மட்டக்களப்பு சந்திவெளியில் 18.02.2020. நண்பகல் இடம்பெற்ற கோரவிபத்தில் இருவர் பலியானதுடன் மேலும் இருவர் பலத்த காயமடைந்துள்ளனர்.வைத்தியசாலையிலுள்ள உறவினரைபார்வையிட்டு வந்த குடும்பத்தினரே விபத்தில் சிக்கியதாக தெரிவிக்கப்படுகிறது.மட்டக்களப்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நோயாளியை இன்று காலை பார்வையிட்டதன் பின்னர் முச்சக்கரவண்டியில் வீடு திரும்பியபோது, சந்திவெளியில் வைத்து லொறியொன்றுடன் மோதியதால் இந்தவிபத்து
சம்பவித்துள்ளது.
இந்த விபத்தில் முச்சக்கரவண்டியில் பயணித்த நால்வரில் பதுளை, நுணுகலை பகுதியைச் சேர்ந்த ரங்கன் ராமசாமி (71 வயது) என்பவரும் மற்றைய ஒருவரும் பலியாகியுள்ளனர்.
லொறியின் சாரதி ஏறாவூர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை
மேற்கொண்டு வருகின்றனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக