siruppiddy

18

siruppiddy

unkal

unkal

ஞாயிறு, 30 ஜனவரி, 2022

மரண அறிவித்தல் அமரர் கிருபாகரன் சோமசுந்தரம்

யாழ் அச்சுவேலி தெற்கு ஸ்ரீ விக்னேஸ்வரா வீதியடியை பிறப்பிடமாகவும் நியூயார்க் அமெரிக்காவை வதிவிடமாகவும் பால்ய நண்பர்களால் மாலி என செல்லமாகவும் உறவினர் நண்பர்களால் மாமாலி என இடுபெயரால் அழைக்கப்பட்டவரும் எமது நெருங்கிய உறவினருமான  உயர்திரு "கிருபாகரன் சோமசுந்தரம்"அவர்களின் பிரிவுச்செய்தியறிந்து மிகவும் மனம்வருந்துகிறோம்
                ஸ்ரீ விக்னேஸ்வரா சனசமூக நிலையத்தின் வெள்ளிவிழாவை   தனது தலைமையில் தன்வயதொத்த இளவல்களான மறைந்த பாலன் அண்ணா ,தம்பிராஜா அண்ணர் ,மற்றும் சுந்தரம் அண்ணா போன்ற செயல்வீரர்களை நிர்வாகத்தில் முன்னிலைப்படுத்தி ஊர் மக்களின் பூரண ஒத்துழைப்புடன்  உள்ளூர் கலைஞர்களுக்கு  முக்கியத்துவமளித்து  வடபகுதியே வியக்கும்வண்ணம் பெரும்பொருட்செலவில்  இரண்டு நாட்கள் தொடர்ந்து விழாவை வெற்றிகரமாக  நடாத்திமுடித்த பெருமையின் முக்கிய நாயகன் இவரென்பது இங்கு குறிப்பிட்டே ஆகவேண்டும் 
                சிறந்த கல்விமானும், பல்மொழிகளை சரளமாக பேசும் சக்திமிக்கவராகவும், மிகுந்த நகைச்சுவையாளனுமாகிய இவர் காங்கேசன்துறை ,புத்தளம் சீமெந்து தொழில்சாலையில்   பொருட்கள் கொள்வனவு முகாமையாளராக (purchasing manager ) புலம்பெயரும்வரை மிகவுயர்ந்த பதவி வகித்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் 
அனைவரையும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
எமது நவற்கிரி நிலாவரை  இணையங்களின் 
 கண்ணீர் அஞ்சலி 
அன்னாரின் பிரிவால்
 துயருறும் குடும்பத்தினருக்கு  
 ஆழ்ந்த அனுதாபங்களை 
தெரிவித்து அன்னாரின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்தித்து ,
 எமது ஆறுதலையும் பகிர்ந்து கொள்கின்றோம் 
ஓம்சாந்தி !!! ஓம்சாந்தி !!! ஓம்சாந்தி !!! 
தகவல்: குடும்பத்தினர்

இங்குஅழுத்தவும் நவற்கிரி.இணையச்செய்திகள் >>>



0 கருத்துகள்:

கருத்துரையிடுக