யாழ் அச்சுவேலி விக்கினேஸ்வர வீதியை சேர்ந்த அமரர் மாதர் தம்பிராசா அவர்களின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி (திதி .01.11.2017) இன்று
ஆலம் விருட்சம் போல் வேரூன்றி விழுது விட்டு
கிளை பரப்பி நிழல் தந்த எங்கள் அன்பு அப்பாவே விதியென்னும் இரண்டெழுத்து உங்களை வேரோடு சாய்த்து ஆண்டொன்று ஆனதே அப்பா ஆனாலும் ஆறுமோ எங்கள் துயரம் மாறுமோ உங்கள் நினைவுகள் பாசத்தின்
முழு உருவம் எங்கள் அப்பா
எம்மை விட்டு ஏன் போனீர்கள்? என் அடுத்த பிறவியிலும் அப்பாவாய் நீங்களே வரவேண்டும் எங்கள் குடும்ப விளக்காய் எமக்கு நல்வழி காட்டி உறுதுணையாக இருந்த நீங்கள் இப்போது எம்முடன் இல்லை உங்கள் ஆத்ம சாந்திக்காக எப்போதும் இறைவனை வேண்டி நிற்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்
எமது நவற்கிரி நிலாவரை இணையங்களின்
முதலாம் ஆண்டு நினைவஞ்சலி அன்னாரின் பிரிவால்
துயருறும் குடும்பத்தினருக்கு
ஆழ்ந்த அனுதாபங்களை
தெரிவித்து கொள்ளுகின்றோம் ..
அன்னாரின் ..ஆத்மா சாந்தி அடைய
இறைவனைப்பிராத்திக்கின்றோம்
ஓம் சாந்தி ஓம் சாந்தி ஓம் சாந்தி..
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>
0 கருத்துகள்:
கருத்துரையிடுக