siruppiddy

18

siruppiddy

unkal

unkal

வியாழன், 2 நவம்பர், 2017

யாழ் கோப்பாய் பாலத்திற்கு அருகே ஆண் ஒருவரின் சடலம் மீட்பு

யாழ்ப்பாணம் கோப்பாய் பாலத் தடியில் நேற்று காலை நபர் ஒருவரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அருகிலே அவர் பயணித்ததாக நம்பப்படும் உந்துருளி ஒன் றும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதில் சங்கத்தானை சாவகச்சேரியை வசிப்பிடமாக கொண்ட 3 பிள்ளைகளின் தந்தையான 49 வயதுடைய கனகரட்ணம் கோணேஸ்வரன் என்பவரே இவ்வாறு 
சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இதுகுறித்து மேலும் தெரியவருவதாவது,
கைதடி - மானிப்பாய் வீதியில், கோப்பாய் பாலத்தடியில் உள்ள பரவைக் கடல் ஓரமாக நேற்று காலை நபர் ஒருவரது சடலம் காணப்பட்டுள்ளது. சடலத்தின் அருகில் குறித்த நபர் பயணித்ததாக நம்பப்படும் உந்துருளி ஒன்றும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
குறித்த மரணம் விபத்துக் காரணமாக ஏற்பட்டிருக்கலாம் என்று சொல்லப்பட்டாலும் அவர் பயணித்ததாக நம்பப்படும் உந்துரு ளியில் விபத்து ஏற்பட்டிருப்பதற்கான தடயங் கள் எதுவும் காணப்படவில்லை என்றும், அவரது தலைக்கவசம் உந்துருளியில் 
கொழுவிய நிலையிலும் காணப்பட்டுள்ளதுசம்பவம் தொடர்பான தடயவியல் பரிசோ தனைகளை யாழ்ப்பாணம் குற்றப் பிரிவுப் பொலிஸார் மேற்கொண்டுவரும் நிலையில் இதுகுறித்த விசாரணைகளை கோப்பாய் பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.
இதேவேளை குறித்த பகுதி ஆள் அரவ மற்ற பிரதேசமாகையால் குறித்த மரணம் விபத்துக் காரணமாக ஏற்பட்டிருக்க முடியாது என்று பொதுமக்களால் நம்பப்படுவதாக தெரி விக்கப்படுகின்றது. 
இங்கு அழுத்தவும் நவற்கிரி .கொம்1 செய்தி >>

0 கருத்துகள்:

கருத்துரையிடுக