பண்டாரவளை, பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹில்ஓயா கொலதென்ன பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் மூவர் படுகாயமடைந்த நிலையில் பதுளை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.பலாங்கொடை பகுதியிலிருந்து மக்குலெல்ல பகுதிக்குச் சென்ற முச்சக்கரவண்டி,
பண்டாரவளை-மக்குலெல்ல பிரதான வீதியில் கொலதென்ன பகுதியில் (12.02.2020.புதன்கிழமை) இரவு வீதியை விட்டுவிலகி சுமார் 50 அடி பள்ளத்தில் பாய்ந்து
விபத்துக்குள்ளாகியது. மேற்படி முச்சக்கரவண்டியில் மூவர் பயணித்துள்ளதாகவும், மூவரும் பலத்த காயங்களுக்குள்ளாகி பதுளை ஆதார வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை
பெற்று வருவதாகவும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.முச்சக்கரவண்டியின் வேகத்தை கட்டுப்படுத்த முடியாததன் காரணமாகவே இவ்விபத்து நேர்ந்துள்ளதாக
பண்டாரவளை போக்குவரத்துப் பொலிஸார் தெரிவித்தனர். இவ்விபத்து குறித்த விசாரணையை பண்டாரவளை பொலிஸார் மேற்கொண்டு
வருகின்றனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக