siruppiddy

18

siruppiddy

unkal

unkal

புதன், 10 ஆகஸ்ட், 2022

இலங்கையில் மண்ணெண்ணெய் நெருக்கடிக்கு கிட்டியது தீர்வு அமைச்சர் தகவல்

மண்ணெண்ணெய் விநியோகம் எதிர்வரும் 19 ஆம் திகதி முதல் தொடரும் என எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர 
தெரிவித்துள்ளார்.
சபாநாயகர் தலைமையில் இன்று(10) நாடாளுமன்ற கூடிய போது மண்ணெண்ணெய் விநியோகம் தொடர்பில் எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹெக்டர் அப்புஹாமி முன்வைத்த கேள்விக்கு பதிலளித்த போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
தொடர்ந்தும் பதில் வழங்கிய அவர்,
“சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் மூடப்பட்டதால் கடற்றொழிலாளர்கள், குறைந்த வருமானம் பெறும் தரப்பினருக்கு மண்ணெண்ணெய் விநியோகத்தில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்பதை ஏற்றுக்கொள்கிறோம்.
புத்தளம், தங்காலை, கிரிந்திவெல ஆகிய பகுதிகளில் கடற்றொழிலாளர்களுக்கு மட்டுப்படுத்தப்பட்ட அளவில் மண்ணெண்ணெய்
 விநியோகிக்கப்பட்டுள்ளது.
மசகு எண்ணெய் கப்பல் எதிர்வரும் 13 ஆம் திகதி நாட்டை வந்தடையும். சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் 15 ஆம் திகதி திறக்கப்பட்டு 19 ஆம் திகதி முதல் மண்ணெண்ணெய் விநியோகம் வழமை போல் முன்னெடுக்கப்படும்.
கடற்றொழிலாளர்கள், குறைந்த வருமானம் பெறும் தரப்பினருக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்ற காரணத்தினால் ஒரு லீற்றர் மண்ணெண்ணெய் 87 ரூபாவிற்கு வழங்கப்படுகிறது.
ஒரு சில பேருந்து உரிமையாளர்கள் டீசலுக்கு பதிலான மண்ணெண்ணெயை பயன்படுத்துகிறார்கள்.எதிர்வரும் நாட்களில் மண்ணெண்ணெய் விலை திருத்தம் செய்யப்படும்” என்றார்.

இங்குஅழுத்தவும் நவற்கிரி .இணையச்செய்திகள் >>>




0 கருத்துகள்:

கருத்துரையிடுக