நண்பனை பார்க்க சென்ற குடு ம்பஸ்தர் ஒருவர் மயங்கி விழுந்து மரணமடைந்த பரிதாப சம்பவம் ஒன்று நேற்று முன்தினம் சுண்டுக்குழி பகுதியில் இடம்பெற்றுள்ளது.
கோப்பாய் தெற்கை சேர்ந்த தாமோதரம்பிள்ளை தர்மகுலசிங் கம் (வயது 55) என்ற குடும்பஸ்தரே உயிரிழந்தவராவார்
குறித்த நபர் கோப்பாயில் உள்ள தனது வீட்டில் இருந்து நேற்று முன் தினம் மாலை 6 மணியளவில் சுண்டுக்குழியில் உள்ள தனது நண்பனை பார்ப்பதற்கு சென்றுள் ளார்.
அங்கு நண்பன் இல்லாத கார ணத்தால் அவருடைய
வீட்டில் மாமரத்துக்கு கீழ் நின்றுள்ளார். நண்பன் 7.30 மணியளவில் வீட்டுக்கு வந்த போது அவர் நிலத்தில் விழுந்து
கிடந்துள்ளார்.
உடனடியாக யாழ் போதனா வைத்திய சாலைக்கு கொண்டு சென்றபோது அவரை பரிசோதித்த வைத்தியர் அவர் உயிரிழந்து ள்ளதாக தெரிவித்துள்ளார். பிரேத பரிசோத னையில் அவர் மாரடைப்பால் உயிரிழந்து ள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த மரண விசாரணையை யாழ் போதனா வைத்தியசாலை மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார்
மேற்கொண்டிருந்தார்
0 கருத்துகள்:
கருத்துரையிடுக