siruppiddy

18

siruppiddy

unkal

unkal

திங்கள், 27 டிசம்பர், 2021

அமரர் தம்பு. துரைராஜாவின்19ம் ஆண்டு நீங்காத நினைவுகள் 27.12.2021

மலர்வு .15-.04-1926. உதிர்வு .14-01.2004திதி -27-12-2021யாழ் நவற்கிரி புத்தூரை பிறப்பிடமா​வும் வசிப்பிடமா​கவும் மாகக் கொண்டஅமரர் ,தம்பு துரைராஜா.அமரர் துரைராஜா-சிதம்பரம். (பூரணம்).அமரர் துரைராஜா தங்கரத்தினம்.தோற்றம் 06-05-1949-மறைவு-23-01-2005.(தங்காள் ) அமரர் இராசையா கனகசபாபதி.தோற்றம் 01-04-1949- (தேவர் பிறப்பிடம் கோண்டாவில் ).வாழ்ந்த இடம்நவற்கிரி.)அகியோரின்  நீங்காத நினைவுடன் பத்தொன்பதாவது ஆண்டு நினைவஞ்சலி.(திதி )27-12-.2021.இன்றுபத்தொன்பது...

வெள்ளி, 24 டிசம்பர், 2021

இலங்கையில் இன்றைய நாளின் வானிலை தொடர்பின் செய்தி

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் சீரான வானிலைநிலவும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.நுவரெலியா மாவட்டத்தில் சில இடங்களில் அதிகாலை வேளையில் துகள் உறைபனி உருவாகக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.மேல், சப்ரகமுவ, மத்திய, வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் காலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இங்குஅழுத்தவும் நவற்கிரி.இணையச்செய்திகள் >>>...

வியாழன், 23 டிசம்பர், 2021

நாட்டி மின் துண்டிப்பு தொடர்பில் இலங்கை மின்சார சபை விடுத்துள்ள செய்தி

நுரைச்சோலை அனல் மின் நிலையத்தின் மின் பிறப்பாக்கியில் ஏற்பட்ட கோளாறு காரணமாக நாளொன்றில் சுமார் 45 நிமிடங்கள் மின்சார துண்டிப்பை மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது.மின்பிறப்பாக்கி புனரமைக்கப்படும் வரை இன்னும் சில நாட்களுக்கு நாளாந்த மின் துண்டிப்பு தொடரும் என மின்சக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.அவசியம் கருதி, தினசரி மாலை 6 மணி முதல் இரவு 9.30 மணிவரை இந்த மின் துண்டிப்பு மேற்கொள்ளப்படவுள்ளது.எவ்வாறாயினும், கோளாறு ஏற்பட்டுள்ள மின்பிறப்பாக்கியிலிருந்து...

புதன், 22 டிசம்பர், 2021

நாட்டில் எரிபொருளுக்கான விலை மேலும் அதிகரிக்க வாய்ப்பு

மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ராலின் கோரிக்கைக்கு அமைய, நேற்றுமுன்தினம் அதிகரிக்கப்பட்ட எரிபொருள் விலையை விடவும், எரிபொருளுக்கான விலை மேலும் அதிகரித்திருக்க வேண்டும் என கூறப்படுகிறது.மத்திய வங்கி ஆளுநர், நிதி அமைச்சருக்கு அனுப்பிய கடித்தை மேற்கோள்காட்டி தென்னிலங்கை ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.மத்திய வங்கி ஆளுநரின் கடிதத்தின் பிரகாரம், ஒரு லீட்டர் பெற்றோலின் விலையை 35 ரூபாவாலும், ஒரு லீட்டர் டீசலின் விலையை 24 ரூபாவாலும், ஒரு லீட்டர்...

செவ்வாய், 21 டிசம்பர், 2021

அன்பு மனைவிக்கு யூடியூப் உதவியுடன் பிரசவம் பார்த்த கணவர்

தமிழ்நாட்டின், ராணிப்பேட்டை மாவட்டம், நெடும்புலி கிராமத்தில் யூடியூப் பார்த்து மனைவிக்குப் பிரசவம் பார்த்த கணவர் உள்ளிட்ட இருவரை தேடி காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.மேற்படி பகுதியைச் சேர்ந்த 32 வயதான நபரொருவரே 28 வயதான தனது மனைவிக்குப் பிரசவம் பார்த்துள்ளதாக தெரியவந்துள்ளது. இப்பெண்ணுக்கு கடந்த 13ஆம் திகதி பிரசவ திகதியாக மருத்துவர்கள் குறிப்பிட்டிருந்தனர்.எனினும், அத்திகதியில் பிரசவ வலி ஏற்படவில்லை. இந்நிலையில், 19-12-2021.அன்று...

சனி, 18 டிசம்பர், 2021

மரண அறிவித்தல் திருமதி தனையா புவனேஷ்வரி (புவனேஸ் ) 18.12.21

தோற்றம்  08-06-1932 -மறைவு  18-12-2021 யாழ் தோப்பு அச்சுவேலியை பிறப்பிடமாகவும்.நவற்கிரி புத்தூரை  வதிவிடமாகவும்  தற்போது தோப்பில் வசித்துவந்த  திருமதி தனையா புவனேஷ்வரி (புவனேஸ் )  அவர்கள் 18.12.2021. சனிக்கிழமை  அன்று இயற்கை எய்தியுள்ளார் அன்னார் காலம்சென்ற வேலுப்பிள்ளை சின்னாச்சி ஆகியோரின் பாசமிகுமகளும்   காலம்சென்ற தனையா வின் அன்பு மனைவியும் விஜயலக்சுமி பார்த்தசாரதி  நீதிராஜா  தயாநிதி ...

புதன், 15 டிசம்பர், 2021

தெற்கு நெடுஞ்சாலையில் இடம் பெற்ற பாரிய விபத்தில்; தந்தையும்,மக்களும் பலி

இலங்கை தெற்கு அதிவேக நெடுஞ்சாசலை மில்லினிய பகுதியில் காரொன்று விபத்துக்குள்ளானதில் தந்தை, மகள் இருவரும் உயிரிழந்துள்ளனர்.குறித்த காரில் பயணித்த 39 வயதுடைய தந்தையும் 4 வயது மகளுமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.மேலும் மூவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளதுடன் மேலதிக விசாரணையையும் முன்னெடுத்துள்ளனர். இங்குஅழுத்தவும் நவக்கிரி.இணையச்செய்திகள் >>&...

இந்துபுரம் பகுதியில்ஏ 9 வீதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் முதியவர் உயிரிழப்பு

நாட்டில்முல்லைத்தீவு மாவட்டத்தின் மாங்குளம் பிரிவுக்குட்பட்ட ஏ 9 வீதியில் இந்துபுரம் பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.14-12-2021.அன்று இரவு பத்து மணியளவில் வீதியில் துவிச்சக்கர வண்டியில் சென்றுகொண்டிருந்த போது விபத்து காரணமாக உயிரிழந்துள்ளார்.சம்பவத்தில் உயிரிழந்தவர் திருமுறிகண்டி வசந்தநகர் பகுதியை சேர்ந்த 61 வயதுடைய  சுப்பிரமணியம் முருகேசு (சந்திரன்) என்பவராவார்.சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற மாங்குளம் காவற்துறையினர்...

நாட்டில் தடுப்பூசி அட்டை வைத்திருப்பவர்களுக்கு முக்கிய அறிவிப்பு

இலங்கையில் மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள கோவிட் தடுப்பூசி செலுத்திக் கொண்டமையை உறுதிப்படுத்தும் சுகாதார அட்டையை லெமினேட் செய்ய வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.தற்போறைய நிலைமையை அமைய நான்காவது தடுப்பூசி செலுத்த வேண்டிய தேவை ஏற்படலாம் என்பதால், சுகாதார அட்டையைலெமினேட் செய்ய வேண்டாம் என சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.கோவிட் தடுப்பூசி அட்டைகளை பாதுகாப்பாக வைத்திருக்குமாறு சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் நாயகம், மருத்துவர் ஹேமந்த ஹேரத் பொதுமக்களிடம்...

திங்கள், 13 டிசம்பர், 2021

கண்டியில் எரிவாயு வெடித்து பெண் உயிரிழப்பு.நஷ்ட்டஈடு கோரும் குடும்பத்தினர்

இலங்கை கண்டியில் சமையல் எரிவாயு வெடித்தமையினால் காயங்களுக்கு உள்ளான பெண் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார்.இந்நிலையில் உயிரிழந்த பெண்ணின் கணவர் உட்பட குடும்பத்தினர் எரிவாயு நிறுவனத்திற்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யத் தீர்மானித்துள்ளனர். அதற்கமைய 10 கோடி ரூபாய் நட்டஈடு கோரி வழக்கு தாக்கல் செய்யவுள்ளதாக அவரது கணவர் குறிப்பிட்டுள்ளார்.உயிரிழந்தவர் 51 வயதுடைய நான்கு பிள்ளைகளின் தாயாவார். மாத்தளை வில்கமுவ பிரதேசத்தை சேர்ந்த குறித்த பெண், தனது பிள்ளைகளின்...

மாத்தளை வில்கமுவ வில் எரிவாயு அடுப்பு வெடித்து பெண் உயிரிழப்பு.10 கோடி இழப்பீடு கோரும் கணவர்

நாட்டில்  மாத்தளை –வில்கமுவ வில் எரிவாயுடன் தொடர்புடைய வெடிப்பு சம்பவத்தில் எரிகாயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்த பெண்ணின் கணவரினால் சமையல் எரிவாயு நிறுவனத்திற்கு எதிராக வழக்கு தொடர தீர்மானித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.இது தொடர்பில் தென்னிலங்கை ஊடகமொன்றிற்கு அவர் வழங்கி செவ்வியின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.உயிரிழந்த பெண்ணின் கணவர் மற்றும் உறவினர்களினால், 10 கோடி ரூபா இழப்பீடு கோரி குறித்த வழக்கினை தாக்கல்...

ஞாயிறு, 12 டிசம்பர், 2021

நாட்டில் 20 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான முக்கிய அறிவிப்பு

20 வயதுக்கு மேற்பட்ட சகலரும் மூன்றாம் கட்ட தடுப்பூசியைப் பெற்றுக்கொள்ள முடியும் என இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்தார்.அதற்கமைய, இரண்டாம் கட்ட தடுப்பூசியைப் பெற்று 3 மாதங்கள் நிறைவடைந்துள்ள தகுதியுடை நபர்கள் எந்தவொரு தடுப்பூசி நிலையத்திற்கும் சென்று மூன்றாம் கட்டதடுப்பூசியை பெற்றுக் கொள்ள முடியும் என அவர் அறிவித்துள்ளார்.முதல் இரு கட்டங்களாகவும் அஸ்ட்ரசெனகா, சினோபார்ம், ஸ்புட்னிக் மற்றும் மொடர்னா என எவ்வகை தடுப்பூசியைப் பெற்றுக்கொண்டவர்களும் மூன்றாம்...

வெள்ளி, 10 டிசம்பர், 2021

நாட்டில் 1 Kg அரிசியின் விலை 500 ரூபா வெளியான அதிர்ச்சித் தகவல்.

இலங்கையில் ஒரு கிலோ கிராம் அரிசியில் விலை 500 ரூபாயை விடவும் அதிகரிக்க வாய்ப்புகள் உள்ளது என பிரதமர் மகிந்த ராஜபக்சவின் குடும்ப உறுப்பினரான இராஜாங்க அமைச்சர் சசீந்திர ராஜபக்ச (Shashindra Rajapaksa) தெரிவித்துள்ளார்.நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.தொடர்ந்தும் அவர் கருத்துத் தெரிவிக்கையில், முன்னதாக ஒரு தொன் யூரியா 278 அமெரிக்க டொலர்களுக்கு இறக்குமதி செய்யப்பட்டது. இந்த நிலையில் இன்று ஒரு டன்...

மரண அறிவித்தல்திரு சின்னப்பு சுப்பிரமணியம் (ஏழாலை மணியம்)10.12.21

பிறப்பு-15 01 1940-இறப்பு-10 12-2021யாழ். ஏழாலையைப் பிறப்பிடமாகவும், சிறுப்பிட்டியை வசிப்பிடமாகவும் கொண்ட சின்னப்பு சுப்பிரமணியம் அவர்கள் 10-12-2021 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.அன்னார், காலஞ்சென்ற சின்னப்பு, வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்ற தம்பிப்பிள்ளை, தங்கம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,நாகம்மா அவர்களின் அன்புக் கணவரும்,உதயகுமார்(சுவிஸ்), தேவலதா(கனடா), பிரேமலதா(பிரான்ஸ்), உதயராசா(ஐக்கிய அமெரிக்கா) ஆகியோரின் அன்புத்...

செவ்வாய், 7 டிசம்பர், 2021

மரண அறிவித்தல்திரு அப்பாப்பிள்ளை ராசலிங்கம் 07.12.21

யாழ். சுழிபுரம் கிழக்கைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Zürich ஐ வதிவிடமாகவும் கொண்ட அப்பாப்பிள்ளை இராசலிங்கம் அவர்கள் 07-12-2021 செவ்வாய்க்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான அப்பாப்பிள்ளை சிவஞானம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற சண்முகநாதன்(அளவெட்டி), தவபூபதி(தொல்புரம்) தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,சுதர்சினி(சுதா) அவர்களின் அன்புக் கணவரும்,ஆறுமுகசாமி(கனடா), காலஞ்சென்ற செல்வநாயகம்(செல்வம்), ஞானகிருஸ்ணசாமி(தவம்- இலங்கை),...

திங்கள், 6 டிசம்பர், 2021

நாட்டில் புதிய அடையாளத்துடன் சந்தைக்கு வரும் எரிவாயு

நுகர்வோர் விவகார அதிகாரசபையின் வழிகாட்டல்களுக்கு உட்பட்டு சந்தைக்கு வெளியிட லிட்ரோ கேஸ் நடவடிக்கை எடுத்துள்ளது.அதன்படி, புதிய சிலிண்டர்கள் வெள்ளை மற்றும் சிவப்பு பின்னணியில் லிட்ரோ கேஸ் நிறுவனத்தின் சின்னத்துடன் பொலித்தீன் சீல் வைக்கப்பட்டுள்ளது. இதேவேளை, இன்றும் நாட்டின் பல்வேறு பகுதிகளில் வாயு கசிவு காரணமாக வெடிப்புச் சம்பவங்கள் பல பதிவாகியுள்ளன. காலி, தல்கம்பொல பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் 05-12-2021.அன்று  எரிவாயு அடுப்பு வெடித்துள்ளது.பன்னல,...

ஞாயிறு, 5 டிசம்பர், 2021

இலங்கையர் பாகிஸ்தானில் கொடூரமாக கொல்லப்பட்டமைக்கான காரணம்

பாகிஸ்தானில் பணிபுரிந்து வந்த இலங்கையர் கொடூரமாக கொல்லப்பட்டமைக்கான காரணம் குறித்து அந்நாட்டின் உள்ளூர்வாசிகள் வெளிப்படுத்தியுள்ளதாக மேற்கோள்காட்டி செய்திகள் வெளியாகியுள்ளன.உயிரிழந்த நபர் சியல்கோட் மாவட்டத்தில் உள்ள ஒரு தொழிற்சாலையில் பணியாற்றி வந்த நிலையில் அவரது அலுவலக சுவர் அருகே தெஹ்ரீக் – இ – லபைக் என்ற அமைப்பின் மதப் பிரச்சார சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.அதை குறித்த நபர் கிழித்து எறிந்துள்ளதாக தெரிவிக்கப்படும் நிலையில் இதை பார்த்த தொழிற்சாலை...

சனி, 4 டிசம்பர், 2021

மரணஅறிவித்தல் திருமதி செல்வராஜா மனோன்மணி 04.12.2021

யாழ்  சிறுப்பிட்டி வடக்கை பிறப்பிடமாகவும் பிரான்ஸ் நாட்டில் வாழ்ந்து வந்தவருமானதிருமதி செல்வராஜா மனோன்மணி அவர்கள்  04 12 2021 அன்று  இயற்கை எய்தியுள்ளார்அன்னார் காலம்சென்ற தம்பிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும்.காலம் சென்ற செல்வராஜா அவர்களின் பாசமிகு மனைவியும்.குணரத்தினர் (தாயகம்) கந்தசாமி (யேர்மனி) ஆகியோரின் பாசமிகு அக்காவும்.சிவகுசா (பிரான்ஸ்) கலாதேவன் (சுவிஸ்)கலாறஞ்சினி ( யேர்மனி) கலாரூபன் (தாயகம்) ஆகியரின் அப்புத்தாயாரும்,விஜயலச்சுமி...

வெள்ளி, 3 டிசம்பர், 2021

புகையிரதத்துடன் கப் ரக வாகனம் ஒன்று மோதி விபத்து ஒருவர் பலி

யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி சென்று கொண்டிருந்த புகையிரதத்துடன் கப் ரக வாகனம் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் 03-12-2021.இன்று  ஒருவர் மரணமடைந்துள்ளார்.குறித்த விபத்தில் தவசிகுளம், கொடிகாமம் பகுதியை சேர்ந்த 32 வயதுடைய சூசைநாதன் பிரதீபன் என்பவரே இவ்வாறு மரணமடைந்துள்ளார்.மஞ்சள் நிற சமிக்கை விளக்கு ஒளிர்ந்து கொண்டிருந்த போது குறித்த வாகனம் கடவையை கடக்க முற்பட்ட போதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.இதன்போது விபத்தில் படுகாயமடைந்தவரை...