siruppiddy

18

siruppiddy

unkal

unkal

திங்கள், 19 டிசம்பர், 2022

சாவகச்சேரியில் வியட்நாமில் உயிரிழந்த பொதுமகனின் உடலம் அடக்கம்

இலங்கையின் பொருளாதார நெருக்கடியினால் எதிலியாக  புறப்பட்டு, இடையில் முயற்சி பயனளிக்காமையால், உயிரை மாய்த்துக்கொண்ட யாழ் சாவகச்சேரி பொதுமகனின் உடலம், 19-12-2022.இன்று அவரது சொந்த ஊரில் அடக்கம் செய்யப்பட்டது.
வியட்நாமில் உயிரை மாய்த்துக் கொண்ட, யாழ் சாவகச்சேரியை சேர்ந்த சுந்தரலிங்கம் கிரிதரனின் உடலம் 19-12-2022.இன்று சாவகச்சேரியின்,  கண்ணாடிப்பிட்டி இந்து மயானத்தில் அடக்கம் 
செய்யப்பட்டது.
இலங்கையின் பொருளாதார நெருக்கடியை சமாளிக்கமுடியாமல், கடந்த நவம்பர் 8ஆம் திகதியன்று, கனடா செல்ல முற்பட்டிருந்த நிலையில் வியட்நாம் கடற்பரப்பில் 300க்கும் மேற்பட்ட இலங்கையர்களுடன் சென்ற மீன்பிடி படகு சேதமடைந்து, கவிழும் நிலைக்கு உள்ளானது.
இதன்போது அதில் இருந்த ஒருவர், இலங்கையின் கடற்படையுடன் தொடர்புக்கொண்டு உதவியை கோரியிருந்தார்.
இந்தநிலையில் ஜப்பானிய கடற்படை கப்பல் ஒன்று, குறித்த ஏதிலிகளை கையேற்று, பின்னர் அவர்களை வியட்நாம் கடற்படையினரிடம்
 கையளித்தது.
இதனையடுத்து குறித்த ஏதிலிகளை இலங்கைக்கு அனுப்புவதற்கான முயற்சிகளை வியட்நாம் அதிகாரிகள் மேற்கொண்டனர்.
இதனை குறித்த ஏதிலிகள் ஏற்றுக்கொள்ளாதநிலையில், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து இருவர் உயிரை மாய்த்துக் கொள்ள 
முயற்சித்தனர்.
அவர்கள் இருவரும், உடனடியாக வியட்நாமிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
எனினும், அவர்களில் ஒருவரான சாவகச்சேரியை சேர்ந்த சுந்தரலிங்கம் கிரிதரன்  சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இந்தநிலையில் உயிரிழந்தவரின் உடலத்தை நாட்டுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்குமாறு இலங்கை அரசாங்கம் உள்ளிட்ட பல தரப்பினரிடம் அவரது உறவினர்கள் கோரிக்கை 
விடுத்திருந்தனர்..
எனினும் இலங்கை அரசாங்கம், நிதியுதவி எதனையும் மேற்கொள்ளாத நிலையில் தனியாரே அதற்கான நிதியை வழங்கினர் என்று தகவல்கள்  வெளியாகியிருந்தன. 
இதனையடுத்து சுமார் ஒரு மாதத்தின் பின்னர் கிரிதரனின் உடலம் நேற்று முன்தினம் நாட்டுக்கு கொண்டு வரப்பட்டு யாழ்ப்பாணத்துக்கு கொண்டு செல்லப்பட்டது.
இதற்கிடையில், தொடர்ந்தும் வியட்நாமில் தங்க வைக்கப்பட்டுள்ள எஞ்சியுள்ள இலங்கை ஏதிலிகள் தொடர்ந்தும் தெளிவற்ற நிலையே
 தொடர்கிறது.
இதேவேளை இந்திய பெருங்கடல் பிரதேசத்தில் பிரித்தானியாவின் ஆளுகைக்குள் உள்ள  டீகோ கார்சியாவில் தங்க வைக்கப்பட்;டுள்ள இலங்கையின் ஏதிலிகளுக்கு ஏதிலி அந்தஸ்தை வழங்குவதற்கு பிரித்தானியா தொடர்ந்தும் மறுத்து வருகிறது.
எனினும் ருவண்டாவுடன் செய்துக்கொள்ளப்பட்டுள்ள உடன்படிக்கையின் கீழ் அவர்களை அங்கு குடியேற்றுவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில் அதற்கு எதிர்ப்பு வெளியிடப்பட்டு வருகிறது.
இதுஇவ்வாறிருக்க, அண்மையில் குறித்த ஏதிலிகளில் மூன்று பேர் மருத்துவ சிகிச்சைக்காக அண்மையில் ருவண்டாவுக்கு 
அனுப்பப்பட்டனர்.
எனினும் அவர்கள், மருத்துவ சிகிச்சையின் பின்னர், மீண்டும் டீகோ கார்சியாவுக்கு அழைத்து வரப்படுவர் என்று பிரித்தானியா நிர்வாகம் உறுதியளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>




0 கருத்துகள்:

கருத்துரையிடுக