siruppiddy

18

siruppiddy

unkal

unkal

புதன், 4 நவம்பர், 2026

நாட்டில் நெடுங்கேணி பகுதியில் குடும்பஸ்தருக்கு நேர்ந்த சோகம்

வவுனியா, நெடுங்கேணி – பெரியமடு பகுதியில் ஒற்றை யானையின் தாக்குதலுக்கு இலக்காகிப் படுகாயமடைந்த நபர் ஒருவர், வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சை பலனின்றி
உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவம் இன்று (04) 1.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.பெரியமடு பகுதியைச் சேர்ந்த சிவஞானகந்தரம் கருணன் (கண்ணன்) (45 வயது) என்ற குடும்பஸ்தரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
ஏனையவர்களுடன் இணைந்து மாடு மேய்க்கச் சென்றபோதே எதிர்பாராத விதமாக யானையின் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளார். அவருடன் சென்றவர்கள் மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்த போதிலும், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவம் தொடர்பில் கனகராயன்குளம் பொலீசார் விசாரனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அன்னாரின் குடும்பத்தினருக்கு எமது “Mullai Live” குழுமத்தின் சார்பில் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்..
🛑காட்டு யானைகள் நடமாடும் நேரங்களான அதிகாலை மற்றும் பிற்பகல்/மாலை வேளைகளில் காடார்ந்த பகுதிகளுக்குச் செல்வதைக் கட்டுப்படுத்த வேண்டும்.
🛑தொலைவில் யானையைக் கண்டால் அதை விரட்ட முயலாமல், உடனடியாகப் பாதுகாப்பான இடங்களுக்குச் பின்வாங்க வேண்டும்.
🛑காட்டு யானைகள் கிராமங்களுக்குள் அல்லது மேய்ச்சல் நிலங்களுக்குள் புகுந்தால், தனிநபராகச் சமாளிக்க முற்படாமல் உடனடியாக வனஜீவராசிகள் திணைக்களத்திற்கும் (Wildlife Dept) கிராம அலுவலருக்கும் தகவல் வழங்க வேண்டும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர் , நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும். 
எமது நவற்கிரி நிலாவரை  இணையங்களின் 
 கண்ணீர் அஞ்சலி அன்னாரின் பிரிவால்
 துயருறும் குடும்பத்தினருக்கு  
 ஆழ்ந்த அனுதாபங்களை 
தெரிவித்து கொள்ளுகின்றோம்
ஓம் சாந்தி சாந்தி சாந்தி 
தகவல்: குடும்பத்தினர்

https://navakkiri.blogspot.com/2026/10/blog-post_20.html

0 கருத்துகள்:

கருத்துரையிடுக