ராஜகிரிய பகுதியில் இன்று அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில் பாடசாலை மாணவன் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் 7 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும் அவர்களில் நால்வரது நிலை கவலைக்கிடமாக உள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கெப் வாகனம் வேக கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
குறித்த விபத்திற்கான காரணம் தொடர்பில் ராஜகிரிய பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு
வருகின்றனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக