நாட்டில் நாளாந்த மின்வெட்டு நேரம் அதிகரிக்கப்பட்டுள்ளதாக இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.இதற்கமைய,27-09-2022. இன்று 03 மணித்தியாலங்களாக மின்வெட்டு நேரம் நீடிக்கப்பட்டுள்ளதாக இலங்கை பொதுப் பயன்பாடுகள்
ஆணைக்குழு அறிவித்துள்ளது.
நுரைச்சோலை அனல்மின் நிலையத்தில் மூன்றாவது மின் உற்பத்தி செய்யும் இயந்திரம் தொழில்நுட்ப கோளாறு காரணமாக செயலிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியிருந்தன.இதன் காரணமாக
மின்வெட்டு நேரம்
நீடிக்கப்பட வேண்டியிருக்கும் என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தலைவர் ரத்நாயக்க எச்சரிக்கை விடுத்திருந்தார்.இதற்கமைய நாளாந்த மின்வெட்டு நேரம் 03 மணித்தியாலங்களாக நீடிக்கப்பட்டுள்ளதாக தற்போது அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்க
விடயமாகும்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக