கிளிநொச்சி சிவநகர் உருத்திரபுரம் பகுதியில் மின்சாரம் தாக்கி யாழ். பல்கலைக்கழக மாணவன் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.கிளிநொச்சியை சேர்ந்த 22 வயதான மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.சிவநகர் பகுதியில் அமைந்துள்ள தந்தைக்குச் சொந்தமான
அரிசி ஆலைக்கு இன்று காலை வெள்ள நீரை மோட்டார் மூலம் இறைத்து வெளியேற்ற முற்பட்டபோது மின்சாரம்
பாய்ந்ததில் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. மின் தாக்கத்திற்குள்ளான குறித்த இளைஞனை கிளிநொச்சி வைத்தியசாலைக்கு கொண்டு சென்றபோதே, இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குறித்த சம்பவம் தொடர்பாக, மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>
0 கருத்துகள்:
கருத்துரையிடுக