siruppiddy

18

siruppiddy

unkal

unkal

வெள்ளி, 13 டிசம்பர், 2019

வியாபாரி மூலையில் பட்டம் ஏற்றி விளையாடிய சிறுவனுக்கு நேர்ந்த பரிதாபம்

பட்டம் ஏற்றி விளையாடிக் கொண்டிருந்த மாணவன் தோட்டக் கிணற்றில் தவறி வீழ்ந்து பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.பருத்தித்துறை இன்பருட்டிப் பகுதியில் நேற்று (12.121.19.) மாலை இந்த துயரச்சம்பவம்  இடம்பெற்றுள்ளது.பருத்தித்துறை வியாபாரி மூலையைச் சேர்ந்த பருத்தித்துறை வேலாயுதம் மகாவித்தியாலய மாணவணான ஜெகன் ஆனந்த் (17) என்ற மாணவனே உயிரிழந்துள்ளார்.
மாணவன் பட்டம் ஏற்றச் சென்றிருந்த போதும் நீண்ட நேரமாகியும் காணவில்லை என பெற்றோர், உறவினர்களும், நண்பர்களும் பல இடங்களிலும் தேடியுள்ளனர். ஆயினும் மாணவன் குறித்த தகவல்கள் எதுவும் தெரியவரவில்லை.இந்நிலையில், தோட்டக் காணியொன்றில் இருந்த கிணற்றில் மாணவன் விழுந்திருப்பதை அவதானித்து அவசரநோயாளர் காவு வண்டிக்கு தகவல் கொடுக்கப்பட்டது. கிணற்றிலிருந்து மீட்கப்பட்ட மாணவன் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட போதும், அவர் உயிரிழந்து விட்டதாக வைத்தியர்கள் தெரிவித்தனர்.

உயிரிழந்த மாணவனின் சடலம் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. பிரேத பிரிசோதனைகளின் பின்னர் இன்று உறவினர்களிடம் கையளிக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.இச் சம்பவம் தொடர்பில் பருத்தித்துறைப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


0 கருத்துகள்:

கருத்துரையிடுக