¨¨இலங்கையில் சர்வதேச கால்பந்தாட்ட மைதானத்தை நிர்மாணிப்பது தொடர்பில் சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ கட்டார் கால்பந்து சம்மேளனத்தின் தலைவர் Sheik Hamad Bin Khalifa Bin Ahmed Al-Thani உடன் கலந்துரையாடியுள்ளார்.
இலங்கைக்கு குறிப்பாக விளையாட்டு சுற்றுலாவிற்கு உதவுவது தொடர்பாக பயனுள்ள கலந்துரையாடல் ஒன்று நடத்தப்பட்டதாக ஹரின் டுவிட்டரில் வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவித்தார்.
இலங்கையில் சர்வதேச கால்பந்தாட்ட மைதானத்தை அமைப்பதற்கு காணி வழங்குவது தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டதாக அமைச்சர்
மேலும் தெரிவித்தார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக