யாழ்.வட்டுக்கோட்டை சந்தியில் 17-09-2022.அன்று சனிக்கிழமை இடம்பெற்ற விபத்தில் இரு பெண்கள் தெய்வாதீனமாக உயிர்தப்பியுள்ள சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது, மாதகலை சேர்ந்த சித்தியும்
(வயது 39) பெறா மகளும் (வயது 20) அராலியில் உள்ள உறவினர்களது வீட்டிற்கு பிறந்தநாள் கொண்டாட்டத்திற்கு சென்றுவிட்டு திரும்பிக்கொண்டிருந்தனர்.
அப்போது காரைநகரில் இருந்து யாழ்ப்பாணம்
நோக்கி பயணித்துக் கொண்டிருந்த டிப்பர் வாகனம் வட்டுக்கோட்டை சந்தியில் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதனால் மோட்டார் சைக்கிள் சேதமாகியுள்ளது.
மோட்டார் சைக்கிளில் பயணித்த இரண்டு பெண்களுக்கும் காயங்கள் எதுவுமின்றி தெய்வாதீனமாக
தப்பியுள்ளனர். விபத்தினை ஏற்படுத்திய டிப்பர் சாரதி வட்டுக்கோட்டை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை வட்டுக்கோட்டை பொலிஸார்
மேற்கொண்டு வருகின்றனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக