மத்திய ஆப்பிரிக்க நாடான காங்கோவின் கின்ஷாசாவில் உள்ள மிகப்பெரிய மைதானத்தில் பிரபல பாடகர் பாலி இபுபாவின்
இசைக்கச்சேரி நடந்தது.
இதையொட்டி அவரது ரசிகர்கள் ஆயிரக்கணக்கானோர் மைதானத்தில் திரண்டனர். 80 ஆயிரம் பேர் அமரும் வசதி கொண்ட மைதானத்தில் அதற்கும் அதிகமாக கூட்டம் திரண்டது.
ரசிகர்கள் பலர் விஐபி இருக்கைகள் மற்றும் முன்பதிவு செய்யப்பட்ட இருக்கைகளுக்கு சென்று அமர முற்பட்டனர். அவர்களை
போலீசார் தடுத்தனர்.
ஆனால் அதை மீறியும் ரசிகர்கள் ஒருவரையொருவர் முண்டியடித்து கொண்டு முன்னேறி சென்றனர். இதனால் அங்கு கடும் கூட்ட நெரிசல் ஏற்பட்டது.
இந்த நெரிசலில் சிக்கி 2 போலீசார் உள்பட 11 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் பலர் படுகாயம் அடைந்தனர்.
இந்த சம்பவம் காங்கோவில் பெரும் சோகத்தை
ஏற்படுத்தி உள்ளது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக