siruppiddy

18

siruppiddy

unkal

unkal

வியாழன், 27 ஜூன், 2024

நாட்டில் கிளிநொச்சியில் நாய்களால் அச்சுறுத்தலுக்கு உள்ளாகும் மக்கள்

கிளிநொச்சி மாவட்டத்தின் கண்டாவலைப் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட குமாரசாமிபுரம் பகுதியில் கடந்த 10.05 2024 அன்றைய
 தினம் நாய் கடிக்கு இலக்கான சிறுமி ஒருவர் உரிய சிகிச்சை
 பெறாத நிலையில் கடந்த 25,06.2024 அன்றைய 
தினம் வலிப்பு ஏற்பட்டதன் காரணமாக தருமபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு அங்கிருந்து கிளிநொச்சி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.  
தொடர்ந்து அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக 26 05.2024 அன்று யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி பரிதாபகரமாக 
உயிரிழந்துள்ளார்.  
தியாகரன் சாருஜா என்ற நான்கு வயதுடைய குமாரசாமிபுரம் பகுதியைச் சேர்ந்த சிறுமியே பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.  
அப்பகுதியில் பல பேர் குறித்த நாய்க் கடிக்கு இலக்கான நிலையில் அவர்களுக்கு மேலதிக சிகிச்சைகள் 
வழங்குவதற்காக
 நான்கு பேர் கிளிநொச்சி வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், 
சிறுமியின் பராமரிப்பில் தொடர்பு வைத்திருந்த 11 பேருக்கும் சுகாதார பரிசோதகர்கள் மற்றும் சுகாதார வைத்தியரின் ஆலோசனைகளுக்கு
 அமைவாக அவர்களுக்கு முற்பாதுகாப்பு தடுப்பூசி 
ஏற்றப்பட்டுள்ளது.  
அத்துடன் அப்பகுதியில் கட்டாகாளி நாய்களும் அதிகரித்து காணப்படுவதை அவதானிக்க முடிவதுடன், அவைகளுக்கும் தடுப்பூசி போடப்பட்டு .வருகின்றனர் 
மேலும் இறந்த சிறுமியின் தாயார் வீட்டு வறுமைகாரணமக வெளியூர் சென்ற நிலையில் சிறுமியின் இறப்பு செய்திகேட்டு இன்று
 நாடுதிரும்பியுள்ளார்
உயிரிழந்த சிறுமியின் சடலம் பிரோத பரிசோதனையின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.என்பது குறிப்பிடத்தக்கது



0 கருத்துகள்:

கருத்துரையிடுக