siruppiddy

18

siruppiddy

unkal

unkal

புதன், 4 நவம்பர், 2026

யாழில் மின்கம்பத்துடன் மோதியே முச்சக்கரவண்டி விபத்து மூன்று இளைஞர்கள் காயம்

யாழ் ஊர்காவற்றுறை பிரதான வீதியின் அராலிச் சந்திக்கு அண்மையில் இடம்பெற்ற விபத்தில் மூன்று இளைஞர்கள் படுகாயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
.குறித்த விபத்து-04-11-2026- இன்று புதன்கிழமைகாலை
 இடம்பெற்றுள்ளது.
ஊர்காவற்றுறை திசையிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி அதிவேகமாகப் பயணித்த முச்சக்கரவண்டி, சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து வீதியோரத்திலிருந்த தொலைத்தொடர்பு கம்பத்துடன் மோதியதில் இந்த விபத்து நேர்ந்துள்ளது.
தொலைத்தொடர்பு கம்பத்துடன் மோதியதில் முச்சக்கரவண்டியில் பயணித்த மூன்று இளைஞர்களும் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்த நிலையில் வீதியில் கிடந்துள்ளனர்.
இதன்போது அவ்வழியாகச் சென்ற பொதுமக்கள் விரைந்து செயற்பட்டு, தனியாருக்குச் சொந்தமான மற்றுமிரு முச்சக்கரவண்டியின் உதவியுடன் காயமடைந்தவர்களை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்குக் கொண்டு சென்று அனுமதித்துள்ளனர்.
இதேவேளை, விபத்து இடம்பெற்றதைத் தொடர்ந்து அவசர அம்புலன்ஸ் சேவைக்கு அழைப்பு விடுக்கப்பட்ட போதிலும், அம்புலன்ஸ் இறுதிவரை சம்பவ இடத்திற்கு வருகை தரவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறதுடன்இச்சம்பவம் தொடர்பில் பொதுமக்கள் மத்தியில் விசனம் ஏற்பட்டுள்ளது
 என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html


0 கருத்துகள்:

கருத்துரையிடுக