அமெரிக்காவின் தெற்கு மாகாணமான டெக்சாஸில் படைவீரர் தினத்தை முன்னிட்டு முன்னாள் போர் வீரர்களின் நினைவு கூறும் வகையில் போர் விமானங்களின் சாகச நிகழ்ச்சிகள் ஏற்பாடு
செய்யப்பட்டிருந்தது.
இதில் 4 எஞ்சின்கள் கொண்ட பெரிய ரக போயிங் பி-17 குண்டு பொழியும் விமானம் மற்றும் சிறிய ரக பெல் பி-63 கிங்கோப்ரா போர் விமானம் சாகச நிகழ்ச்சியில் ஈடுபட்டிருந்தன.
இந்த பெரிய ரக போயிங் விமானம் இரண்டாம் உலகப் போரின் போது ஜெர்மனிக்கு எதிராகவும், சிறிய ரக கிங் கோப்ரா விமானம் சோவியத் விமான படையால் பயன்படுத்தப்பட்டது.
இந்நிலையில், எதிர்பாராத விதமாக சிறிய ரக கிங்கோப்ரா விமானம் போயிங் விமானத்தின் இடது புறத்தில் மோதியதில் இரண்டு விமானங்களும்
வெடித்து சிதறின.
இதையடுத்து விமானப்படை பாதுகாப்பு வீரர்கள் மற்றும் தீயணைப்பு வீரர்கள் மீட்பு பணியில் மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
மேலும் இந்த விபத்தில் போயிங் விமானத்தில் பயணித்த ஐந்து பேர் மற்றும் சிறிய ரக விமானத்தில் பயணித்த ஒருவர் என மொத்தம் 6 பேர் உயிரிழந்துள்ளதாக விமானப்படை செய்தி தொடர்பாளர் லீ பிளாக் தெரிவித்துள்ளார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக