siruppiddy

18

siruppiddy

unkal

unkal

புதன், 31 ஜூலை, 2024

நாட்டில் லிட்ரோ எரிவாயுவின் விலை தொடர்பில் வெளியான அறிவிப்பு

நாட்டில் ஆகஸ்ட் மாதத்திற்கான லிட்ரோ எரிவாயுவின் விலையில் மாற்றம் இருக்காது என நிறுவனம் தெரிவித்துள்ளது. லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்தார்.என்பது குறிப்பிடத்தக்கது இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>...

செவ்வாய், 30 ஜூலை, 2024

இலங்கையில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை திடீர் அதிகரிப்பு

நாட்டில் தற்போது டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக, தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது. மேல் மாகாணத்திலேயே அதிகளவான டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன்படி, மேல் மாகாணத்தில் 12, 847 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். மேல் மாகாணத்தின், கொழும்பு மாவட்டத்தில் 7, 613 பேரும், கம்பஹா மாவட்டத்தில் 3,453 பேரும், களுத்துறை மாவட்டத்தில் 1,781 பேரும் பதிவாகியுள்ளனர். இந்த மாதத்தில்...

திங்கள், 29 ஜூலை, 2024

பிரித்தானியா நோக்கி பிரான்ஸில் இருந்து பயணித்த படகு விபத்துக்குள்ளானது

இங்கிலாந்திற்கு  பிரான்சில் இருந்து புறப்பட்ட சிறிய படகு ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பிரான்ஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.மேலும் 34 பேர் மீட்கப்பட்டு அவசர சேவைக்கு கொண்டு செல்லப்பட்டதாக கூறப்படுகிறது.பிரெஞ்சு கடலோர காவல்படையின் கூற்றுப்படி, கடலில் இன்னும் பல படகுகள் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.UK புள்ளிவிவரங்களின்படி, ஜூலை 21 ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் 1,500 பேர் உலகின் பரபரப்பான கப்பல் பாதையை 27...

ஞாயிறு, 28 ஜூலை, 2024

மரண அறிவித்தல் ஆசிரிர் திரு சரவணமுத்து கருணாகரன்

துயர் பகிர்வு- தோற்றம்-10-08-1977 -மறைவு-24-07-2024யாழ் பலாலியை பிறப்பிடமாகவும் அச்சுவேலியை வாழ்விடமாகக் கொண்ட திரு சரவணமுத்து கருணாகரன்அவர்கள்.24.07.2024.அன்று  மாலை அச்சுவேலியில் காலமானார். அன்னார் அச்சுவேலி புனித தெரேசாள் மகளிர் கல்லூரியின் தமிழாசிரியரும் பிரபல கல்வி நிறுவனங்களின் உயர்தர வகுப்பு தமிழ் ஆசிரியரும் ஆவார்  அன்னாரின் இறுதிச் சடங்கு (பெரும்பாலும்) எதிர்வரும்  ஞாயிற்றுக்கிழமை 28.07.2024 காலை  அச்சு...

சனி, 27 ஜூலை, 2024

பாடசாலை காசாவில் மீது தாக்குதல் முப்பது பேர் உயிரிழப்பு

இஸ்ரேல் மற்றும் காசா இடையிலான போர் கடந்த 9 மாதத்துக்கும் மேலாக தொடர்ந்து நடந்துவருகிறது. இஸ்ரேல் நடத்திய ராணுவ தாக்குதலில் இதுவரை 38 ஆயிரத்துக்கும் அதிகமான பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.இந்நிலையில், மத்திய காசாவின் டெய்ர் எர்-பலா பகுதியில் உள்ள பள்ளிக்கூடத்தில் இஸ்ரேல் ராணுவம் ஏவுகணை தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் குழந்தைகள், பெண்கள் என மொத்தம் 30 பேர் பலியாகினர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.இஸ்ரேலிய படைகள் ரஃபா நகரின் மேற்கு மற்றும்...

வெள்ளி, 26 ஜூலை, 2024

நாட்டில் ரயிலில் மோதி இருபத்தி ஆறு வயது இளைஞன் மரணம்

நாட்டில்  தெமோதர கவரவெல பிரதேசத்தில் கொழும்பு கோட்டையில் இருந்து பதுளை நோக்கி சென்ற இரவு தபால் ரயிலில் மோதி இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளதாக எல்ல பொலிஸார் தெரிவித்தனர்.றபர்வத்த பிரிவு, கவரவெல, தெமோதர பகுதியைச் சேர்ந்த 26 வயதுடைய இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். விபத்து தொடர்பில் எல்ல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.என்பது குறிப்பிடத்தக்...

வியாழன், 25 ஜூலை, 2024

நாட்டில் மொனராகலையில் இடம்பெற்ற கோர விபத்து : இருவர் படுகாயம்

நாட்டில் மொனராகலை சியம்பலாண்டுவ பிரதான வீதியில் தொம்பகஹவெல பொலிஸ் எல்லைக்குட்பட்ட தொம்பகஹவெல எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகில் இடம்பெற்ற பயங்கர விபத்தில் இருவர் காயமடைந்துள்ளனர்.  பொலிரோ ரக கெப் வண்டியும் மோட்டார் சைக்கிள்களை ஏற்றிச் சென்ற லொறியும் ஒன்றுடன் ஒன்று மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. விபத்தின் பின்னர், கெப் வண்டியின் சாரதியும் அதில் பயணித்த மற்றுமொரு நபரும் வண்டிக்குள் சிக்கிக் கொண்டதையடுத்து, அருகில்...

புதன், 24 ஜூலை, 2024

நாட்டில் துணுக்காய் பிரதேசத்தில் நெல்லு காவலுக்கு இருந்தவர் மீது துப்பாக்கிசூடு

நாட்டில் முல்லைத்தீவு மாவட்டத்தில் அறுவடை செய்த நெல்லினை வீதியில் காயப்போட்டு காவல்காத்து உறங்கிக்கொண்டிருந்த விவசாயியும் கமக்கார அமைப்பின் செயலாளருமான குடும்பஸ்தர் ஒருவர் மீது இன்று அதிகாலை துப்பாக்கிசூடு நடத்தப்பட்டுள்ளது. இதில் காயமடைந்த கமக்கார அமைப்பின் செயலாளர் மேலதிக சிசிச்சைக்காக கிளிநொச்சி மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் இந்த சம்பவம் பற்றி தெரியவருகையில் 24.07.2024 இன்று துணுக்காய் பிரதேசத்தில் கல்விளான் பகுதியில் இந்த...

செவ்வாய், 23 ஜூலை, 2024

கொழும்பு, வார்ட் பிளேஸில் முச்சக்கரவண்டிக்குள் நடந்த கொலை

கொழும்பில் (23.07.2024) அதிகாலை கொழும்பு, வார்ட் பிளேஸில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முச்சக்கரவண்டியில் கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு கொல்லப்பட்ட நபரின் சடலத்தை பொலிஸார் கண்டு பிடித்தனர். 119 பொலிஸ் அவசர இலக்கத்திற்கு கிடைத்த தகவல் ஒன்றிற்கு அமைய சடலம் கண்டுபிடிக்கப்பட்டது. விசாரணைகளின் போது மற்றுமொரு முச்சக்கரவண்டியில் வந்த இருவரே இக்கொலையை செய்துவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக தெரியவந்துள்ளது.என்பது குறிப்பிடத்தக்கது&nb...

திங்கள், 22 ஜூலை, 2024

மரண அறிவித்தல் அமரர் ராசரத்தினம் பாலசிங்கம்

துயர் பகிர்வு-மறைவு-22-07-2024..யாழ்  நவற்கிரியை பிறப்பிடமாகவும்  தோப்பு அச்சுவேலியை வதிவிடமாகக் கொண்ட    அமரர்  ராசரத்தினம்  பாலசிங்கம் அவர்கள்  22-07-2024.திங்கள்கிழமை  அன்று  இறைபாதம் அடைந்தார் அன்னார். காலஞ்சென்ற  ராசரத்தினம் தம்பதியினரின் அன்பு மகனும் அவர்களின் பாசமிகு கணவரும் கலா(இலங்கை ) பாபு (சுவிஸ் )ஆகியோரின் அன்புத்  தந்தையும் ஆவர்  அன்னாரின் அன்னாரின் இறுதிக்கிரியைகள்...

ஞாயிறு, 21 ஜூலை, 2024

எச்ஐவி எயிட்ஸ் நோய் தொடர்பில் இலங்கையில் வெளியான தகவல்

இலங்கையில் கடந்த ஆண்டு, எச்ஐவி எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ள 40 குழந்தைகள் இனங்காணப்பட்டதாக தேசிய பாலியல் நோய் மற்றும் எயிட்ஸ் ஒழிப்பு திட்டம் தெரிவித்துள்ளது. வயோதிபர்களின் எண்ணிக்கை 3,169 ஆக பதிவாகியுள்ளதாக தேசிய பாலியல் நோய் விசேட வைத்திய நிபுணர் வினோ தர்மகுலசிங்க தெரிவித்தார். எச்.ஐ.வி.யால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2022ல் 607 ஆகவும், 2023ல் 694 ஆகவும் பதிவாகியுள்ளதாகவும், இது 14 சதவீதம் அதிகமாகும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்....

சனி, 20 ஜூலை, 2024

இகிரியகொல்லேவ பகுதியில் எரிபொருள் பவுசருடன் மோதிய முச்சக்கரவண்டி

எரிபொருள் ஏற்றிச் சென்ற பவுசரும் முச்சக்கரவண்டியும் ஒன்றுடன் ஒன்று மோதியதில் நான்கு பேர் காயமடைந்து அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.  அவர்களில் ஒருவரின் நிலைமை கவலக்கிடமாக உள்ளதாக மெதவாச்சி பொலிஸார் தெரிவித்தனர். கண்டி-யாழ்ப்பாணம் ஏ9 வீதியில் இகிரியகொல்லேவ பகுதியில் இன்று (20.07) இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.  இந்த விபத்தில் முச்சக்கரவண்டி பலத்த சேதமடைந்துள்ளதுடன், எரிபொருளை ஏற்றிச் சென்ற பவுசர் அருகில்...

வெள்ளி, 19 ஜூலை, 2024

பிரிட்டிஷ் கொலம்பிய மாகாணத்தில் இடம்பெற்ற விமான விபத்தில் இருவர் பலி

கனடாவில் பிரிட்டிஷ் கொலம்பிய மாகாணத்தில் இடம்பெற்ற விமான விபத்து சம்பவம் ஒன்றில் இரண்டு பேர் கொல்லப்பட்டுள்ளனர்.இந்த விபத்தில் மேலும் ஒருவர் படுகாயமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. பிரிட்டிஷ் கொலம்பிய மாகாணத்தின் டொபினோ பகுதியில் இந்த விபத்து இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.லாங் பீச் விமான நிலையத்திலிருந்து விபத்து குறித்து பொலிசாருக்கு அறிவிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.விமான நிலையத்தின் ஓடுபாதையில் விமானம் தீ பற்றி கொண்டதாக...

வியாழன், 18 ஜூலை, 2024

அமரர் செல்லையா கனகராசா அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலி

மலர்வு -12-04-1949.-உதிர்வு - 21-06-2024யாழ்.  ஆணைக்கோட் டை மூத்தநயினார் கோவில்  ஒழுங்கையைச் சேர்ந்த  அமரர் செல்லையா கனகராசா  அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலி  19-07-2024. வெள்ளிக்கிழமை அன்று அன்னார் அமரர்களான செல்லையா முத்துப்பிள்ளை தம்பதிகளின் புதல்வனும் அமரர்களான கதிரவேலு   இராஜலஷ்மி   தம்பதிகளின் மருமகனும் ஜெயந்திராணியின் அன்புக்கணவரும்  மயூரனின் (Shakthi Fm ) பாசமிகு  தந்தையும் ...

புதன், 17 ஜூலை, 2024

எண்ணெய்த் தாங்கிக் கப்பல் ஓமானில் விபத்துக்குள்ளாது அதில் கடமையாற்றியமூன்று இலங்கையர்கள் மாயம்

ஓமானில் விபத்துக்குள்ளான கப்பலில் கடமையாற்றிய மூன்று இலங்கைப் பணியாளர்கள் உள்ளிட்ட 16 பணியாளர்களை காணவில்லை என தெரிவிக்கப்படுகின்றது. இந்நிலையில் காணாமல் போயுள்ள ஏனையவர்கள் இந்தியர்கள் என கூறப்படுகின்றது. யேமனின் ஏடன் நகர் நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த பிரஸ்டிஜ் பெல்கொன் என்ற கப்பலே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது. கமரூன் நாட்டு கொடியுடன் பயணித்த எண்ணெய்த் தாங்கிக் கப்பல் ஒன்றே குடைசாய்ந்து, கடலில் மூழ்கி விபத்துக்குள்ளாகியுள்ளதாக...

செவ்வாய், 16 ஜூலை, 2024

பிரபலமான ரோல்ஸ் ராய்ஸ் காரின் முன்னாள் தலைமை வடிவமைப்பாளர் குத்திக்கொலை

.உலகின் மிகவும் பிரபலமான கார் நிறுவனம் ரோல்ஸ் ராய்ஸ். ஆடம்பர கார்களை தயாரிக்கும் ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனம் பிஎம்டபுள்யூ கார் நிறுவனத்தின் தலைமையில் செயல்பட்டு வருகிறது.இதனிடையே, ரோல்ஸ் ராய்ஸ் கார்களின் வடிவமைப்பு குழுவின் தலைவராக 1998ம் ஆண்டு முதல் செயல்பட்டவர் இயன் கெமரூன். இங்கிலாந்தை சேர்ந்த இயன் கெமரூன் பல ஆண்டுகளாக ரோல்ஸ் ராய்ஸ் கார் தலைமை வடிவமைப்பாளராக செயலப்ட்டு வந்தார். பல ஆண்டுகளாக பணியில் இருந்த இவர் பின்னர் பணியில்...

திங்கள், 15 ஜூலை, 2024

நாட்டில் மின்கட்டணம் குறைக்கப்படுகின்றது பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவிப்பு

நாட்டில் மின்கட்டணத்தை 22.5 சதவீதம் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. நாளை (16) முதல் அமுலுக்கு வரும் வகையில் 22.5% மின்சார கட்டணத்தை குறைக்க பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு இன்று தீர்மானித்துள்ளது. இந்த வருடத்தில் மின்சார கட்டண திருத்தத்திற்காக இலங்கை மின்சார சபையினால் முன்வைக்கப்பட்ட பிரேரணையை ஆய்வு செய்த பின்னரே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக நடைபெற்ற பொதுக் கலந்தாய்வில் முன்வைக்கப்பட்ட ஆலோசனைகள் மற்றும் கருத்துக்களைக்...

ஞாயிறு, 14 ஜூலை, 2024

கம்போடியா ராணுவ ஹெலிகாப்டர் பயிற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தபோது மாயம்

கம்போடியா நாட்டின் விமானப்படைக்கு சொந்தமான ஹெலிகாப்டர் நேற்று வழக்கமான பயிற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தது. ஹெலிகாப்டரில் 2 வீரர்கள் பயணித்தனர்.அந்நாட்டின் பர்சட் , ஹட் காங் மாகாணங்களுக்கு இடையே அமைந்துள்ள கர்டமன் மலைப்பகுதியில் ஹெலிகாப்டர் பறந்து சென்று கொண்டிருந்தபோது திடீரென கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பு துண்டிக்கப்பட்டது.இதையடுத்து, ஹெலிகாப்டரை தேடும் பணியில் மீட்புக்குழுவினர் ஈடுபட்டுள்ளனர். மோசமான வானிலை காரணமாக ஹெலிகாப்டர் மலைப்பகுதியில்...

சனி, 13 ஜூலை, 2024

யாழ் கச்சாய் தெற்கு பகுதியில் கஞ்சா விற்ற தாயும் மகனும் கைது

யாழ் சாவகச்சேரி கச்சாய் தெற்கு பகுதியில் 80 கிலோவுக்கும் அதிகமான கஞ்சாவுடன் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று முன்தினம் வீதித் தடைகளை ஏற்படுத்தி கார் ஒன்றை சோதனையிட்ட போது 500 கிராம் கஞ்சாவுடன் கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடம் இருந்து கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். கைது செய்யப்பட்ட குறித்த பெண்ணிடம் இருந்து 87 கிலோ 616 கிராம் கஞ்சா பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது....

வெள்ளி, 12 ஜூலை, 2024

கனமழையால் நேபாளத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி பலர் மாயமாகியுள்ளனர்.

நேபாளத்தில் பெய்து வரும் கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் இரண்டு பேருந்துகள் ஆற்றில் கவிழந்து விபத்துக்குள்ளானது. இதில், 7 இந்தியர்கள் உள்பட 60க்கும் மேற்பட்டோர் மாயமாகியுள்ளனர்.தலைநகர் காத்மாண்டுவில் இருந்து 100 கிலோமீட்டர் தொலைவில் உள்ள சிட்வான் மாவட்டத்தில் உள்ள நாராயண்காட்- மக்லிங் சாலையில் உள்ள சிமால்டால் பகுதியில் உள்ள திரிசூலி ஆற்றில் 65 பயணிகளுடன் சென்ற இரண்டு பேருந்துகள் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டன.இந்த விபத்து இன்று அதிகாலை 3.30 மணியளவில்...

வியாழன், 11 ஜூலை, 2024

இலங்கைப் பெண் நடுவானில் உயிரிழப்பு அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்

இலங்கையை சேர்ந்த பெண்பயணியொருவர் நடுவானில் உயிரிழந்துள்ளதை தொடர்ந்து பயணிகள் விமானமொன்று அவசர அவசரமாக பாக்கிஸ்தானின் கராச்சி விமானநிலையத்தில் தரையிறங்கியுள்ளது. இலங்கையை சேர்ந்த 57 வயதான பலவினி என்ற பெண்ணே உயிரிழந்துள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன. துபாயிலிருந்து கொழும்பிற்கு பயணித்துக்கொண்டிருந்த விமானத்திலிருந்த குறிப்பிட்ட பெண்பயணியின் உடல்நிலை திடீரென மோசமடைந்ததாகவும் இதனை தொடர்ந்து விமானி கராச்சி விமானநிலையத்தில் விமானத்தை...

புதன், 10 ஜூலை, 2024

நாட்டில் மன்னார் வீதியில் மின்சாரத் தாக்குதலுக்கு உள்ளாகி இளம் தாய் உயிரிழப்பு

புத்தளம் - மன்னார் வீதியின் 4 ஆம் கட்டை பகுதியில் வசித்து வந்த இளம் தாயொருவர் மின்சாரத் தாக்குதலுக்குள்ளாகி உயிரிழந்துள்ளார்.பாபு துஷ்யந்தினி (வயது 28) எனும் இரண்டு பிள்ளைகளின் தாயே இவ்வாறு மின்சார தாக்குதலுக்குள்ளாகி உயிரிழந்துள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர்.குறித்த இளம் தாய் நேற்றிரவு இரவுச் சாப்பாட்டுக்காக ரைஸ் குக்கரில் சோறு சமைப்பதற்காக தயாரான போது திடீரென மின்சாரத் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது.இதனையடுத்து, குறித்த...

செவ்வாய், 9 ஜூலை, 2024

பாகிஸ்தானில் வறுமை காரணமாக குழந்தையை உயிருடன் புதைத்த தந்தை

பாகிஸ்தானில் உள்ள சிந்து பகுதியில் வறுமையின் காரணமாக தயாப் என்ற நபர் தனது 15 நாள் குழந்தையை உயிருடன் புதைத்துள்ளார். தனது நிதி நெருக்கடியைக் காரணம் காட்டி இத்தகைய மோசமான செயலை செய்ததாக தயாப் ஒப்புக்கொண்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.காவல்துறையினர் இதுதொடர்பாக கூறுகையில்,குழந்தைக்கு உடல்நிலையில் பிரச்சனை ஏற்பட்டதை அடுத்து, தயாப் தனது நிதி நெருக்கடி காரணமாக குழந்தைக்கு சிகிச்சை அளிக்க முடியவில்லை.எனவே சாக்குப்பையில் வைத்து உயிருடன் குழந்தையைப்...

திங்கள், 8 ஜூலை, 2024

தலைமன்னார் பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்தில் அருட்தந்தை மரணம்

மன்னார்- தலைமன்னார் பிரதான வீதியில் நேற்று மாலை இடம்பெற்ற விபத்தில் மன்னார் மறைமாவட்ட அருட்பணியாளரும் மன்னார் மடு மாதா சிறிய குருமடத்தின் உதவி இயக்குனருமான அருட்தந்தை கே.ஜொனார்த்தனன் அடிகளார் (வயது 31) உயிரிழந்தார்.தலைமன்னார் ஆலயத்தில் மாலை நேர திருப்பலியை ஒப்புக் கொடுத்த நிலையில் மீண்டும் தலை மன்னாரில் இருந்து மன்னார் நோக்கி மோட்டார் சைக்கிளில் பயணித்த போது மாலை 6.50 மணியளவில் கட்டுக்காரன் குடியிருப்பு பகுதியில் மோட்டார் சைக்கிள் விபத்திற்கு...