siruppiddy

18

siruppiddy

unkal

unkal

செவ்வாய், 31 அக்டோபர், 2023

சீனாவில் உலகை அச்சுறுத்தும் எட்டு வகை வைரஸ்கள் கண்டுபிடிப்பு

உலகில் கடந்த 2019-ம் ஆண்டின் இறுதியில் பரவத் தொடங்கிய கொரோனா வைரசின் தாக்கம் இன்னும் ஓய்ந்தபாடில்லை. உலகம் முழுவதும் பேரழிவை ஏற்படுத்திய கொரோனாவால் லட்சக்கணக்கான வீடுகளில் மரண ஓலம் கேட்டது. ஏராளமானோர் உயிரிழந்தனர், கோடிக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டனர். 2-வது அலை, 3-வது அலை என அலை அலையாய் வந்து அச்சுறுத்திய கொரோனா பின்னர் படிப்படியாக கட்டுக்குள் வந்தது. எனினும் அந்த அதிர்ச்சியில் இருந்து இன்னும் மக்கள் மீளவில்லை....

திங்கள், 30 அக்டோபர், 2023

வேகக் கட்டுப்பாட்டையிழந்து சாந்தசோலை சந்தியில் பாலத்திற்குள் பாய்ந்த சொகுசு கார்

வவுனியா - ஏ9 வீதியில் பயணித்த சொகுசு கார் ஒன்று சாரதியின் கட்டுப்பாட்டையிழந்து. .30-10-2023.இன்று விபத்துக்குள்ளாகியுள்ளது.வவுனியாவில் இருந்து கனகராயன்குளம் நோக்கி ஏ9 வீதியால் சென்ற சொகுசு காரானது பிறிதொரு வாகனத்தை முந்திச் செல்ல முற்பட்டபோது வேகக் கட்டுப்பாட்டை இழந்து சாந்தசோலை சந்தியில் அமைந்துள்ள பாலத்திற்குள் பாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.குறித்த காரில் பிரித்தானியாவில் இருந்து வருகை தந்த நபர் ஒருவரும், சாரதியும் பயணித்த நிலையல்,...

ஞாயிறு, 29 அக்டோபர், 2023

பண்ணை பகுதியில் முச்சக்கர வண்டி வேகக் கட்டுப்பாட்டை இழந்து விபத்து நால்வர் காயம்

யாழில் முச்சக்கர வண்டியொன்று.  20-10-2023.இன்று விபத்திற்குள்ளானதில் குழந்தை உட்பட நால்வர் காயமடைந்துள்ளனர். வேகமாக சென்றுகொண்டிருந்த முச்சக்கரவண்டி வேகக் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி கடலை அண்மித்த பகுதியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதாக பொலிஸார் கூறியுள்ளனர். ஊர்காவற்றுறையில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்துக்கொண்டிருந்த முச்சக்கரவண்டி யாழ்ப்பாணம், பண்ணை பகுதியில் வைத்தே விபத்துக்குள்ளாகியுள்ளது. முச்சக்கரவண்டியில்...

நாட்டில் புத்தளத்தில் திருமண நிகழ்வில் கலந்துகொண்ட யுவதி உயிரிழந்துள்ளார்.

நாட்டில் புத்தளத்தில் உள்ள விழா மண்டபம் ஒன்றில் நடைபெற்ற திருமண விருந்தில் கலந்து கொண்ட யுவதி ஒருவர் திடீர் சுகவீனமடைந்து உயிரிழந்துள்ளார். புத்தளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சிறுமி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். ஆனமடுவ நகரைச் சேர்ந்த 20 வயதுடைய எச்.எம் அயோத்தி தேஷானி விஜேவர்தன என்பவரே உயிரிழந்துள்ளார். திருமண விருந்தில் உணவுக்காக கிடைத்த இறைச்சி வகையை சாப்பிட்டதால் ஏற்பட்ட ஒவ்வாமையே மரணத்திற்கு காரணம் எனக்...

சனி, 28 அக்டோபர், 2023

உடுப்பிட்டி யில் வெளிநாடு செல்ல முகவருக்கு பணம் வழங்கி ஏமார்ந்த இளைஞன் உயிர்மாய்ப்பு

உடுப்பிட்டி யில் வெளிநாடு செல்வதற்காக முகவரிடம் பெரும்தொகை பணத்தினை கொடுத்து ஏமார்ந்து இளைஞன் தவறான முடிவெடுத்து உயிர் மாய்த்துள்ளார். யாழ்ப்பாணம் - உடுப்பிட்டி பகுதியை சேர்ந்த இளைஞன் ஒருவர் தவறான முடிவெடுத்து உயிர் மாய்க்க முயன்ற நிலையில் வீட்டில் இருந்தோரால் காப்பாற்றப்பட்டு வல்வெட்டித்துறை பிரதேச வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார். அதனை அடுத்து உடற்கூற்று பரிசோதனைக்காக பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில்...

வெள்ளி, 27 அக்டோபர், 2023

ஏற்பட்ட பயங்கர தீவிபத்தில் மங்கோலியாவில் ஏழு பேர் பலி

மங்கோலியா தலைநகர் உலன் பாடோரின் சோங்கினோகைர்கான் நகரில் உள்ள ஒரு வீட்டில் இருந்து அதிக அளவில் புகை வெளியேறியது. சிறிது நேரத்தில் வீடு தீப்பிடித்து எரிந்தது, தகவல் கிடைத்ததும் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்தனர்.கட்டுங்கடங்காமல் பற்றி எரிந்த தீயை அணைக்க வீரர்கள் போராடினர். நீண்ட நேர போராட்டத்திற்கு பிறகு தீயை அவர்கள் அணைத்தனர். இருப்பினும் தீயில் அந்த வீடு முழுவதுமாக எரிந்தது. இந்த பயங்கர விபத்தில் குழந்தைகள் உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த...

வியாழன், 26 அக்டோபர், 2023

காவலில் உள்ள எட்டு இந்தியர்களுக்கு கத்தாரில் மரண தண்டனை விதிப்பு

கத்தாரில் கைது செய்யப்பட்டு, காவலில் உள்ள  எட்டு இந்தியர்கள் வழக்கில் தீர்ப்பு வெளியாகியுள்ளது. இந்திய கடற்படையில் பணியாற்றி ஓய்வுபெற்ற 8 இந்தியர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இஸ்ரேலுக்கு உளவு பார்த்த புகாரில் கைதான 8 இந்தியர்களுக்கு மரண தண்டனையை கத்தார் நீதிமன்றம் விதித்துள்ளது. 8 இந்தியர்களும் பணி புரிந்த நிறுவனம் நீர்முழ்கி கப்பல்கள் தொடர்பான திட்டத்தில் இணைந்திருந்தது.உளவு பார்த்ததாக குற்றச்சாட்டப்பட்டுள்ள 8...

புதன், 25 அக்டோபர், 2023

இலங்கையில் இருவேறு பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் மூவர் பலி

எம்பிலிப்பிட்டிய மொரகெட்டிய பிரதான வீதியில் இலுக்கட்டிய பிரதேசத்தில் இன்று (25.10) காலை சாலையோரம் நடத்துச் சென்ற மூவர் மீது கார் ஒன்று மோதி விபத்தை ஏற்படுத்தியுள்ளத. இதில்  படுகாயமடைந்த நிலையில் ஆண் ஒருவரும் பெண்ணொருவரும் எம்பிலிப்பிட்டிய மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளனர். 58 மற்றும் 71 வயதுடைய இருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.  விபத்தை ஏற்படுத்திவிட்டு தப்பியோடிய காரின்...

செவ்வாய், 24 அக்டோபர், 2023

இரண்டு சரக்குக் கப்பல்கள் ஜேர்மன் கடற்பகுதியில் விபத்து பலரைக் காணவில்லை

இரண்டு சரக்குக் கப்பல்கள் ஜேர்மன் கடற் பகுதியின்  வடக்கு கடலில் மோதியதில் பலரைக் காணவில்லை என்று ஜெர்மன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.  போலேசி மற்றும் வெரிட்டி ஆகிய கப்பல்கள் இன்று .24-10-2023.அதிகாலையில் ஹெல்கோலாண்ட் தீவின் தென்மேற்கே சுமார் 22 கிலோமீட்டர் தொலைவில் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்திற்குள்ளாகியதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரிட்டிஷ் கொடியுடன் பயணித்த குறித்த கப்பலில் 22 பேர் இருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது. அவர்களை...

திங்கள், 23 அக்டோபர், 2023

கோசைன் தோலாவில் பானிபூரி சாப்பிட்ட குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதி

 ஜார்கண்ட் மாநிலம், கோடெர்மா மாவட்டத்தில் உள்ள கோசைன் தோலாவில் பகுதியில் ரோட்டோர கடை ஒன்றில் பானிபூரி சாப்பிட்டு, அப்பகுதியைச் சேர்ந்த 40 குழந்தைகள் மற்றும் 10 பெண்களுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது.பானிபூரியை சாப்பிட்ட குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு வாந்தி, வயிற்றுப்போக்கு மற்றும் மயக்கம் போன்ற அறிகுறிகள் ஏற்பட்டது. அவர்கள் உடனடியாக கோடெர்மாவில் உள்ள சதர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அவர்களுக்கு பாக்டீரியா தொற்று...

ஞாயிறு, 22 அக்டோபர், 2023

நாட்டில் கடந்த இருபத்தி நான்கு மணிநேரத்தில் வீதி விபத்துக்களில் அறுவர் மரணம்

நாட்டின் பல பகுதிகளில் இடம்பெற்ற வீதி விபத்துக்களில் இளைஞர் ஒருவர் உட்பட 6 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த விபத்துக்கள் 21-10-2023.,அன்று  இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.கொள்ளுப்பிட்டி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தேவாலயத்தின் வாகன தரிப்பிடத்தில் நபர் ஒருவர் ஜீப் வண்டியுடன் மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது. விபத்தில் காயமடைந்த நபர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது உயிரிழந்துள்ளார்.உயிரிழந்தவர் கொழும்பு 09 இல் வசிக்கும்...

சனி, 21 அக்டோபர், 2023

சென்னை மேல்மருவத்தூர் ஆன்மிக குரு பங்காரு அடிகளார் உடல் அரசு மரியாதையுடன் சித்தர் முறைப்படி நல்லடக்கம்

சென்னை செங்கல்பட்டு: மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தின் நிறுவனரான ஆன்மிக குரு பங்காரு அடிகளார் உடல் அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது. 21 குண்டுகள் முழங்க, பங்காரு அடிகளார் உடலுக்கு அரசு மரியாதை செலுத்தப்பட்டது. அப்போது பக்தர்கள் உணர்ச்சிவசப்பட்டு கண்ணீர் மல்க கோஷங்கள் எழுப்பினர்.அரசு சார்பில் மரியாதை செலுத்தப்பட்ட பிறகு, சக்தி பீடத்திலுள்ள தியான மண்டபத்துக்கு அவரின் உடல் எடுத்துச்செல்லப்பட்டு, அங்கு இறுதிச்...

வெள்ளி, 20 அக்டோபர், 2023

சென்னை மேல்மருவத்தூர் ஆன்மிக குரு பங்காரு அடிகளார் மறைவு19.10.2023

சென்னை: மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தின் ஆன்மிக குரு பங்காரு அடிகளார் உடலநலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 83.செங்கல்பட்டு மாவட்டம், மேல்மருவத்தூரில் ஆதிபராசக்தி சித்தர் பீடம் உள்ளது. இது இந்த ஊரின் அடையாளமாக உள்ளது. இந்த சித்தர் பீடத்தை நிறுவியவர் பங்காரு அடிகளார். இவர், மேல்மருவத்தூரைச் சேர்ந்த விவசாயிகளான கோபால் மற்றும் மீனாம்பிகை அம்மையாருக்கும் மகனாக கடந்த 3-3-1941-ல் பிறந்தாா். பங்காரு என்றால் தெலுங்கு மொழியில்...

வியாழன், 19 அக்டோபர், 2023

நாரம்மல, தம்பெலஸ்ஸ பிரதேசத்தில் இடம்பெற்ற கோர விபத்து ஒருவர் பலி, 18 பேர் காயம்

நாரம்மல, தம்பெலஸ்ஸ பிரதேசத்தில் பேருந்து ஒன்று பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 51 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் 18 பயணிகள் காயமடைந்துள்ளனர்.  அலவ்வயில் இருந்து நாரம்மலை நோக்கிச் சென்றுகொண்டிருந்த பேருந்து இன்று (19.10) மதியம் நாரம்மல, தம்பெலஸ்ஸ என்ற இடத்தில் வீதியை விட்டு விலகி பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளானதாக இலங்கை பொலிஸார் தெரிவித்தனர். இதன்படி, சம்பவத்தைத் தொடர்ந்து 7 பேர் குருநாகல் வைத்தியசாலையில்...

புதன், 18 அக்டோபர், 2023

நாட்டில் ஒன்பது மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை!!!

நாட்டில் ஒன்பது  மாவட்டங்களின் பிரதேச செயலகங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.  இதன்படி காலி, பதுளை, ஹம்பாந்தோட்டை, கேகாலை, மாத்தறை, இரத்தினபுரி, களுத்துறை, கண்டி மற்றும் நுவரெலியா ஆகிய மாவட்டங்களின் பல பிரதேச செயலகங்களுக்கு இந்த மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.  இந்த அறிவிப்புகள் இன்று (18.10) பிற்பகல் 03.00 மணி முதல் நாளை (19.10) பிற்பகல்...

செவ்வாய், 17 அக்டோபர், 2023

இலங்கைப் பெண் ஒருவர் இஸ்ரேல் மீதான ஹமாஸ் தாக்குதலில் பலி

இஸ்ரேல் மீதான ஹமாஸ் தாக்குதலின் பின்னர் காணாமல் போயிருந்த இலங்கையை சேர்ந்த பெண் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு பொலிஸார் இன்று உறுதிப்படுத்தியுள்ளனர்.களனி ஈரியவெடிய பிரதேசத்தை வசிப்பிடமாகக் கொண்ட அனுலா ரத்நாயக்க (ஜயதிலக்க) என்பவரே தாக்குதலின் போது உயிரிழந்துள்ளதாக இஸ்ரேல் பொலிஸார் இன்று உறுதிப்படுத்தியுள்ளனர். இந்நிலையில், உயிரிழந்த பெண்ணின் சடலம் இரண்டு நாட்களுக்குள் இலங்கை தூதரகத்திடம் ஒப்படைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளதுஎன்பதும் குறிப...

திங்கள், 16 அக்டோபர், 2023

திருமதி நடராசா திலகவதி ( திலகம் )31ம் நாள் நினைவஞ்சலி 17.10.2023

மறைவு-17-09-2023 .31ம் நாள் நினைவஞ்சலி 17-10-2023..யாழ் நவற்கிரியை பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்ட.  திருமதி  நடராசா திலகவதி ( திலகம் ) அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலி 17-10-2023.செவ்வாய்க்கிழமை அன்றுஅவர்களின் 31ம் நாள்  வீட்டுகிருத்திய்  கிரீமலை அழைப்பிதழ்15-19-2023. ஞாயிற்ருக்கிழமை  அன்று காலை 07,மணியளவில் கிரீமலை  தித்தக்கரையில்   ஆத்மா   சாந்திப்பிரத்தனை   நிகழ்வுகள்.17-10-2023.,செவாய்க்கிழமை...

ஞாயிறு, 15 அக்டோபர், 2023

மரண அறிவித்தல் அமரர் மாணிக்கம் கந்தசாமி 14.10.2023

.துயர் பகிர்வு மறைவு-14-10.2023.யாழ் புத்தூரை பிறப்பிடமாகவும் நவற்கிரியை வதிவிடமாகவும் கொண்ட.அமரர் மாணிக்கம் கந்தசாமி அவர்கள்  14-10-2023..சனிக்கிழமை அன்று இறைபாதம் அடைந்தார்அன்னார்.ஸ்ரீதாதேவி அவர்களின் பாசமிகு கணவரும்   தனுஷ் அவர்களின் அன்பு தந்தையும் துரைச் செல்வம்  செல்லம்மா அவர்களின் அன்பு மருமகனும் ஆவர் அன்னாரின் இறுதிக்கிரியை 15-10-2023 ஞாயிற்ருக்கிழமை   அன்று 10:00 மு.ப -12:30 பி.ப.மணி  வரை ...

சனி, 14 அக்டோபர், 2023

மரண அறிவித்தல் அமரர் சின்னத்தம்பி (ரத்தி) அன்னம்மா.14.10.2023

துயர் பகிர்வு-மறைவு-14-10-2023 யாழ்  அச்சுவேலியைப்பிறப்பிடமாகவும் நவற்கிரியை வாசிப்பிடமாகவும்  தற்போது தோப்பு அச்சுவேலிவசித்து வந்த அமரர் சின்னத்தம்பி (ரத்தி)  அன்னம்மா.14-10-2023. அன்று   இறைபாதம் அடைந்தார். அன்னார் காலம் சென்றரத்தி  அவர்களின் பாசமிகு மனைவியும் கணேசு கலா தேவா ஆனந்தன் வவா தேவி ஆகியோரின் அன்புத்  தாயாரும் ஆவர் அன்னாரின் இறுதிக்கிரியை 15-10-2023.அன்று மு.ப 10:30 மணியளவில்  அவரது...

வெள்ளி, 13 அக்டோபர், 2023

சகல பாடசாலைகளுக்கும் பிரான்ஸில் பாதுகாப்பு வழங்க நடவடிக்கை

இன்று காலை Pas-de-Calais பிராந்தியத்தில் உள்ள d'Arras நகரில் lycée Gambetta எனும் உயர் நிலைப் பள்ளியில் செச்சென் நாட்டைச் சேர்ந்த 20 வயதான 'fiché S' குற்றப் பதிவில் அறியப்பட்ட அந்த பள்ளியின் பழைய மாணவன் நடத்திய பயங்கரவாத கத்திக்குத்து தாக்குதலில் ஒரு ஆசிரியர் கொல்லப்பட, ஒரு பேராசிரியரும் பாதுகாப்பு ஊழியரும் படுகாயம் அடைந்தது நீங்கள் அறிந்ததே. குறித்த தாக்குதலை நடத்திய நபர் DGSI பாதுகாப்பு வலையத்தில் உள்ளவர். நேற்றையதினம் வியாழக்கிழமை வழமையான...

வியாழன், 12 அக்டோபர், 2023

பருத்தித்துறையை சேர்ந்த குடும்பஸ்தர் சைக்கிளில் இருந்து தவறி விழுந்து மரணம்!

சைக்கிளில் இருந்து தவறிவிழுந்த பருத்தித்துறையை சேர்ந்த குடும்பஸ்தர் ஒருவர் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் உயிரிழந்துள்ளார். வெளிச்சவீட்டு வீதி பருத்தித்துறையை சேர்ந்த பிலிப்பு ராஜசிங்கம் (வயது-52) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்த நிலையி ல் சைக்கிளில் ஏற்றி பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு கடந்த 7 ஆம் திகதி கொண்டு சென்றபோது தவறி கீழே விழுந்துள்ளார்.இதையடுத்து பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு...

புதன், 11 அக்டோபர், 2023

இலங்கையில் ரொட்டவெவ பிரதேசத்தில் யானை தாக்கி இருவர் பலி

மின்னேரிய ரொட்டவெவ பிரதேசத்தில் விறகு வெட்டச் சென்ற பெண் ஒருவர் காட்டு யானை தாக்கி உயிரிழந்துள்ளதாக மின்னேரிய பொலிஸார் தெரிவித்தனர்.  ரொட்டவெவ கல் ஓயா சந்தி பிரதேசத்தில் வசிக்கும் 66 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளார். சடலம் பொலன்னறுவை வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது. மின்னேரிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதேவேளை, தலாவ தொபேகம பிரதேசத்தில் விறகு வெட்டச் சென்ற ஒருவர் யானை தாக்கியதில் உயிரிழந்துள்ளதாக...

செவ்வாய், 10 அக்டோபர், 2023

மன்னார் பம்பைமடு இராணுவ முகாமிற்கு அருகில் விபத்து பெண் ஒருவர் பலி

வவுனியா மன்னார் வீதியில் மோட்டார் சைக்கிள் ஒன்று விபத்திற்குள்ளானதில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.குறித்த விபத்தானது வவுனியா - மன்னார் வீதியில் பம்பைமடு இராணுவ முகாமிற்கு அருகில்10-10-2023. இன்று  இடம்பெற்றுள்ளது.வவுனியா குருக்கள்புதுக்குளத்தில் இருந்து வவுனியா நோக்கி வந்த மோட்டார் சைக்கிளானது பம்பைமடு இராணுவ முகாமிற்கு அருகில் வீதியில் நின்ற மாட்டுடன் மோதி விபத்திற்குள்ளாகியுள்ளது.இதில் 45 வயதுடைய வி.ஜெயந்தினி என்பவர் பலியாகியுள்ளதுடன்,...