siruppiddy

18

siruppiddy

unkal

unkal

சனி, 28 டிசம்பர், 2019

வெளியாகியுள்ள உயர்தரப் பரீட்சையில் சாதனை படைத்த யாழ் இந்துவின் மைந்தர்கள்

நேற்றைய தினம்(.28.12,19) வெளியாகியுள்ள 2019 ஆம் ஆண்டு கல்விப் பொதுத் தராதர உயர்தரப்பரீட்சை முடிவுகளின் அடிப்படையில், யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி மாணவர்கள் கணிதம், உயிரியல், வர்த்தகம் ஆகிய துறைகளில் சாதனை படைத்துள்ளனர்.கணிதம், 
உயிரியல், வர்த்தகம் ஆகிய துறைகளில் யாழ். இந்துக் கல்லூரி மாணவர்கள் முதலிடத்தினை பெற்றுக்கொண்டுள்ளனர்.உயிரியல் பிரிவில் கிருசிகன் ஜெயனாந்தராசா 3 ஏ சித்திகளைப் பெற்று யாழ். மாவட்டத்தில் 1ஆம் இடத்தினையும் தேசிய ரீதியில் இரண்டாவது
 இடத்தினையும் பெற்று சாதனை படைத்துள்ளார்.கணிதப்பிரிவில், ரவீந்திரா யதுசன் எ3 ஏ சித்திகளைப் பெற்று மாவட்ட 
மட்டத்தில் 1ம் இடத்தினையும், தேசிய ரீதியில் 12ஆவது இடத்தையும் பெற்றுக்கொண்டுள்ளார்.வர்த்தக துறையில், 
சிவானந்தம் ரகுராஸ் 3 ஏ சித்திகளைப் பெற்று யாழ்.மாவட்டத்தில் முதலிடத்தையும், தேசிய ரீதியில் 107ஆவது இடத்தினையும் பெற்றுள்ளார்.

இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


0 கருத்துகள்:

கருத்துரையிடுக