இலங்கை கிரிக்கெட் அணியின் மூன்று வீரர்கள்.28-11-2022. இன்று திருமண பந்தத்தில் இணைந்துகொண்டுள்ளனர்.
கசுன் ராஜித, சரித் அசலங்கா மற்றும் பாத்தும் நிஸ்ஸங்க ஆகியோர் கொழும்பில் மூன்று தனித்தனி இடங்களில் திருமணம்
செய்து கொண்டனர்.
கண்டி பல்லேகலவில் நேற்று ஆப்கானிஸ்தானுக்கு எதிராக விளையாடிய இலங்கை அணியில் இந்த வீரர்கள்
இடம்பெற்றிருந்தனர்.
திருமண நிகழ்ச்சிகளைத் தொடர்ந்து இன்று மாலைக்குள் அவர்கள் அணிக்குத் திரும்புவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கண்டி, பல்லேகலவில் புதன்கிழமை இடம்பெறவுள்ள ஆப்கானிஸ்தானுக்கு எதிரான அடுத்த போட்டிக்கு தயாராவதற்காக அவர்கள் அணிக்கு திரும்புவார்கள்
0 கருத்துகள்:
கருத்துரையிடுக