளார். காய்ச்சல் அதிகரித் தால் மீண்டும் வைத்தியசாலைக்கு கொண்டு வரும்படி தெரிவித்துள்ளார். ஆனால் அன்று இரவு 11 மணியளவில் உடல் சோர்ந்து நடக்கமுடியாமல் இருந்த காரணத்தால் உடனடியாக யாழ்.போதனா வைத் தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் நேற்று காலை 10 மணியளவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
குறித்த மரண விசாரணையை யாழ்.போதனா வைத்தியசாலை மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார்
மேற்கொண்டிருந்தார்
0 கருத்துகள்:
கருத்துரையிடுக