siruppiddy

18

siruppiddy

unkal

unkal

திங்கள், 19 டிசம்பர், 2022

சாவகச்சேரியில் வியட்நாமில் உயிரிழந்த பொதுமகனின் உடலம் அடக்கம்

இலங்கையின் பொருளாதார நெருக்கடியினால் எதிலியாக  புறப்பட்டு, இடையில் முயற்சி பயனளிக்காமையால், உயிரை மாய்த்துக்கொண்ட யாழ் சாவகச்சேரி பொதுமகனின் உடலம், 19-12-2022.இன்று அவரது சொந்த ஊரில் அடக்கம் செய்யப்பட்டது.
வியட்நாமில் உயிரை மாய்த்துக் கொண்ட, யாழ் சாவகச்சேரியை சேர்ந்த சுந்தரலிங்கம் கிரிதரனின் உடலம் 19-12-2022.இன்று சாவகச்சேரியின்,  கண்ணாடிப்பிட்டி இந்து மயானத்தில் அடக்கம் 
செய்யப்பட்டது.
இலங்கையின் பொருளாதார நெருக்கடியை சமாளிக்கமுடியாமல், கடந்த நவம்பர் 8ஆம் திகதியன்று, கனடா செல்ல முற்பட்டிருந்த நிலையில் வியட்நாம் கடற்பரப்பில் 300க்கும் மேற்பட்ட இலங்கையர்களுடன் சென்ற மீன்பிடி படகு சேதமடைந்து, கவிழும் நிலைக்கு உள்ளானது.
இதன்போது அதில் இருந்த ஒருவர், இலங்கையின் கடற்படையுடன் தொடர்புக்கொண்டு உதவியை கோரியிருந்தார்.
இந்தநிலையில் ஜப்பானிய கடற்படை கப்பல் ஒன்று, குறித்த ஏதிலிகளை கையேற்று, பின்னர் அவர்களை வியட்நாம் கடற்படையினரிடம்
 கையளித்தது.
இதனையடுத்து குறித்த ஏதிலிகளை இலங்கைக்கு அனுப்புவதற்கான முயற்சிகளை வியட்நாம் அதிகாரிகள் மேற்கொண்டனர்.
இதனை குறித்த ஏதிலிகள் ஏற்றுக்கொள்ளாதநிலையில், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து இருவர் உயிரை மாய்த்துக் கொள்ள 
முயற்சித்தனர்.
அவர்கள் இருவரும், உடனடியாக வியட்நாமிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
எனினும், அவர்களில் ஒருவரான சாவகச்சேரியை சேர்ந்த சுந்தரலிங்கம் கிரிதரன்  சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இந்தநிலையில் உயிரிழந்தவரின் உடலத்தை நாட்டுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்குமாறு இலங்கை அரசாங்கம் உள்ளிட்ட பல தரப்பினரிடம் அவரது உறவினர்கள் கோரிக்கை 
விடுத்திருந்தனர்..
எனினும் இலங்கை அரசாங்கம், நிதியுதவி எதனையும் மேற்கொள்ளாத நிலையில் தனியாரே அதற்கான நிதியை வழங்கினர் என்று தகவல்கள்  வெளியாகியிருந்தன. 
இதனையடுத்து சுமார் ஒரு மாதத்தின் பின்னர் கிரிதரனின் உடலம் நேற்று முன்தினம் நாட்டுக்கு கொண்டு வரப்பட்டு யாழ்ப்பாணத்துக்கு கொண்டு செல்லப்பட்டது.
இதற்கிடையில், தொடர்ந்தும் வியட்நாமில் தங்க வைக்கப்பட்டுள்ள எஞ்சியுள்ள இலங்கை ஏதிலிகள் தொடர்ந்தும் தெளிவற்ற நிலையே
 தொடர்கிறது.
இதேவேளை இந்திய பெருங்கடல் பிரதேசத்தில் பிரித்தானியாவின் ஆளுகைக்குள் உள்ள  டீகோ கார்சியாவில் தங்க வைக்கப்பட்;டுள்ள இலங்கையின் ஏதிலிகளுக்கு ஏதிலி அந்தஸ்தை வழங்குவதற்கு பிரித்தானியா தொடர்ந்தும் மறுத்து வருகிறது.
எனினும் ருவண்டாவுடன் செய்துக்கொள்ளப்பட்டுள்ள உடன்படிக்கையின் கீழ் அவர்களை அங்கு குடியேற்றுவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில் அதற்கு எதிர்ப்பு வெளியிடப்பட்டு வருகிறது.
இதுஇவ்வாறிருக்க, அண்மையில் குறித்த ஏதிலிகளில் மூன்று பேர் மருத்துவ சிகிச்சைக்காக அண்மையில் ருவண்டாவுக்கு 
அனுப்பப்பட்டனர்.
எனினும் அவர்கள், மருத்துவ சிகிச்சையின் பின்னர், மீண்டும் டீகோ கார்சியாவுக்கு அழைத்து வரப்படுவர் என்று பிரித்தானியா நிர்வாகம் உறுதியளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>




ஞாயிறு, 18 டிசம்பர், 2022

நாட்டில் லெமசூரிய பகுதியில் இரண்டு பேருந்துகள் மோதி விபத்து

              வலப்பனை கீர்த்தி பண்டாரபுர வழிவூடான கண்டி - பண்டாரவளை பிரதான வீதியின் ஹங்குராங்கெத்த காவல்துறை பிரிவுக்குட்பட்ட லெமசூரிய பகுதியில் பேருந்து விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்த விபத்து.18-12-2022. இன்று மாலை இடம்பெற்றுள்ளது.
கண்டியிலிருந்து ஹங்குராங்கெத்த வழியாக பதுளையை நோக்கியும்,பண்டாரவளையிலிருந்து அதே வழியில் கண்டியை நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான இரண்டு பேருந்துகள் மோதி இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்து சம்பவித்த போது இவ்விரு பேருந்துகளிலும் பயணித்த பயணிகளில் 15 பேர் விபத்துக்குள்ளாகி பலத்த காயங்களுடன் கீர்த்தி பண்டாரபுர கழகத்தின் பிரதேச வைத்தியசாலைக்கும், ஒரு சிலர் வலப்பனை பிரதேச வைத்தியசாலைக்கும் கொண்டு செல்ப்பட்டு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
வேககட்டுப்பாட்டை மீறிய இவ்விரு பேருந்துகளும் மோதிக்கொண்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
குறித்த விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>


சனி, 17 டிசம்பர், 2022

யாழ் குடும்பஸ்தர்.கனடா ஆசையினால் பரிதாபமாக உயிரிழந்திருந்தார்

சட்டவிரோதமாக கப்பல் மூலமாக கனடா செல்ல முற்பட்டிருந்த இலங்கையர்கள் 300 பேர் வியட்நாம் அருகே படகு பழுதடைந்ததால விய்ட்நாமில் தங்க வைப்பட்டிருந்தனர்.இவ்வாறு அங்கு தஙகவைக்கபப்ட்டிருந்தவர்கள் நாட்டுக்கு அழைக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்த நிலையில், நாட்டுக்கு தாம் மீளவும் 
திருப்பி செல்ல
போவதில்லை என தெரிவித்து இருவர் தற்கொலைக்கு முயன்ற நிலையில் அதில் யாழ் குடும்பஸ்தர் பரிதாபமாக உயிரிழந்திருந்தார்.வியட்நாம் நாட்டில் மரணமடைந்த,சாவகச்சேரியை சேர்ந்த சுந்தரலிங்கம் கிரிதரனின் சடலம் சற்று முன்னர் விமானம் மூலமாக இலங்கைக்கு கொண்டு 
வரப்பட்டிருக்கிறது.
சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக தற்போது நீர்கொழும்பு வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. பரிசோதனையின் பின்னர் உறவினர்களிடம் கையளிக்கப்படவுள்ளது.இதேவேளை உயிரிழந்தவரின் இறுதிக்கிரியைகள் நாளை யாழ்ப்பாணம் சாவகச்சேரி கல்வயலில் உள்ள அவரின் வீட்டில் நடைபெறும் என குடும்பத்தினர் 
தெரிவிக்கின்றனர்.
நாட்டில் ஏற்பட்டுள்ள நெருகடியால் சட்டவிரோதமாக வெளிநாடுகளுக்கு செல்வோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதுடன், தங்களது பயண ஆபத்துக்களை அறியாது செல்வதனால் இவ்வாறான இழப்புக்களை நாம் சந்திக்கவேண்டியுள்ளது.அதேவேளை உயிரிழந்த கிரிதரன் மூன்று குழந்தைகளின் தந்தையாவார். வறுமையை போக்க தனது கணவர் வெளிநாடு செல்ல முயன்றதாக உயிரிழந்தவரின் மனைவி
 தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் அந்த பிஞ்சுக் குழந்தைகளின் எதிர்காலம் தற்போது கேள்விக்குறியாகியுள்ளது.இந்நிலையில் குடும்ப கஸ்ரத்தை போக்கவென சட்டவிரோத வெளிநாட்டு பயணங்களை மேற்கொள்வோர் இனியாவது அது தொடர்பில் சிந்தித்து செயலாற்றுவது, அவர்களது குடும்பத்தை நாட்டாற்றில் தவிக்க விடாது காப்பாற்றும்.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



மரண அறிவித்தல் செல்வன் நடேசலிங்கம் (தம்பு பேபி)அக்‌ஷயன் 13.12.22

பிறப்பு-12-08-2023-இறப்பு-13-12-2022
யாழ். அச்சுவேலி பத்தமேனியைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Bern ஐ வதிவிடமாகவும் கொண்ட நடேசலிங்கம் அக்‌ஷயன் அவர்கள் 13-12-2022 செவ்வாய்க்கிழமை அன்று இயற்கை எய்தினார்.அன்னார், திரு.திருமதி தம்பிப்பிள்ளை தம்பதிகள், திரு. திருமதி திருநாவுக்கரசு தம்பதிகளின் அன்புப் பேரனும்,நடேசலிங்கம்(தம்பு பேபி) நந்தினி தம்பதிகளின் பாசமிகு மகனும்,நடேசலிங்கம் செந்தூரி அவர்களின் அன்புச் சகோதரனும் ஆவார்.  இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction
Thursday, 15 Dec 2022 4:00 PM - 7:00 PM
Bremgarten cemetery (Bremgartenfriedhof) Murtenstrasse 51, 3008 Bern, Switzerland
பார்வைக்கு
Get Direction
Friday, 16 Dec 2022 3:00 PM - 7:00 PM
Bremgarten cemetery (Bremgartenfriedhof) Murtenstrasse 51, 3008 Bern, Switzerland
பார்வைக்கு
Get Direction
Saturday, 17 Dec 2022 2:00 PM - 7:00 PM
Bremgarten cemetery (Bremgartenfriedhof) Murtenstrasse 51, 3008 Bern, Switzerland
பார்வைக்கு
Get Direction
Sunday, 18 Dec 2022 2:00 PM - 7:00 PM
Bremgarten cemetery (Bremgartenfriedhof) Murtenstrasse 51, 3008 Bern, Switzerland
கிரியை
Get Direction
Monday, 19 Dec 2022 1:00 PM - 3:00 PM
Bremgarten cemetery (Bremgartenfriedhof) Murtenstrasse 51, 3008 Bern, Switzerland
தொடர்புகளுக்கு
 ஆனந்தன் - மாமாMobile : +41786464930 பானுஷாந்தன் - சகோதரன்Mobile : +41787420637 கெங்கன் - மாமாMobile : +41797604807 பரமு - மாமாMobile : +41796583612 நடேசலிங்கம்(பேபி நந்தினி) - தந்தைMobile : +41763262647 உதயன் - மாமாMobile : +41792458216 வசந்தி - மாமிMobile : +41799444570 ஈசன் - சித்தப்பாMobile : +41765248374 சகுந்தலா(கௌசி- குண்டு பத்தமேனி) - அத்தைMobile : +94773922029 நளினி - சித்திMobile : +94764029397 சிவனடி - மாமாMobile : +33650129462
கண்ணீர் அஞ்சலி
எமது நவற்கிரி நிலாவரை  இணையங்களின் 
கண்ணீர் அஞ்சலி அன்னாரின் பிரிவால்
 துயருறும் குடும்பத்தினருக்கு  
 ஆழ்ந்த அனுதாபங்களை 
தெரிவித்து கொள்ளுகின்றோம் ..
அன்னாரின் ..ஆத்மா சாந்தி அடைய 
இறைவனைப்பிராத்திக்கின்றோம் 
  ஓம் சாந்தி ! ஓம் சாந்தி  ஓம் சாந்தி

வெள்ளி, 16 டிசம்பர், 2022

அமரர் தம்பு. துரைராஜாவின் 20ம் ஆண்டு நீங்காத நினைவுகள் மற்றும் மூவர் து-சிதம்பரம்.து.தங்கரத்தினம். இ .கனகசபாபதி 16.12.22

மலர்வு .15-.04-1926. உதிர்வு .14-01.2004

திதி -16-12-2022
யாழ் நவற்கிரி புத்தூரை பிறப்பிடமா​வும் வசிப்பிடமா​கவும் மாகக் கொண்ட
அமரர் ,தம்பு துரைராஜா.அமரர் துரைராஜா-சிதம்பரம். (பூரணம்).அமரர் துரைராஜா தங்கரத்தினம்.
தோற்றம் 06-05-1949-மறைவு-23-01-2005.(தங்காள் ) அமரர் இராசையா கனகசபாபதி.தோற்றம் 01-04-1949- (தேவர் பிறப்பிடம் கோண்டாவில் ).வாழ்ந்த இடம்நவற்கிரி.)அகியோரின் 
 நீங்காத நினைவுடன் இருபதாவது  ஆண்டு
 நினைவஞ்சலி.(திதி )16-12-.2021.இன்று
காலங்கள் ஓடினும் கவலைகள் மாறுமோ...???
கண்ணீரின் வலிகளைக் கடக்கத்தான் முடியுமோ...??
பாலகர்கள் வளர்ந்து வாழ்தலும் அறிவீரோ
பாசங்கள் மறையாமல் தேடுதல் அறிவீரோ
மறைந்ததோ உங்கள் உடல் மனங்களோ உன்னுடன் தினங்களும் தேடும் அன்பியல் தந்தை நின் நிசம்
உருவம் மறைந்து ஆண்டு இருபது 
இன்னும் பல வருடம் இல்லை மறுபிறப்பும்
நம்மை வந்தடைய உங்களை  விட யாருளரோ
முன்னையோர் தவம் செய்தோம் நற்தந்தையாக்
தந்தையராக கணவனாய் நல் உடன்பிறப்பாய் மைத்துனனாய்
மகனாய் மருமகனாய் இப்பூமியில் எம் குடும்பத்தில்
வந்த வரம் பெற்றோமே வருவாய் மீன் பிறப்பாய்
வந்தெம் குடிபுகுவாய் அன்பனே வரும் வாசல்
காத்திருப்போம் அன்புப் பிள்ளைகள் சகோரர்கள் மருமக்கள் பேரப்பிள்ளைகள் புட்டப்பிள்ளைகள்
உற்றார், உறவினர்கள், நண்பர்கள்
தகவல்:,குடும்பத்தினர்.
 உங்கள் ஆத்மா சாந்திபெற
இறைவனை பிரார்த்திக்கின்றோம்.ஓம் சாந்தி, உங்கள் பிரிவால் துயருறும்
, பிள்ளைகள், இனிக்கும் இன்முகமும்
கொண்ட ஈடுஇணையற்ற
எங்கள் தந்தையே மற்றும் 
உங்கள் ஆத்மா சாந்தி அடைய
இறைவனை வேண்டுகிறோம் ஐயா அப்பா அம்மா அக்கா அத்தான் 
ஓம் சாந்தி ஓம் சாந்தி சாந்தி,,
எமது நவற்கிரி நிலாவரை  இணையங்களின் 
 கண்ணீர் அஞ்சலி அன்னாரின் பிரிவால்
 துயருறும் குடும்பத்தினருக்கு  
 ஆழ்ந்த அனுதாபங்களை 
தெரிவித்து கொள்ளுகின்றோம் 
..உங்கள் ஆத்ம சாந்திக்காக
வேண்டிப் பிரார்த்திக்கின்றோம்
ஓம்சாந்தி ஓம்சாந்தி ஓம்சாந்தி !!!
தகவல்
குடும்பத்தினர்.






இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>

வியாழன், 15 டிசம்பர், 2022

நாட்டில் சிமெண்ட் விலை மேலும் ரூ.1,000 குறைக்கப்படலாம்

நாட்டில் சீமெந்து விலையில் ஏற்பட்டுள்ள அண்மைய வீழ்ச்சியானது, சீமெந்து இறக்குமதியாளர்களின் மாபியாவினால் விலை நிர்ணயம் செய்யப்படுவதை நிரூபிப்பதாக தேசிய நிர்மாண சங்கத்தின் தலைவர் சுசந்த லியனாராச்சி குற்றம் சுமத்தியுள்ளார்.
"இந்த நாட்டில் டாலர் நெருக்கடி ஏற்பட்டால், சீமெந்து இறக்குமதி செய்வதை நிறுத்துங்கள்.
 இறக்குமதியாளர்களால் அதிக விலைக்கு சீமெந்து விற்கப்படும் போது, ​​சீமெந்து மூட்டையின் விலையை மேலும் 1000 ரூபாவால் குறைக்க 
முடியும்" என்றார். 
விலைக் கட்டுப்பாட்டை நிர்ணயிப்பதன் மூலம் உள்ளூர் சிமென்ட் உற்பத்தியாளர்களை அரசாங்கம் பலப்படுத்த வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>





புதன், 14 டிசம்பர், 2022

நாட்டில் 5 அத்தியாவசியப்பொருட்களின் விலைகள் திடீரென குறைத்த விலைப்பட்டியல்

நாட்டில் 5 அத்தியாவசிய பொருட்களுக்கான விலைகள் குறைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.லங்கா சதொச ஊடாக இந்த விலை குறைப்பு முன்னெடுக்கப்படவுள்ளது. 14.12.2022.இன்று முதல் நடைமுறைக்கு வரும் வகையில் இந்த விலை குறைப்பு மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொருட்கள் சிவப்பு பருப்பு (ஒரு கிலோகிராம்)4 ரூபா 385 ரூபா, கோதுமை மா (ஒரு கிலோகிராம்) 15 ரூபா
250 ரூபா. வெள்ளைப்பூடு (ஒரு கிலோகிராம்) 35 ரூபா 460 ரூபா.வெங்காயம் (ஒரு கிலோகிராம்)9 ரூபா 190 ரூபா.உள்ளூர் டின் 
மீன் 5 ரூபா 490 ரூபா.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



செவ்வாய், 13 டிசம்பர், 2022

நாட்டில் வாகன சாரதி அனுமதிப்பத்திரங்களினை புதுப்பிக்க காத்திருப்பவர்களுக்கு

Driving_License புதுப்பிக்க காத்திருப்பவர்கள் செய்ய வேண்டியவை எவை தெரியுமா?அனைவரும் அறிய அதிகம் பகிருங்கள். நீங்கள் Driving License புதுப்பிக்க போகின்றீர்கள் என்றால், முதலில் உங்கள் மாவட்டத்திற்கான DMT தொடர்பு இலக்கத்திற்கு (Colombo-Werahera, Head Office 94 112 518 950,94 112 545 891,94 112 518 926,94 706 354 124,94 706 354 134,94 706 354 123
Gampaha District Secretarial 94 332 231 376 ,Kalutara District Secretarial – Kalutara ,94 342 229 752 ,Galle District Secretarial – Galle ,94 912 225 697,Matara District Secretarial – Matara ,94 412 228 219 ,Hambantota District Secretarial – Hambantota,94 472 220 247,Ampara District Secretarial – Ampara +94 632 223 478,Batticaloa 2, Pioneer street ,
 Batticaloa 94 652 225 272
Trincomalee District Secretarial – Trincomalee,94 263 269 035,Vauniya District Secretarial – Vauniya +94 242 222 372,Jaffna District Secretarial – Jaffna ,94 212 223 789 ,94 212 227 552,Anuradhapura District Secretarial – Anuradhapura +94 252 223 717,Polonnaruwa District Secretarial – Polonnaruwa,94 272 225 818,Kurunegala District Secretarial – Kurunegala ,94 372 220 379 ,Puttlam District Secretarial-Puttlam 94 322 265 984
Kandy District Secretarial-Kandy 94 812 237 968
Matale District Secretarial-Matale 94 662 234 233 ,Nuwara-Eliya District Secretarial – Nuwara-Eliya 94 522 235 628 ,Ratnapura District Secretarial – Ratnapura ,94 452 222 481,Kegalle District Secretarial – Kegalle
+94 352 223 981 ,Baddulla District Secretarial – Baddulla,94 552 231 604 ,Monaragala District Secretarial – Monaragala +94 552 276 494 ,Mannar District Secretarial – Mannar ,94 232 222 852 ,Mullaitivu District Secretarial – Mullaitivu ,Kilinochchi District Secretarial – Kilinochchi +94 242 222 372 ) அழைப்பினை ஏற்படுத்தி உங்கள் NIC இலக்கத்தையும் MOBILE PHONE இலக்கத்தையும் கூறினால் உங்களுக்கான திகதி SMS மூலம் 
அனுப்பப்படும்.
இந்த அசௌகரியங்களை தவிர்க்க கீழுள்ள லிங்யினை க்ளிக் செய்து அங்கு நீங்கள் செல்ல விரும்பும் இடத்தினை தெரிவு செய்து, முன்கூட்டிய பதிவு செய்து கொள்ளுங்கள். https://echannelling.com/Echannelling/ntmi-channel)Online Booking செய்வதற்காகாக வழமையான கட்டணத்திற்கு 
மேலதிகமாக 90/= அறவிடப்படும்.உங்கள் Phone இற்கு confirmation SMS வரும் அதன் பிறகு குறிப்பிட்ட இலக்கத்திற்கு சென்று மருத்துவ 
சான்றிதழை மிகவும் இலகுவாக பெற்றுக்கொள்ளலாம்.ஆகவே, இன்றே புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட இந்த வசதியை நீங்களும் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>

திங்கள், 12 டிசம்பர், 2022

பேசாலையில் ஒருவர் தாக்கப்பட்டு மரணம் தொடர்பாக மூவர் கைது

கைது செய்யப்பட்டுள்ளதோடு, மேலும் ஒருவர் தலைமறைவாகி உள்ள நிலையில் காவல்துறையினர் தேடி 
வருகின்றனர்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில், பேசாலை பகுதியில் கடந்த வியாழக்கிழமை (08) இரவு இடம்பெற்ற இச்சம்பவத்தில் கொழும்பைச் சேர்ந்த சுப்பையா ஆறுமுகம் சங்கர் (வயது - 40) என்பவர் கொலை 
செய்யப்பட்டிருந்தார்.
இவர் கிளிநொச்சிக்கு தொழிலுக்குச் சென்ற வேளையில், ஜெயபுரத்தில் ஒரு பெண்ணை திருமணம் செய்த பின் பேசாலை பகுதிக்கு தொழிலுக்கு குடும்பத்துடன் சென்று வாடகை வீட்டில் 
வசித்து வந்துள்ளார்.
சம்பவ தினத்திற்கு முதல் நாள் இறந்த நபரின் மனைவி கொழும்புக்குச் சென்றுள்ளார்.
இந்த நேரத்தில் ஒன்றாக தொழில் புரிபவர்கள் ஒன்று சேர்ந்து மது அருந்திய போது ஏற்பட்ட கைகலப்பில் குறித்த குடும்பஸ்தர் தாக்குதலுக்கு உள்ளாகி மரணித்துள்ளார்.
இந்தச் சம்பவமானது சில தினங்களுக்கு முன் வளிமாசு காரணத்தால் ஏற்பட்ட இயற்கை குளறுபடியால் நடந்திருக்கலாம் என எவரும் கணக்கில் எடுக்காத நிலையில், மறுநாள் (09) காலையே காவல்துறையினருக்கு தெரியப்படுத்தப்பட்டதாகவும், பின் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட
போது குறித்த நபர் இறந்ததாகவும் மரண விசாரணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சடலம் உடற்கூற்று பரிசோதனைக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு பரிசோதனைகளின் பின் உறவினர்களிடம் சனிக்கிழமை(11) ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இக்கொலை தொடர்பாக மூவர் சந்தேகத்தின் நிமித்தம் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன், தலைமறைவாகிய ஒருவரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



ஞாயிறு, 11 டிசம்பர், 2022

மரண அறிவித்தல். திரு சரவணபவான் சதீஸ்குமார் (சதீஸ்),10.12.22

மண்ணில் --22-06-1972-விண்ணில் -10-12--2022.
யாழ் சிறுப்பிட்டி தெற்கு நீர்வேலியை பிறப்பிடமாகவும் சுவிஸ் Luzern மாநிலத்தில் வசித்து  வந்தவருமான சரவணபவான் சதீஸ்குமார் (சதீஸ் லூசெர்ன் சதீஸ் கடை முன்னாள் உரிமையாளர் ) அவர்கள்  10.12.2022 சனிக்கிழமை அன்று  சிறுப்பிட்டியில் இறைவனடிசேர்ந்தார்.அன்னார்,  சரவணபவான் தம்பதிகளின் அன்புமகனும் திருமதி கிருதா வின்(சுவிஸ் Luzern)  அன்புச் சகோதரனும்  ஆவர்  அன்னாரின் இறுதிக்கிரியை 11-12--2022. ஞாயிற்றுக்கிழமை அன்று 
 மு.ப 10:00 மணியிலிருந்து  12-00மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று .பின்னர் நீர்வேலி  இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்  இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
எமது நவற்கிரி நிலாவரை  இணையங்களின் 
கண்ணீர் அஞ்சலி அன்னாரின் பிரிவால்
 துயருறும் குடும்பத்தினருக்கு  
 ஆழ்ந்த அனுதாபங்களை 
தெரிவித்து கொள்ளுகின்றோம் ..
அன்னாரின் ..ஆத்மா சாந்தி அடைய 
இறைவனைப்பிராத்திக்கின்றோம் 
  ஓம் சாந்தி ! ஓம் சாந்தி  ஓம் சாந்தி

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>


சனி, 10 டிசம்பர், 2022

ஆந்திர பிரதேசத்தில் இளம் பெண்ணுக்கு நடந்த துயர சம்பவம்..எமது ஆழ்ந்த இரங்கல்

ஆந்திர பிரதேசத்தில் புகையிரதத்தில் இருந்து இறங்க முயன்ற போது தவறி விழுந்து புகையிரதத்திற்கும் நடைபாதைக்கும் இடையில் மாணவி சிக்கி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ள சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது.இச் சம்பவம் இந்திய மாநிலம் ஆந்திர பிரதேசத்தில் 
இடம் பெற்றுள்ளது.
மாணவியின் சிறுநீரகப் பைகள் கடுமையாக சேதமடைந்து ரத்தம் கசிந்துள்ளதோடு அவரது உடலில் உள் உறுப்புகள் பதிக்கப்பட்டு அவர் உயிரிழந்துள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.ஆந்திரப் பிரதேச மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டத்தின் அன்னவரம் பகுதியைச் சேர்ந்த கல்லூரியில் கல்வி கற்கும் மாணவி சசிகலா (20) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இவர் நாள்தோறும் தனது ஊரில் இருந்து கல்லூரிக்கு ரயில் மூலம் சென்று வந்துள்ளார்.புதன்கிழமை விசாகப்பட்டினம் மாவட்டத்தில் 
உள்ள துவ்வாடா ரயில் நிலையத்தில் குண்டூர் ராயகடா 
பாசஞ்சர் ரயிலில் 
பயணித்த மாணவி சசிகலா அதில் இருந்து கீழே இறங்க முயன்றுள்ளார்.அப்போது கால் தவறி விழுந்து மாணவியின் இடுப்பு பகுதி புகையிரத்திற்கும் நடைபாதைக்கும் இடையே சிக்கி உள்ளது.
இதனை கவனித்த புகையிரத பொலிஸார் மற்றும் சக பயணிகள் புகையிரதத்தை உடனடியாக நிறுத்தி இரண்டு மணி நேர போராட்டத்தின் பின்னர் நடைபாதையை உடைத்து மாணவியை மீட்டு அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.மேலும் மாணவியின் எதிர்பாராத மரணம் ஆந்திராவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



வெள்ளி, 9 டிசம்பர், 2022

இலங்கையில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாக இருவர் உயிரிழப்பு

நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலையினை தொடர்ந்து பல பிரதேசங்களில் ஏற்பட்டுள்ள மரங்கள் முறிவு மற்றும் கடும் காற்று காரணமாக பல்வேறு அனர்த்தங்கள் இடம்பெற்றுள்ளதுடன் இருவர் மரணமடைந்து மூவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் 
தெரிவித்தனர்.
நுவரெலியா பாக்சைட் பகுதியிலிருந்து ஹைபொரஸ்ட் பகுதிக்கு நேற்று (08)​ைசென்று கொண்டிருந்த முச்சக்கரவண்டியின் மீது வீதியோரம் இருந்த மரம் ஒன்று முறிந்து வீழ்ந்ததில் அதில் பயணஞ் செய்த ஒருவர் மரணமடைந்துள்ளதுடன் மேலும் மூவர் காயங்களுக்கு உள்ளாகி நுவரெலியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இவ்வாறு மரணமடைந்தவர் நுவரெலியா ஹைபொரஸ்ட் பகுதியைச் சேர்ந்த மயில்வாகனம் வயது 66 என அடையாளம் 
காணப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவத்தில் முச்சக்கர வண்டிக்கும் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது.
இதே வேளை உடபுஸ்ஸல்லாவை கலகடபாஹன 
கிராம சேவகர் பிரிவில் உள்ள வீடு ஒன்றின் மீது மரம் ஒன்று முறிந்து வீழ்ந்ததில் வீடு கடும் சேதத்திற்கு உள்ளாகியுள்ளதுடன் அதில் வசித்து வந்த நபர் ஒருவர் மரணமடைந்துள்ளார்.
இவ்வாறு மரணமடைந்தவர் வீரசிங்கலாகே ஹரிச்சந்திர ஆரியபால வயது 56 என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
சம்பவங்கள் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
சீரற்ற காலநிலையுடன் பல பகுதிகளுக்கு வீசிய காற்று காரணமாக பல வீடுகளின் கூரைகள் சேதமடைந்துள்ளமையும் 
குறிப்பிடத்தக்கது.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



வியாழன், 8 டிசம்பர், 2022

கரம்பனில் வீட்டின் மீது விழுந்ததில் வீட்டின் ஒரு பகுதி சேதமடைந்துள்ளது

யாழ்.ஊர்காவற்றுறை - கரம்பன் பகுதியில் வீட்டின் அருகில் நின்றிருந்த பனை மரம் முறிந்து வீட்டின் மீது விழுந்ததில் வீட்டின் ஒரு பகுதி சேதமடைந்துள்ளது.
"மண்டாஸ்” புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில் யாழ்.மாவட்டத்தில் மிதமான மழை மற்றும் அவ்வப்போது பலமாக காற்று வீசிவருகின்றது.
இந்நிலையிலேயே கரம்பன் பகுதியில் வீடொன்றின் மீது பனைமரம் முறிந்து விழுந்துள்ளது.
எனினும் உயிராபத்துக்கள் எற்படவில்லை எனவும், பனை மரம் விழுந்ததால் வீட்டின் ஒருபகுதி முற்றாக சேதமடைந்துள்ளதாகவும் 
கூறப்படுகின்றது.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



மீண்டும் அராஜகத்தை தொடங்குகிறதா தாலிபான் பொது வெளியில் மரண தண்டனை

கொலை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட ஒருவரை பொதுவெளியில் தூக்குலிட்டு, தாலிபான்கள் மரண தண்டனையை 
நிறைவேற்றியுள்ளனர். 
மேற்கு ஆப்கானிஸ்தான் பகுதியில் கொலை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட ஒருவருக்கு தலிபான் அரசு .08-12-2022.இன்று பொதுவெளியில் மரண தண்டனையை நிறைவேற்றியது என அதன் 
செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார். ஆப்கனின் மேற்கு ஃபரா மாகாணத்தில், 2017ஆம் ஆண்டு ஒருவரை கத்தியால் குத்திக் கொன்றதாக
 குற்றம் சாட்டப்பட்ட ஒருவருக்கு இன்ரு மரணதண்டனை நிறைவேற்றப்பட்டதாக தெரிகிறது.
இதனை தாலிபான் செய்தித் தொடர்பாளர் ஜபிஹுல்லா
 முஜாஹித் கூறினார் அறிவித்தார். இந்த அறிவிப்பின்போது, தாலிபன்களின் மூத்த அதிகாரிகள் கலந்து கொண்டனர். மேலும், கடந்தாண்டு ஆப்கானை கைப்பற்றிய தாலிபான், அதன்பின் முதல்முறையாக பொதுவெளியில் தூக்கு தண்டனை நிறைவேற்றியுள்ளது.
இந்த கொலை வழக்கு மூன்று நீதிமன்றங்களால் விசாரிக்கப்பட்டு தீர்ப்பு வழங்கப்பட்டது என்றும், தெற்கு காந்தஹார் மாகாணத்தைச் சேர்ந்த தாலிபனின் தலைவரால் இந்த தீர்ப்பு அங்கீகரிக்கப்பட்டதாகவும் தாலிபன் செய்தித்தொடர்பாளர் கூறினார். அந்த நபர் எப்படி தூக்கிலிடப்பட்டார் என்பது குறித்து அவர் எந்த தகவலும் அளிக்கவில்லை.
குற்றஞ்சாட்டப்பட்டவருக்கு மரணதண்டனை நிறைவேற்றப்பட்டபோது பல உயர்மட்ட தாலிபான் தலைவர்கள் கலந்துகொண்டதாக தெரிவிக்கப்பட்டது. இதில் தற்காலிக உள்துறை அமைச்சர் சிராஜுதீன் ஹக்கானி,
 மற்றும் துணைப் பிரதமர் அப்துல் கானி பரதார், நாட்டின் 
தலைமை நீதிபதி, வெளியுறவு அமைச்சர், கல்வி அமைச்சர் ஆகியோர் அடங்குவர்.
நாட்டின் உச்ச நீதிமன்றம், கொள்ளை மற்றும் பாலியல் தொழில் போன்ற குற்றங்களில் குற்றஞ்சாட்டப்பட்ட ஆண்கள் மற்றும் பெண்கள் மீது பகிரங்கமாக எச்சரிக்கை விடுவது சமீப காலங்களில் 
அதிகமாகியுள்ளது. இந்த எச்சரிக்கைகளுக்கு நடுவே இந்த தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. 1990களில் கொடுமையான 
ஆட்சியளித்த தாலிபான்கள், மீண்டும் அதே காலகட்டத்தை பின்பற்ற வாய்ப்புள்ளது என்பதை இந்த தூக்கு தண்டனை சம்பவம் எடுத்துக்காட்டாக அமைகிறது.
ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் அலுவலகத்தின் செய்தித் தொடர்பாளர் கடந்த மாதம் ஆப்கானிஸ்தானில் பொதுவெளியில் கசையடிகளை தண்டனயாக அளிப்பதை உடனடியாக நிறுத்துமாறு தாலிபான் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
தாலிபானின் உயர்மட்ட மத தலைவர் நவம்பரில் நீதிபதிகளைச் சந்தித்து, ஷரியா சட்டத்தின்படி தண்டனைகளை நிறைவேற்ற வேண்டும் என்று கூறியதாக தெரிகிறது. தாலிபான்களின் முந்தைய 1996-2001 ஆட்சியின்கீழ் பொதுவெளியில் அடித்தல் மற்றும் கல்லெறிதல், மரணதண்டனைகள் ஆகியவை நடந்தன.
இத்தகைய தண்டனைகள் பின்னர் அரிதாகிவிட்டன. தாலிபானுக்கு அடுத்து ஆப்கனில் ஆட்சிக்கு வந்த வெளிநாட்டு ஆதரவு அரசாங்கங்களால் இந்த தண்டனைகளை கடுமையாக எதிர்த்தன. இருப்பினும் மரண தண்டனை ஆப்கானிஸ்தானில் சட்டப்பூர்வமான ஒன்றாகவே 
இருந்து வருகிறது.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



புதன், 7 டிசம்பர், 2022

நாராந்தனை வடக்கில் தண்ணீர் வாளிக்குள் விழுந்த குழந்தை உயிரிழப்பு

யாழ் ஊர்காவற்துறை பகுதியில் குளியலறை தண்ணீர் வாளிக்குள் விழுந்த ஒன்றரை வயது குழந்தை உயிரிழந்துள்ளது.ஊர்காவற்துறை நாராந்தனை வடக்கை சேர்ந்த சபீசன் கென்சியால் எனும் ஒன்றரை வயது பெண்குழந்தையே உயிரிழந்துள்ளது.
04-12-2022.ஞாயிற்றுக்கிழமை பெற்றோர் வீட்டில் வழிப்பாட்டில் ஈடுபட்டிருந்த வேளை , விளையாடிக்கொண்டு இருந்துள்ளது.திடீரென குழந்தையை காணதமையால், பெற்றோர் தேடிய வேளை , குழந்தை குளியலறை தண்ணீர் வாளிக்குள் விழுந்த நிலையில் கண்டுள்ளனர்.
உடனே குழந்தையை மீட்டு , ஊர்காவற்துறை வைத்திய சாலையில் அனுமதித்தனர். அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்திய சாலைக்கு குழந்தை அனுப்பப்பட்டது.போதனா வைத்திய சாலையில் சிகிச்சை பெற்று வந்த குழந்தை சிகிச்சை பலனின்றி  06-12-2022.செவ்வாய்க்கிழமை அன்று உயிரிழந்துள்ளது.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>


செவ்வாய், 6 டிசம்பர், 2022

மரணஅறிவித்தல் அமரர் அன்னம்மா சபாபதி அவர்கள் 05.12.2022

தோற்றம்-07-03-1938-மறைவு-05.12.2022
யாழ். ஆவரங்காலைப் பிறப்பிடமாகவும், பத்தமேனி அச்சுவேலியை வதிவிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட அன்னம்மா சபாபதி அவர்கள் 05.12.2022 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்
செய்யப்படும்  இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
எமது நவற்கிரி நிலாவரை  இணையங்களின் 
கண்ணீர் அஞ்சலி அன்னாரின் பிரிவால்
 துயருறும் குடும்பத்தினருக்கு  
 ஆழ்ந்த அனுதாபங்களை 
தெரிவித்து கொள்ளுகின்றோம் ..
அன்னாரின் ..ஆத்மா சாந்தி அடைய 
இறைவனைப்பிராத்திக்கின்றோம் 
  ஓம் சாந்தி ! ஓம் சாந்தி  ஓம் சாந்தி

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



-வடையும் டீயும் சாப்பிட்டதற்கு யாழில் ஐபோனை அடகுவைத்த வெளிநாட்டு பயணி

யாழ்ப்பாணத்தில் வடையும் டீயும் சாப்பிட்டமைக்காக ,வெளிநாட்டு பயணி ஒருவர் உணவகத்தில் ஐபோன் அடகு வைத்த சுவாரசியமான சம்பவம் ஒன்று அண்மையில் பதிவாகியுள்ளதாக தெரியவருகின்றது.
வெளிநாட்டு பயணி ஒருவர் யாழ்ப்பாணம் நகர் புறத்தில் உள்ள உணவகம் ஒன்றுக்கு, உணவருந்த சென்றுள்ளார். குறித்த உணவகத்தில் வடையும் டீயும் சாப்பிட்டபின்னர் 170 ரூபா பில்லுக்கான பணத்தை 
செலுத்துவதற்கு சென்றுள்ளார்.
அங்கு அவர் 5000 ரூபா தாளை நீட்டியுள்ளார்.இதன் போது 170 ரூபாவுக்கு 5000 ரூபாவை மாற்றி கொடுப்பதற்கும் பணம் இல்லை என உணவக கசியர் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து சங்கடத்துக்கு உள்ளான வெளிநாட்டவர்,தன்னிடமிருந்த ஐபோனை உணவகத்தில் கொடுத்த பயணி பணத்துடன் வருகின்றேன் என கூறிவிட்டு சென்றுள்ளார்.
அதன்பின்னர் 30 நிமிடங்கள் கழித்து 170 ரூபா பணத்தை உணவகத்தில் கொடுத்து தனது ஐபோனை அவர் மீட்டுச்சென்றதாக
 கூறப்படுகின்றது.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



திங்கள், 5 டிசம்பர், 2022

நாட்டில் மனைவியை கொலை செய்து விட்டு கணவன் தற்கொலை

காலி - அக்மீமன, மடோல பிரதேசத்தில் மனைவியை கொலை செய்துவிட்டு கணவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவமொன்று
 இடம்பெற்றுள்ளது.
குடும்ப தகராறு காரணமாக இந்த கொலை நடந்துள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
கணவன் தனது மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்துவிட்டு, தானும் தூக்கிட்டு தற்கொலை செய்து 
கொண்டுள்ளார்.
மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ள பொலிஸார்
இந்த கொலைச் சம்பவம் இன்று (05) பிற்பகல் இடம்பெற்றுள்ளதுடன், உயிரிழந்த பெண்ணின் சடலம் வீட்டின் சமையலறையிலும், கணவரின் சடலம் வீட்டின் அறையொன்றிலும் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக அக்மீமன பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த தம்பதியினருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளமையும் 
தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பில் அக்மீமன பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>

ஞாயிறு, 4 டிசம்பர், 2022

கல்னேவ - ஹுரிகஸ்வெவவில் பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கிய சிறுமியின் பெரிய தந்தை கைது

அநுராதபுரம், கல்னேவ - ஹுரிகஸ்வெவ பிரதேசத்தில் 14 வயது சிறுமியொருவர் பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில், அச்சிறுமியின் பெரிய தந்தையை காவல்துறையினர் கைதுசெய்துள்ளனர்.
தமது மகள் பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாகியுள்ளதாக சிறுமியின் பெற்றோர்கள், ஹுரிகஸ்வெவ காவல்நிலையத்தில் முறைப்பாடு செய்ததை அடுத்து காவல்துறையினர் விசாரணைகளை 
ஆரம்பித்துள்ளனர்.
அந்த காவல்நிலையத்தின் சிறுவர் மற்றும் மகளிர் பணியகம், குற்றப் விசாரணைப் பிரிவினர் மற்றும் விசேட பணியக அதிகாரிகள் இணைந்து விசாரணைகளை மேற்கொண்டனர். இந்தக் குற்றத்தை புரிந்ததாக கருதப்படும் 60 வயதான சந்தேக நபர் 03-12-2022.அன்று  கைது 
செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபர் திருமண வாழ்க்கையிலிருந்து விலகியுள்ள சந்தேகநபர், நீண்ட நாட்களாக சிறுமியின் வீட்டில் தங்கியிருந்ததாக காவல்துறை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
குறித்த சிறுமியின் பெற்றோர் விவசாயத்திற்காக வீட்டிலிருந்து வெளியேறிய சந்தர்ப்பமொன்றில் சந்தேகநபரால் சிறுமி வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
இந்த சிறுமி சற்று உளநலம் பாதிக்கப்பட்டவர் எனவும் 
தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவரை மருத்துவ பரிசோதனைக்காக அநுராதபுரம் சட்ட வைத்திய அதிகாரியிடம் ஒப்படைப்பதற்கு காவல்துறையினர் 
ஏற்பாடு செய்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் இன்று (4) கெக்கிராவ மாவட்ட நீதவான் முன்னிலையில் பிரசன்னப்படுத்தப்படவுள்ளார்.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



சனி, 3 டிசம்பர், 2022

நாட்டில் விரைவாக அதிகரித்துவரும் புற்றுநோய்..மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை

நாடு முழுவதிலும் ஆண், பெண் இருபாலரிடையேயும் பெருங்குடல் புற்றுநோய் விகிதம் வேகமாக அதிகரித்து வருவதாக இலங்கை புற்றுநோயியல் நிபுணர்கள் கல்லூரி இன்று எச்சரிக்கை விடுத்துள்ளது.
இலங்கையில் வருடாந்தம் கண்டறியப்படும் புற்றுநோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது. 
ஆண், பெண் இருபாலருக்குமிடையே பெருங்குடல் புற்றுநோய், குடல் மற்றும் மலக்குடல் புற்றுநோய் அதிகரித்து வருகின்றது. 
இதற்குக் காரணம் மக்கள் கொழுப்புச் சத்துள்ள உணவுகளை உட்கொள்வதே முக்கிய காரணமாகும். தொடர்ந்து 
உடற்பயிற்சி செய்யத்
 தவறினால், அது உடல் பருமனுக்கு வழி வகுக்கிறது என இலங்கை புற்றுநோயியல் நிபுணர்கள் கல்லூரியின் தலைவரும், தேசிய புற்றுநோய் நிறுவனத்தின் ஆலோசகரும் மருத்துவ புற்றுநோயியல் நிபுணருமான வைத்தியர் நடராஜா ஜெயக்குமரன் 
தெரிவித்துள்ளார்.

நாட்டிலுள்ள ஆண் மக்களிடையே வாய்வழி புற்றுநோய்கள் மிகவும் பொதுவான வீரியம் மிக்க புற்றுநோயாகும். ஆண்களில் இரண்டாவது மிகவும் பொதுவானது நுரையீரல் புற்றுநோய் என 
கண்டறியப்பட்டுள்ளது.
மார்பக புற்றுநோயானது பெண்களிடையே மிகவும் பொதுவான புற்றுநோயாகும், அதைத் தொடர்ந்து தைராய்ட் புற்றுநோய் உள்ளது எனவும் அவர் தெரிவித்தார்.
இளைஞர்கள் அதிகளவில் நொறுக்குத் தீனிகளை உட்கொள்கின்றனர் மற்றும் அவர்கள் உடல் செயற்பாடுகளில் ஈடுபடுவது அரிது என்றும் வைத்தியர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நார்ச்சத்து நிறைந்த உணவுகள் மற்றும் பல வண்ண பழங்களை உட்கொள்வதன் முக்கியத்துவத்தையும் அவர் வலியுறுத்தியுள்ளார். அவை நம் ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும் எனவும் 
அவர் தெரிவித்தார்.
ஆரோக்கியமான வாழ்க்கை முறையை கடைப்பிடித்தால், குடலில் ஏற்படும் புற்றுநோய்களை தவிர்க்கலாம், என பொது மக்களுக்கு அவர் அறிவுறுத்தியுள்ளார்.


இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>


வெள்ளி, 2 டிசம்பர், 2022

நாட்டில் மாணவனின் அதீத திறமையால் தயாரிக்கப்பட்ட அதிநவீன பேருந்து

இலங்கையில் புதிய மாற்றத்தை ஏற்படுத்தும் வகையில் இலகுரக பேருந்து ஒன்றை கலகெடிஹேன சனிரோ நிறுவனம் 
தயாரித்துள்ளது.
கம்பஹா பண்டாரநாயக்க கல்லூரியின் கண்டுபிடிப்புப் பிரிவில் பணியாற்றிய முன்னாள் மாணவரான கனிஷ்க மாதவ என்பவரின் படைப்பாற்றலால் இந்த பேருந்து தயாரிக்கப்பட்டதாக சனிரோவின் தலைவர் 
நிலந்த தில்ருக் தெரிவித்தார்.
22 அடி நீளமும், 5 அடி 6 அங்குல அகலமும் கொண்ட இந்த பேருந்து 660 இன்ஜின் திறனை கொண்டுள்ளது.
அரசாங்கம் அனுரனை வழங்குமாயின் நாட்டிலேயே பேருந்து இயந்திரத்தை தயாரித்து உயர்தர பேருந்தை உற்பத்தி செய்ய முடியும் எனவும் நிறுவனத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்



வியாழன், 1 டிசம்பர், 2022

வெடிகுண்டு வெடித்து சிதறியதில் ஆப்கானிஸ்தானில் பள்ளியில் 19 மாணவர்கள் உயிரிழப்பு

ஆப்கானிஸ்தானின் வடக்கு சமங்கன் மாகாணத்தில் அய்பக் நகரில் உள்ள மதரசா பள்ளியில் திடீரென்று குண்டு வெடித்தது. அங்கு தொழுகை நடந்து கொண்டிருந்தபோது குண்டுவெடிப்பு 
நிகழ்த்தப்பட்டது. 
இதில் 19 மாணவர்கள் உடல் சிதறி பரிதாபமாக உயிரிழந்தனர். பலர் காயம் அடைந்தனர். அவர்களை மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். 
பலியானவர்களில் பெரும்பாலானோர் சிறுவர்கள். இந்த தாக்குதலுக்கு அமெரிக்கா- கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. 
அனைத்து ஆப்கானிஸ்தான் குழந்தைகளும் பயமின்றி பள்ளிக்கு செல்ல உரிமை உண்டு என்று அமெரிக்கா
 தெரிவித்துள்ளது. 
இத்தாக்குதலுக்கு உடனடியாக எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. கடந்த 2021ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சி அதிகாரத்தை ஏற்ற பிறகு ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பு அடிக்கடி
 தாக்குதல் நடத்தி வருகிறது. 

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>