புத்தளம் - கொழும்பு பிரதான வீதியின் தெமடபிடிய 20-08-2022.அன்றிரவு இடம்பெற்ற வீதி விபத்தில் பெண் ஒருவர்
உயிரிழந்துள்ளார்.
இந்த விபத்தில் உயிரிழந்துள்ள பெண் யார், அவர் எந்த பகுதியைச் சேர்ந்தவர் என்பது பற்றி இதுவரை அடையாளம் காணப்படவில்லை என
பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் நடந்த நேற்றிரவு பேலியகொட பகுதியை நோக்கிப் பயணித்த லொறியொன்று, வீதியின் குறுக்கே நடந்து சென்றுகொண்டிருந்த பெண்ணொருவர் மீது மோதியுள்ளதாக
தெரிவிக்கப்படுகிறது.
இந்த விபத்தில் படுகாயமடைந்த குறித்த பெண்ணை அங்கிருந்தவர்கள் உடனடியாக நீர்கொழும்பு வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுதித்த போதிலும் அவர் அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார் என
பொலிஸார் குறிப்பிட்டனர்.
உயிரிழந்த பெண்ணின் சடலம் பிரேத பரிசோதனைக்காக நீர்கொழும்பு வைத்தியசாலையின் பிரேத அறையில்
வைக்கப்பட்டுள்ளது.
விபத்துடன் தொடர்புடைய லொறியின் சாரதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த விபத்துச் சம்பவம் தொட்பில் மாரவில பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு
வருகின்றனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக