நாட்டில் மட்டக்களப்பு – கொம்மாதுறை பகுதியில் இன்று இடம்பெற்ற வீதி விபத்தில் ஒருவர் காயமடைந்துள்ளார்.
வாழைச்சேனையிலிருந்து மட்டக்களப்பு நோக்கி பயணித்த மோட்டார்சைக்கிளும், அதே திசையில் பின்னால் பயணித்த அரச பேருந்தும் கொம்மாதுறை பிள்ளையார் ஆலயத்திற்கு அருகில்
விபத்துக்குள்ளாகியுள்ளன.
முன்னால் சென்றுகொண்டிருந்த மோட்டார்சைக்கிளை, பின்னால் வந்த அரச பேருந்து மோதியதாக தெரிவிக்கப்படுகிறது.
விபத்தில் மோட்டார்சைக்கிளில் பயணித்த நபரின் காலில் முறிவு ஏற்பட்டுள்ளதுடன், அவர் மேலதிக சிகிச்சைக்காக செங்கலடி வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். என்பதும் குறிப்பிடத்தக்கது
https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html








0 கருத்துகள்:
கருத்துரையிடுக