வட மாகாணத்தின் மிகப்பெரும் நீர்ப்பாசன குளமான கிளிநொச்சி இரணைமடு குளத்தின் 14 வான்கதவுகளில் 10 வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.இலங்கையின் பல பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர்ச்சியாக சீரற்ற காலநிலை
நிலவி வருகின்றது.இவ்வாறான சந்தர்ப்பத்தில் கடந்த 18.12.19,ஆம் திகதி இரணைமடு குளத்தின் இரண்டு வான்கதவுகள் திறந்து விடப்பட்டன.இந்த நிலையில், தற்போது பத்து வான்கதவுகள்
திறக்கப்பட்டுள்ளதுடன், தாழ் நிலப்பகுதிகளில் வசிப்போரை அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளமை
குறிப்பிடத்தக்கது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக