யாழ் மயிலிட்டி மற்றும் வல்வெட்டித்துறை இடையேயான கடற்பகுதியில் இன்றையதினம் பெருமளவு கேரள கஞ்சாப் பொதிகளை கைப்பற்றியுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.முன்னதாக மயிலிட்டி மற்றும் வல்வெட்டித்துறை கடற்பரப்புக்கிடையில் மூன்று பொதிகள் அடங்கிய கேரள கஞ்சாவை கடற்படை
கைப்பற்றியிருந்தது
.இதனையடுத்து வல்வெட்டித்துறை கடற்பகுதியில் மிதந்து
சென்ற ஐந்து பார்சல்கள் அடங்கிய கேரள கஞ்சாவை கடற்படை கைப்பற்றியது. இவை ஒவ்வொன்றும் 70 கிலோ நிறையுடையவை என்றும் 15 சிறிய பொதிகளில் சுற்றப்பட்டதாகவும் கடற்படை தெரிவித்தது. இவ்வாறு கைப்பற்றப்பட்ட கேரள கஞ்சா மேலதிக விசாரணைகளுக்காக அச்சுவேலி பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டது.இதேவேளை இந்த சம்பவத்தில் எவரும் கைது செய்யப்பட்டதாக தகவல்கள்
எதுவும் இல்லை.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக