இலங்கை ஹக்மன பிரதேசத்தில் கூரிய ஆயுதத்தினால் தாக்கப்பட்ட நிலையில் வங்கி முகாமையாளர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவத்தில் ஹக்மன கெபலியபொல தெற்கு சனச வங்கியின் முகாமையாளரே கொலை செய்யப்பட்டுள்ளார்.
இந்தத் தாக்குதலை வங்கி முகாமையாளரின் கணவரே மேற்கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தாக்குதலினால் தலையிலும் கழுத்திலும் பலத்த காயங்களுக்கு உள்ளான அவர், பிரதேசவாசிகளால் ஹக்மன கங்கோடாகம பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும், அதற்குள் அவர் உயிரிழந்திருந்தார்
சந்தேக நபரான கணவர் பிரதேசத்தை விட்டுத் தப்பிச் சென்றுள்ளதுடன், சம்பவம் தொடர்பில் ஹக்மன பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக