இலங்கையில். வவுனியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சாலையில் நேற்று இரவு இடம்பெற்ற விபத்தில் பொலிஸ் சார்ஜென்ட் ஒருவர்
உயிரிழந்தார்.
இரட்டப்பெரியகுளம்-வவுனியா சாலையில் நிறுத்தப்பட்டிருந்த டிப்பர் லொறியுடன் அவ் அதிகாரி ஓட்டிச் சென்ற மோட்டார் சைக்களில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்த விபத்தில் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா மாவட்ட பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது அவர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டார்.
உயிரிழந்தவர், வவுனியா பொலிஸ் நிலையத்தில் பணியாற்றி வந்த 45 வயது பொலிஸ் சார்ஜென்ட் என்றும், மாத்தளையைச் சேர்ந்தவர் என்றும் அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் குறித்து வவுனியா பொலிஸ் துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.என்பதும் குறிப்பிடத்தக்கது
https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html








0 கருத்துகள்:
கருத்துரையிடுக