siruppiddy

18

siruppiddy

unkal

unkal

வியாழன், 6 பிப்ரவரி, 2020

முகநூலில் பகிரப்பட்ட தகவலை நம்பி இலைச்சாறு குடித்தவர் உயிரிழந்துள்ளார்.

முகநூலில் (பேஸ்புக்கில்) பகிரப்பட்ட தகவலை நம்பி, உடலை கட்டுக்கோப்பாக வைத்திருக்க சில இலைகளை அரைத்து குடித்த இளைஞன் உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் கம்பஹா மொரகொட பகுதியில் இடம்பெற்றது.சாற்றை அருந்தியவர் உடனடியாக
 மயக்கமடைந்தார். அவரை உறவினர்கள் கம்பஹா வைத்தியசாலைக்கு கொண்டு சென்று, 
சிகிச்சையளித்தபோதும், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.திருமணமான 36 வயதான ஒருவரே உயிரிழந்துள்ளார். அவர் தற்போது தனது தாயாருடன் வாழ்ந்து வருகிறார். தனது மகன் உடற் கட்டழகில் கவனம் செலுத்துவதாகவும், அதற்காக மூலிகை சாறுகளை அருந்தி வருவதாகவும் 
தாயார் தெரிவித்துள்ளார்.
பேஸ்புக்கில் பகிரப்பட்ட தகவலொன்றை தன்னிடம் கூறியதாகவும், ஒரு வகை மரத்தின் பெயரை குறிப்பிட்டு, அந்தவகை மரங்கள் இலங்கையில் 15 மட்டுமே உள்ளதாக கூறியதாகவும், அந்த மரத்தின் இலைகளுடன், வேறு இலைகளையும் ஒன்றாக அரைத்து, குளிர்சாதன 
பெட்டியில் வைத்து, கடந்த வெள்ளிக்கிழமை பின்னர் அருந்தியதாக தெரிவித்துள்ளார்.அதைக் குடித்து 10 நிமிடத்தில் தனக்கு மயக்கம் வருவதாக தெரிவித்து, வைத்தியசாலைக்கு கொண்டு 
செல்லும்படி தெரிவித்தார். அவர் உடனடியாக கம்பஹா பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு, 
அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டு வந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.இந்த இலைச்சாறுகளில் இருந்து ஏற்பட்ட விசம் காரணமாக, அவர் உயிரிழந்ததாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


0 கருத்துகள்:

கருத்துரையிடுக