ஆப்பிரிக்க நாடான அல்ஜீரியாவில் ஆண்டுதோறும் காட்டுத்தீ பரவுவது வழக்கம். இதேபோன்று தற்போதும் வடபகுதியில் உள்ள 8 மாகாணங்களில் திடீரென காட்டுத்தீ வேகமாக பரவி வருகிறது. இந்த காட்டுத்தீயில் சிக்கி 37 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக உள்துறை மந்திரி கமெல் பெல்ஜாத் கூறியுள்ளார். இந்நிலையில் வேகமாக பரவி வரும் காட்டுத்தீயை கட்டுக்குள் கொண்டு வருவதற்காக தீயணைப்புத்துறை வீரர்கள் கடுமையாக
போராடி வருகின்றனர்.
அதோடு ஹெலிகாப்டர் மூலமாகவும் தீயை அணைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனையடுத்து தீ கட்டுக்குள் வராத காரணத்தினால் நூற்றுக்கணக்கான மக்கள் தங்களுடைய வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளனர்.
இந்த காட்டுத்தீயினால் தற்போது வரை 16 நகரங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் காட்டுத் தீயில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அந்நாட்டு அதிபர் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக