siruppiddy

18

siruppiddy

unkal

unkal

வியாழன், 22 செப்டம்பர், 2022

நாட்டில் மின்கட்டண உயர்வால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள வழிபாட்டு தலங்கள்

இன்று மின்சாரக் கட்டணம் தாங்க முடியாத அளவுக்கு உயர்ந்துள்ளதாகவும், இது தொடர்பில் சமூகத்தில் அழுத்தங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
குறிப்பாக மதத் தலைவர்கள் குழுவை தாம் சந்தித்ததாகத் தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர், இது தொடர்பில் சமய ஸ்தலங்கள் எதிர்நோக்கும் பிரச்சினை பாரதூரமானது என்றும் 
தெரிவித்தார்.
நாடு வங்குரோத்து நிலையை அடைந்துள்ள போதிலும், உரிய முறையில் திட்டமிடப்பட்டால் நாட்டின் அத்தியாவசியமான இடங்களுக்கு புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உள்ளிட்ட ஆதாரங்களைப் பெறுவதற்கு சர்வதேசத்தின் ஆதரவைப் பெற முடியும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் 
நினைவு கூர்ந்தார்.
ஆனால் இது தொடர்பில் அரசாங்கத்திடம் பணிப்புரை இல்லை என்று கூறிய எதிர்க்கட்சித் தலைவர், மாறாக அரசாங்கம் மதத் தலைவர்களையும் ஏனைய மக்களையும் விமர்சித்து வருவதாகக் 
கூறினார்.
தற்போதைய சூழ்நிலையில், ஜனரஞ்சக, மக்களை மையமாகக் கொண்ட மறுசீரமைப்புச் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட வேண்டுமென எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் இன்று கருத்து வெளியிடும் போதே எதிர்க்கட்சித் தலைவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



0 கருத்துகள்:

கருத்துரையிடுக