siruppiddy

18

siruppiddy

unkal

unkal

புதன், 30 நவம்பர், 2022

நிலக்கரி சுரங்கம் இடிந்து விழுந்ததில் பாகிஸ்தானில் 9 தொழிலாளர்கள் உயிரிழப்பு

பாகிஸ்தானின் கைபர் பாக்துன்க்வா மாகாணம் ஒரக்சாய் மாவட்டத்தில் உள்ள நிலக்கரி சுரங்கத்தின் மேற்பகுதி இன்று திடீரென இடிந்து விழுந்துள்ளது. தொழிலாளர்கள் வழக்கம்போல் வேலை செய்துகொண்டிருந்தபோது, எரிவாயு தீப்பற்றியதால் விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் தொழிலாளர்கள் சிக்கிக்கொண்டனர். இதுபற்றி தகவல் அறிந்த மீட்புக்குழுவினர் சம்பவ இடத்திற்கு சென்று மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். சுரங்க இடிபாடுகளில் இருந்து 9 பேரின் உடல்கள்...

செவ்வாய், 29 நவம்பர், 2022

அம்பிட்டிய பிரதேசத்தில் எரிக்கப்பட்ட 09 ஏ பெறுபேற்றை பெற்ற மாணவன்

வெளியான க.பொ.த சாதாரண தர பரீட்சை பெறுபேற்றில் ஒன்பது “ஏ” பெறுபேறுகளை பெற்ற அம்பிட்டிய பிரதேசத்தில் வசிக்கும் மாணவன், அப்பகுதியில் உள்ள கும்பலைச் சேர்ந்த ஒருவரால் எரிக்கப்பட்டுள்ளார்.இதனால் குறித்த மாணவன் தற்போது பலத்த தீக்காயங்களுடன் கண்டி தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்இந்த குண்டர், மாணவனை இழுத்துச் சென்று மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துள்ளார். அம்பிட்டிய புனித பெனடிக்ட் பாடசாலையில் கல்வி கற்கும் மாணவர் ஒருவரே இந்தக் குற்றச் சம்பவத்தில்...

திங்கள், 28 நவம்பர், 2022

ஒரே நாளில் இலங்கை கிரிக்கெட் அணியின் மூன்று வீரர்களுக்கு திருமணம்

இலங்கை கிரிக்கெட் அணியின் மூன்று வீரர்கள்.28-11-2022. இன்று திருமண பந்தத்தில் இணைந்துகொண்டுள்ளனர்.கசுன் ராஜித, சரித் அசலங்கா மற்றும் பாத்தும் நிஸ்ஸங்க ஆகியோர் கொழும்பில் மூன்று தனித்தனி இடங்களில் திருமணம் செய்து கொண்டனர்.கண்டி பல்லேகலவில் நேற்று ஆப்கானிஸ்தானுக்கு எதிராக விளையாடிய இலங்கை அணியில் இந்த வீரர்கள் இடம்பெற்றிருந்தனர்.திருமண நிகழ்ச்சிகளைத் தொடர்ந்து இன்று மாலைக்குள் அவர்கள் அணிக்குத் திரும்புவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.கண்டி,...

ஞாயிறு, 27 நவம்பர், 2022

நாட்டில் ஒரு இலட்சம் சமையல் எரிவாயு சிலிண்டர்கள் சந்தைக்கு விநியோகம்

சமையல் எரிவாயு சிலிண்டர்களை நாளாந்தம் சந்தைகளுக்கு விநியோகிக்கவுள்ளதாக லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது..நாளை(28) மற்றும் நாளைமறுதினம் ஆகிய தினங்களில்(29) தலா 40,000 சமையல் எரிவாயு சிலிண்டர்கள் விநியோகிக்கப்படும் என லிட்ரோ நிறுவனம் அறிக்கையொன்றை வௌியிட்டுள்ளது.அத்துடன் ஹோட்டல்கள், தொழிற்சாலைகள் மற்றும் அத்தியாவசிய தேவைகளுக்காக மாத்திரம் இன்றையதினம் (27) சிலிண்டர்கள் விநியோகிக்கப்பட்டதாகவும் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.பண்டிகைக் காலங்களில்...

சனி, 26 நவம்பர், 2022

மரண அறிவித்தல் திருமதி சிவனஞாம் மங்கையற்கரசி 26-11-2022

மண்ணில் -30-03-1933-விண்ணில் -26-11-2022.யாழ்.  நவற்கிரி புத்தூரைய்  பிறப்பிடமாகவும்,நல்லூரை  வசிப்பிடமாக்கொண்ட திருமதி சிவனஞாம் மங்கையற்கரசி  26-11-2022 சனிக்கிழமை அன்று  சிவபதம் அடைந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லத்துரை வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும்,காலஞ்சென்றவர்களான சண்முகம் செல்லம்மா தம்பதிகளின்அன்பு மருமகளும் திரு சிவனஞாம் (அஜந்தால்ரெக்ஸ்ரை யில் யாழ்பாணம்) அவர்களின் பாசமிகு மனைவியும் ஞாரூபனின் அன்புத்தாயாரும்...

வெள்ளி, 25 நவம்பர், 2022

தொண்டைமானாற்றல் உயிரிழந்த நிலையில் முதலையொன்று வீதியில் காணப்பட்டுள்ளது

யாழ் அச்சுவேலியில் இருந்து தொண்டைமானாறு செல்லும் வீதியிலேயே முதலை வீதிக்கு குறுக்காக உயிரிழந்த நிலையில் இருப்பதாக இன்று அவ்வீதியால் பயணித்தவர்கள் தெரிவிக்கின்றனர்.உயிரிழந்த முதலையை அகற்றுவதற்கு உரிய தரப்பினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.தொண்டைமானாறு ஏரியில் முதலை இருப்பதாக ஏற்கனவே பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது. இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>...

வியாழன், 24 நவம்பர், 2022

கனகராஜன்குளத்தில் பேருந்து டிப்பர் மோதி விபத்து.10க்கும் மேற்பட்டோர் படுகாயம்

வவுனியா கனகராஜன்குளம் பகுதியில்.24-11-2022. இன்று காலை பேருந்து மற்றும் கனரகவாகனம் (டிப்பர்) மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.குறித்த விபத்தில் டிப்பர் சாரதி மற்றும் பேருந்தில் பயணித்த பயணிகள் உட்பட 10 க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்து வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.இன்று (24) காலை 5.30 மணியளவில் இடம்பெற்ற விபத்து சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், தங்காலையிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி சென்ற பேருந்தும், மாங்குளத்திலிருந்து கனகராயன்குளம்...

புதன், 23 நவம்பர், 2022

நாட்டில் அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகள் சடுதியாக குறைப்பு

நான்கு அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகளை லங்கா சதொச நிறுவனம் குறைத்துள்ளது.24-11-2022.நாளை முதல் நடைமுறைக்கு வரும் வகையில் இந்த விலை குறைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.இதன்படி, ஒரு கிலோ வெள்ளை சீனியின் விலை 229 ரூபாவாகவும், ஒரு கிலோ கோதுமை மாவின் விலை 265 ரூபாவாகவும், ஒரு கிலோ வெள்ளைப்பூண்டின் விலை 495 ரூபாவாகவும் குறைக்கப்பட்டுள்ளது.அத்துடன், ஒரு கிலோ பெரிய வெங்காயத்தின் விலை 255 ரூபாவாக குறைக்கப்பட்டுள்ளதாக லங்கா சதொச நிறுவனம் அறிவித்துள்ளது....

செவ்வாய், 22 நவம்பர், 2022

குடியிருப்பின் மீது கொலம்பியாவில் விழுந்த விமானம் - 8 பேர் உயிரிழப்பு

கொலம்பியாவின் மெடலின் நகரில் உள்ள ஓலயா ஹெர்ரேரா விமான நிலையத்தில் இருந்து 21-11-2022.அன்று  காலை ஒரு சிறிய ரக விமானம் புறப்பட்டுள்ளது. புறப்பட்ட சிறிது நேரத்திலேயே விமானத்தின் இயந்திரம் செயலிழந்து அருகில் இருந்த குடியிருப்பு பகுதியில் விழுந்து தீப்பிடித்தது. இதில் விமானத்தில் இருந்த 6 பயணிகள் மற்றும் இரண்டு பணியாளர்கள் உட்பட 8 பேரும் இறந்துள்ளனர். இந்த விபத்தில் ஏழு வீடுகள் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. மற்றும் ஆறு கட்டிடங்கள்...

திங்கள், 21 நவம்பர், 2022

இந்தோனேசியாவின் மேற்கு ஜாவாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் பலர் உயிரிழப்பு

இந்தோனேசியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 44 ஆக அதிகரித்துள்ளது.இந்தோனேசியாவின் ஜாவா தீவுகளில்.21-11-2022. இன்று பிற்பகல் ஏற்பட்ட இந்த நிலநடுக்கமானது 5.6 ரிச்டர் அளவான வலுவான நிலையில் பதிவாகியுள்ளது.இந்த அனர்த்தத்தில் 300க்கும் அதிகமானோர் காயமாடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.மேலும், இந்தோனேசியாவின் மேற்கு ஜாவா மாகாணத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் சுமார் 20 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.சியான்பூர்...

ஞாயிறு, 20 நவம்பர், 2022

சாவகச்சேரியில் பெரும் சோகத்தை ஏற்படுத்திய சம்பவம்

யாழ்ப்பாணத்தில் பிறந்து 50 நாட்களேயான பெண் சிசு ஒன்று உயிரிழந்துள்ளது.இச் சம்பவம் சாவகச்சேரியில் இன்று .20-11-2022.இடம்பெற்றுள்ளது.பெண் சிசு அசைவற்று காணப்பட்ட நிலையில் பெற்றோர் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைக்கு சிசுவை எடுத்து சென்றுள்ளனர்.எனினும் சிசு ஏற்கனவே உயிரிழந்துள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளதோடு, சளி காரணமாக சிசு உயிரழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. .20-11-2022.இன்று ஞாயிற்றுக்கிழமை சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் சட்டவைத்திய...

சனி, 19 நவம்பர், 2022

கைதிகளுக்கு இடையே ஈகுவேடார் சிறைச்சாலையில் மோததலில் 10 பேர் பலி

ஈகுவேடார் என்ற தென் அமெரிக்கா நாட்டில் அமைந்துள்ள சிறைச்சாலைகளில் சமீப நாட்களில் கலவரங்கள் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. சிறையில் இருக்கும் கைதிகளிடையே மோதல்  ஏற்பட்டு பெரும் வன்முறையாக மாறி வருவதாக சிறை அதிகாரிகள் தெரிவித்து இருக்கிறார்கள். எனவே, அரசு இவ்வாறான வன்முறைகளை தடுப்பதற்கு சிறையில் குழு தலைவர்களாக இருக்கும் நபர்களை பிற சிறைகளுக்கு மாற்ற தீர்மானித்தது.அந்த வகையில் கோஷ்டி தலைவர்களாக கருதப்படும் மூன்று பேரை வேறொரு சிறைக்கு...

வெள்ளி, 18 நவம்பர், 2022

நாட்டில் நிறுத்தப்பட்ட இரத்த பரிசோதனைகள்; அவதிப்படும் நோயாளர்கள்

இரசாயனப் பதார்த்தங்களின் பற்றாக்குறையால் இரத்தப்பரிசோதனைகள் நிறுத்தப்பட்டுள்ளதாக பல வைத்தியசாலைகள் தெரிவித்துள்ளன.அந்தவகையில் லேடி றிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலை, காசல் வீதி மகளிர் வைத்தியசாலை உட்பட பல வைத்தியசாலைகளில் இவ்வாறு இரத்தப் பரிசோதனைகள் நிறுத்தப்பட்டுள்ளன.இதனால், தனியார் ஆய்வகங்களில் இரத்தப் பரிசோதனை செய்து கொள்ள வேண்டிய நிலைக்கு நோயாளர்கள் தள்ளப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.அதேவேளை , இரசாயனப் பதார்த்தங்கள் தட்டுப்பாடு ஏற்பட்டாலும்...

வியாழன், 17 நவம்பர், 2022

முகமாலை பகுதியில் தூக்கில் தொங்கிய மாணவனால் பரபரப்பு

கிளிநொச்சி முகமாலை பகுதியில் உள்ள றோமன் கத்தோலிக்க பாடசாலை ஒன்றில், 21 வயது இளைஞர் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார் என அதிர்வு இணையம் அறிகிறது. ஒரு வகுப்பறையில் உள்ள மேசை மீது கடிதம் ஒன்றை எழுதி வைத்து விட்டு. அதே வகுப்பறையில் அவர் தூக்கில் தொங்கி உயிரை மாய்த்துள்ளார் என்று மேலும் அறியப்படுகிறது. தற்கொலைக்கான காரணம் என்னவென்று சரியாகத் தெரியவில்லை&nb...

புதன், 16 நவம்பர், 2022

நாட்டில் 8 வருடங்களுக்குள் 20 வீதமானவர்கள் நீரிழிவு நோயினால் பாதிக்கப்படலாம்

இலங்கை சனத் தொகையில் 20 வீதமானவர்கள் 08 வருடங்களுக்குள் நீரிழிவு நோயினால் பாதிக்கப்படும் அபாயம் உள்ளதாக ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை நீரிழிவு நோய் வராமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மருத்துவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.நீரிழிவு நோயை முறையாகக் கட்டுப்படுத்தாவிட்டால் அது நேரடியாக கண்களையே பாதிக்கும் என தேசிய கண் வைத்தியசாலையின் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.  இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>...

செவ்வாய், 15 நவம்பர், 2022

முல்லைத்தீவு காட்டுப்பகுதியில் வெலிஓயா காட்டுக்குள் காணாமல் போன மாணவன் மீட்பு

  வெலிஓயாஇ ஜனகபுர பிரதேசத்தில் வசிக்கும் 12 வயதுடைய பாடசாலைக் சிறுவனொருவன் சுமார் இரண்டு நாட்களாக காணாமல் போயிருந்த நிலையில் கடந்த 13ஆம் திகதி முல்லைத்தீவு காட்டுப்பகுதியில் ஒன்றில் கண்டுபிடிக்கப்பட்டதாக வெலிஓயா பொலிஸார் தெரிவித்தனர்.ஜனகபுர கல்லூரியில் 7ஆம் ஆண்டில் கல்வி கற்கும் இந்த மாணவன் கடந்த 12ஆம் திகதி காலை ஏதோ தேவைக்காக ஜனகபுர பிரதேசத்தில் உள்ள காட்டுப்பகுதிக்கு சென்று வீடு திரும்பவில்லை என மாணவியின் பெற்றோர் வெலிஓயா பொலிஸாருக்கு அறிவித்துள்ளனர்.பின்னர்...

திங்கள், 14 நவம்பர், 2022

மத்திய ஐரோப்பிய ஸ்லோவேனியா நாட்டின் முதல் பெண் அதிபராக நடாசா தேர்வு

மத்திய ஐரோப்பிய நாடான ஸ்லோவேனியாவில் கடந்த மாதம் அதிபர் தேர்தல் நடந்தது. இந்த தேர்தலில் முன்னாள் வெளியுறவு மந்திரி அன்ஷே லோகார் உள்பட 7 பேர் அதிபர் பதவிக்கு போட்டியிட்டனர். இதில் யாருக்கும் வெற்றிக்கு நிர்ணயிக்கப்பட்ட வாக்குகள் கிடைக்காத நிலையில் அன்ஷே லோகார் அதிக வாக்குகளுடன் முதல் இடத்தையும், அவருக்கு அடுத்தபடியாக சுயேட்சை வேட்பளராக களம் இறங்கிய பெண் வக்கீலும், முன்னாள் பத்திரிகையாளருமான நடாசா பிர்க் முசார் 2வது இடத்தையும் பிடித்தனர். இந்த...

ஞாயிறு, 13 நவம்பர், 2022

அமெரிக்கா சாகச நிகழ்ச்சியில் 2ஆம் உலகப் போர் விமானங்கள் விபத்து 06 பேர் பலி

அமெரிக்காவின் தெற்கு மாகாணமான டெக்சாஸில் படைவீரர் தினத்தை முன்னிட்டு முன்னாள் போர் வீரர்களின் நினைவு கூறும் வகையில் போர் விமானங்களின் சாகச நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.இதில் 4 எஞ்சின்கள் கொண்ட பெரிய ரக போயிங் பி-17 குண்டு பொழியும் விமானம் மற்றும் சிறிய ரக பெல் பி-63 கிங்கோப்ரா போர் விமானம் சாகச நிகழ்ச்சியில் ஈடுபட்டிருந்தன. இந்த பெரிய ரக போயிங் விமானம் இரண்டாம் உலகப் போரின் போது ஜெர்மனிக்கு எதிராகவும், சிறிய ரக கிங் கோப்ரா விமானம்...

சனி, 12 நவம்பர், 2022

முறிகண்டி பிள்ளையாரில் வாகனங்கள் நிறுத்தப்படாமையால் விபத்துக்களாம்

யாழ் – கொழும்பு சொகுசு பேருந்து பயண விபத்து கொலைகளை எவ்வாறு தவிர்ப்பது என்பது தொடர்பில் யாழ். போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் த.சத்தியமூர்த்தி வலியுறுத்தியுள்ளார். முகப்புத்தக பதிவொன்றில் அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். “பல வருடங்களாக தொடர்ச்சியாக இவ்வாறு விபத்துகள் ஏற்பட்டு விபத்தில் சிக்குண்டவர்கள் பலர் சாவடைந்துள்ளனர்.விபத்துக்குள்ளானவர்களின் குடும்பங்கள் வாழ்நாள் சோகங்களையும் கஷ்டங்களையும் சுமக்கின்றார்கள்யார்...

வெள்ளி, 11 நவம்பர், 2022

காலி கராபிட்டிய போதனா வைத்தியசாலையில் திடீரென ஏற்பட்ட தீ

காலி கராபிட்டிய போதனா வைத்தியசாலையில் ஏற்பட்ட தீ தற்போது முற்றாக கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக வைத்தியசாலையின் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.வைத்தியசாலையின் புற்றுநோய் பிரிவின் இரண்டாவது மாடியில் பொருத்தப்பட்டுள்ள ஸ்கேன் அறையில் 10-11-2022.அன்று பிற்பகல் தீ பரவியுள்ளது.குளிரூட்டியில் ஏற்பட்ட மின் கசிவு காரணமாக தீ பரவியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.எனினும் தீ பரவியவுடன் காலி மாநகரசபையின் தீயணைப்புப் பிரிவினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.அப்போது,...

வியாழன், 10 நவம்பர், 2022

நாட்டில் இடம்பெற்ற பஸ் வண்டிகள் விபத்துபத்த்தில் அதிகமானவர்கள் காயம்

இன்று10-11.2022.காலை 2 பஸ்கள் மோதிக்கொண்டதில் 10 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.எம்பிலிபிட்டியவில் இருந்து இரத்தினபுரி புதிய நகருக்கு அரச சேவையாளர்களை ஏற்றிக்கொண்டு பயணித்த தனியார் பஸ் வண்டியும் இரத்தினபுரி, தெனியாய தனியார் பஸ் வண்டியும் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானது.பத்துக்கும் அதிகமானவர்கள் காயம்இதில் பத்து பேருக்கும் அதிகமானவர்கள் காயங்களுக்குள்ளான நிலையில் வைத்தியசாலைக்கு அழைத்துச்செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.மேற்படி விபத்து...

புதன், 9 நவம்பர், 2022

ஹக்மன பிரதேசத்தில் மனைவியை கொடூரமாக கொன்ற கணவன்

இலங்கை ஹக்மன பிரதேசத்தில் கூரிய ஆயுதத்தினால் தாக்கப்பட்ட நிலையில் வங்கி முகாமையாளர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.இந்த சம்பவத்தில் ஹக்மன கெபலியபொல தெற்கு சனச வங்கியின் முகாமையாளரே கொலை செய்யப்பட்டுள்ளார்.இந்தத் தாக்குதலை வங்கி முகாமையாளரின் கணவரே மேற்கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.தாக்குதலினால் தலையிலும் கழுத்திலும் பலத்த காயங்களுக்கு உள்ளான அவர், பிரதேசவாசிகளால் ஹக்மன கங்கோடாகம பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும், அதற்குள் அவர் உயிரிழந்திருந்தார்சந்தேக...

செவ்வாய், 8 நவம்பர், 2022

நெடுஞ்சாலையில் துருக்கியில் லாரி மீது பேருந்து மோதி விபத்து 7 பேர் உயிரிழப்பு

கிழக்கு துருக்கியில் அக்ரி மாகாணத்தில் நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த லாரி மீது பேருந்து மோதி விபத்துக்குள்ளானதில் 7 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.கிழக்கு அக்ரி மாகாணத்தில் நடந்த இந்த சம்பவத்தில் லாரி மீது பயணிகள் பேருந்து மோதி தீப்பிடித்தது. பயணிகள் சிலர் கண்ணாடிகளை உடைத்துக் கொண்டு கீழே குதித்துத் தப்பினர். எனினும், பேருந்துக்குள் தீ வேகமாக பரவியதால், கீழே இறங்க முடியாமல் உள்ளே சிக்கிக்...

திங்கள், 7 நவம்பர், 2022

நாட்டுக்கு சுற்றுலா வந்த பிரித்தானிய பெண் விபத்துக்குள்ளாகிய உயிரிழப்பு

பிரித்தானியாவில் இருந்து இலங்கைக்கு சுற்றுலா வந்த பெண் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். குறித்த பெண் விபத்துக்குள்ளாகிய நிலையில், பதுளை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்ந நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார் என மருத்துவமனை தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.சம்பவத்தில் ஜூலி நிக்கோலா பேர்கர் என்ற 54 வயதுடைய பிரித்தாணியே பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார். கடந்த மாதம் 24ஆம் திகதி அவர் 9 பேர் கொண்ட குழுவுடன் இலங்கைக்கு வந்துள்ளார்.அவருடன்...